புடலங்காய் குணுக்கு

தேவை:-இட்லிமாவு ஒரு கப் ; கடலை மாவு 1/2 கப்; மிளகாய்த் தூள் 2 தேக்கரண்டி; பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி; புடலங்காய் பொடியாக நறுக்கியது 1/2கப்; கருவேப்பிலை சிறிது; பொரித்தெடுக்க எண்ணை; தேவைக்கேற்ப உப்பு. செய்முறை:- மாவில் எண்ணையைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும், சேர்த்து கலந்துகொள்ளவும். அடுப்பில் வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும், மாவை சிறு சிறு துண்டுகளாகக் கிள்ளிப் போட்டு, பொரித்தெடுக்கவும். இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

*****************

பச்சைப் பயறு பச்சடி

தேவை:- முளை கட்டிய பச்சைப் பயறு-100கிம்; தக்காளி4; பச்சை மிளகாய் 4 ; வெள்ளரிக்காய் 1; கொத்தமல்லித்தழை- கருவேப்பிலை சிறிதளவு; எண்ணை 1ஸ்பூன்; கடுகு, உளுத்தம்பருப்பு 1ஸ்பூன்; கெட்டித் தயிர் 1/4லிட்டர்; உப்பு 1/2ஸ்பூன்.

செய்முறை:-

பச்சைப் பயிறை முந்தின நாள் பகலில் ஊற வைத்து, இரவில் நீரை வடித்து ,மூடி வைத்து விடவும். மறு நாள் காலை ,பயறு முளைவிட்டு இருக்கும். தக்காளி, பச்சை மிளகாய், மல்லி -கரிவேப்பிலைஇவற்றைப் பொடியாக நறுக்கி, தயிறில் சேர்க்கவும். வெள்ளரியையும் தோல் நீக்கி துருவிப் போடவும்.பின்பு முளை விட்ட பயறு, உப்பையும் சேர்த்துக் கலக்கவும். எண்ணையில் கடுகு உளுத்தம் பருப்பு தாளித்துக் கொட்டவும். காரக் குழம்பு சாதம், உப்புமா, பொங்கல், பிஸிபேளாபாத், புலாவ் அனைத்திற்கும் ஏற்ற சூப்பர் சைட் டிஷ் இது. விட்டமின்,புரோட்டீன் அதிகம் உள்ளது. வளரும் குழந்தகளுக்கும் ,சக்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.

*****************

Advertisements