சீன நண்டு பொறியல்

தேவை:- நண்டு 1/2கி;மைதா 2 கையளவு;சோளமாவு 1 கையளவு;உப்பு தேவையான அளவு; மிளகாய்த் தூள் 1ஸ்பூன்; சோயா ஸாஸ் 1ஸ்பூன்; எண்ணை பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-நண்டை சுத்தம் செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் துண்டாக்கிக் கொள்ளவும். மைதாமாவு, சோளமாவு, உப்பு, மிளகாய்த்தூள், சோயாஸாஸ் இவற்றை ஒன்றாகக் கலந்து, கெட்டியான கலவையாகத் தயார் செய்யவும். நண்டை இந்தக் கலவையில் புரட்டி, தனியாக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணை ஊற்றிக் காய்ந்ததும், மாவில் தோய்த்த நண்டைப் போட்டு, புரட்டி எடுக்கவும்.

***********

ஊட்டச்சத்து ஊத்தப்பம்

தேவை:-இட்லிமாவு ஒரு கப்; வெங்காயம்2; இஞ்சி விழுது 1/2ஸ்பூன்; பச்சை மிளகாய்2; பீன்ஸ்,கேரட், கோஸ், காலி ப்ளவர்(பொடியாக அரிந்தது) ஒரு கப்; பச்சைப் பட்டாணி 50 கிம்; எண்ணை 4ஸ்பூன்; இட்லி மிளகாய்ப் பொடி4 ஸ்பூன்.

செய்முறை:-ஒரு வாணலியில் எண்ண ஊற்றி கடுகு வெடிக்கவிட்டு, உடைத்த உளுத்தம் பருப்பு போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பிறகு பொடிப் பொடியாக அரிந்த வெங்காயம், இஞ்சி விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது தோலுரித்த பச்சைப் பட்டாணி ,அரிந்த காய்கள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். தோசைக்கல் அல்லது நான்ஸ்டிக் தவாவை நன்கு சுட வைத்து, அதில் எண்ணை ஊற்றி, கெட்டியான இட்லி மாவை ஊத்தப்பம்போல் ஊற்றவும். அதன்மேல் வதக்கிய காய்கறிக் கலவை மற்றும் இட்லி மிளகாய்ப் பொடியைப் பரவலாகப் பரப்பி, அதைச் சுற்றிலும் எண்ணை ஊற்றி ஒரு மூடி போட்டு மூடி வைத்து, அடுப்பை மெல்லிய தீயில் எரிய விடவும். மாவு வெந்ததும் காய்கறி ஊத்தப்பத்தை மெல்ல திருப்பிவிட்டு சுற்றிலும் எண்ணை ஊற்றி ஒரு மூடி போட்டு மூடி வைத்து அடுப்பை மெல்லிய தீயில் எரிய விடவும். மாவு வெந்ததும் காய்கறி ஊத்தப்பத்தை மெல்லத் திருப்பிவிட்டு சுற்றிலும் எண்ணை ஊற்றி வேக வைத்து இறக்கவும். உயர்ந்த ஊட்டச் சத்து நிறைந்த சூடான ஊத்தப்பம் தயார். குழந்தைகளுக்கு பச்சை மிளகாய் , இஞ்சி விழுது சேர்க்காமல், நெய்யில் ஊட்டச்சத்து ஊத்தப்பத்தை செய்து கொடுக்கலாம்.

************

Advertisements