வாழைத் தண்டு

1. ஒரு கிலோ அரிசியுடன் தலா 50 கிராம் வேர்க்கடலை, பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து வார்த்தால், சத்தான தோசை தயார்.

2. சாம்பாரில் காய்கறிகளுக்குப் பதில், முளை கட்டிய பட்டாணி, கொண்டக் கடலை , நிலக்கடலை சேர்த்தாலோ – சின்ன வெங்காயத்தை வதக்கி சாம்பாரில் போடுவதைவிட, அரைத்துக் கலந்தாலோ அதிக சுவை கிடைக்கும்.

3. வடைகளை சிறிது நேரம் வெந்நீரில் போட்டு ,எடுத்துப் பிழிந்து தயிரில் பரப்பினால், தயிர் வடை நன்கு உப்பி, கூடுதல் சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

4. வாழைத் தண்டு சமைக்கும் போது கருத்துப் போய் விடுகிறதே என்ற குறை எல்லோருக்குமே உண்டு. அப்படி ஆகாமல் இருக்க, முதலில் வாணலியை அடுப்பிலேற்றி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு , உளுத்தம் பருப்பு- கடலைப் பருப்பு தாளித்து , வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் முதலியவற்றைப் பொடியாக நறுக்கிப் போட்டு நன்கு வதக்கியதும், அடுப்பை ஸிம்மில் வைத்து வாழைத் தண்டை ஐந்து- ஐந்து பீஸாக நறுக்கிப் பொடியாக அறிந்து அடுப்பில் போட்டு , உப்பு போட்டு வைத்திக்கும் மோர்க் கரைசலை லேசாக ஊற்றி பிரட்ட வேண்டும். பிறகு இன்னும் ஐந்து பீஸைக் கட் பண்ணி, பொடியாக நறுக்கி அதேபோல வாணலியில் போட்டு, கொஞசம் மோர்க் கரைசலை ஊற்றிப் பிரட்ட வேண்டும். இப்படியே வாழைத் தண்டு மொத்தத்தையும் அறிந்து போட்டு அவ்வப்போது மோர்க் கரைசலையும் சேர்த்து , சேர்த்து வதக்கி சிறிது நேரம் அடுப்பை ஸிம்மில் வைத்து வேகவைத்து எடுத்தால் வெள்ளை வெளேரென்ற வாழைத் தண்டுப் பொறியல் கிடைக்கும் தேவைக்கேற்ப தேங்காய்ப்பூ சேர்த்துக் கொள்ளலாம். முக்கிய குறிப்பு என்னவென்றால், வாழைத் தண்டை அறிந்ததும் வேளியே வைக்காமல் வாணலியில் போட்டுவிட வேண்டும். மொத்தமாகவும் அறிந்து போடக் கூடாது. மொத்தமாக அறிந்து வெளியே இருப்பதால் காற்றிலுள்ள ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கருத்துவிடும். எனவே இப்படி கொஞ்சம் கொஞ்சமாகப் போடும் முறையினால், கருக்காது.

Advertisements