1. 80 ல் பிடிவாதம் உண்டாம்; 60க்கு கீழே குறைச்சுக்க மாட்டார்காளாம். ஆனால்” கை” உறுதியாம்!.கூட்டணி ஆட்சின்னு உறுதிப்படுத்தினாத்தான் தொண்டர்கள் சுறுசுறுப்படைவார்களாம்.
2. கலைஞர்- ராமதாஸ்சந்திப்பு கூட்டணிக்கு கட்டியம் கூறியது. சற்றுமுன் கூட்டணியும் உறுதியாகிவிட்டது.பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள்! உடன்பாடு கையெழுத்தாகியது.
3. இப்போது, ஜெ.வை இயக்குவது சோ, சுப்ரமணிய சாமி, மைத்ரேயன் என்ற மூவர் குழுவாம். அதனால், சசிகலா ரொம்ப அப்செட்டாம்.
4. போன முறை அழகிரி தரப்பும், தே.மு.தி.க.வும் கூடிப் பேசுவதைக் குறிப்பிட்டோம். இந்த விஷயத்தை அழகிரி கலைஞர்கிட்ட தெரிவிச்சபிறகும் கலைஞரிடமிருந்து எந்த ரீயாக்க்ஷனும் இல்லையாம்.இதற்கிடையில் விஜயகாந்த் தரப்பு துணை முதல்வர் ஸ்டாலின் தரப்பையும் சந்திச்சுப் பேசியிருக்காங்களாம். ஆனா இதுவரை எந்தப் பதிலும் வரலையாம்.
5. ஜெ. தரும் 31 சீட்டுக்கு பிடி கொடுக்காத தே.மு.தி.க. இன்னும் பலவித முயற்சிகளை மேற்கொள்வதை விடவில்லை. விஜயகாந்தின் மச்சான் சத்தீஷ் டெல்லிக்குப் போய் காங்கிரஸை மூவ் பண்ணிப் பார்த்ததாகவும் ஒரு செய்தி வந்தவண்ணம் உள்ளது. விஜயகாந்தை சி.எம். கேன்டிடேட்டா அறிவிக்கும் அளவுக்கு தே.மு.தி.க. வுக்கு ஓட்டுபலம் இல்லை என்பது காங்கிரஸின் கருத்தாக உள்ளதாம்.
6. எம்.ஜி.ஆர்.பிறந்த நாளான பிப்.17ம் தேதி கூட்டணியை அறிவிக்கலாம்னு நினச்ச ஜெ. , இப்ப தன்னோட பிறந்த நாளான பிப். 24க்குள் முடிவைச் சொல்லும்படி, விஜயகாந்த் தரப்புக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்.
7. எம்.பி.ஆகிறார்-ஹேமாமாலினி! மாநிலங்கள் அவை உறுப்பினர் தேர்தலில் ஹேமாமாலினியை நிறுத்த பா.ஜா.க. முடிவு.
***********************

Advertisements