பாதாம் அல்வா

தேவை:- பாதாம் பருப்பு 1/2கி.; சர்க்கரை 1கி.; பால் ஒரு டம்ளர்; நெய் 100கிம்; குங்குமப்பூ 3 தேக்கரண்டி.

செய்முறை:- பாதாம் பருப்பை இரவே ஊற வைத்து , மறு நாள் தோல் உறிக்கவும். குங்குமப் பூவைப் பாலில் ஊற வைக்கவும். மிக்ஸியில் பாலை ஊற்றி அதில் பாதாம் பருப்பைப் போட்டு அடித்துக் கொள்ளவும். அடிக் கனமான வாணலியில், நெய் ஊற்றிச் சூடானதும், பாதாம் கலவையைக் கொட்டவும். மிதமான வெப்பத்தில் கிளறி கொண்டே இருக்கவும். கெட்டிப் பதம் வந்ததும் இறக்கவும். பாதாம் அல்வா தயார். மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்.

Advertisements