1. மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் படிக்கட்டுகளில் ஏறும்போது, வலி இல்லாத காலை முதலில் எடுத்து வைத்து ஏற வேண்டும். இறங்கும்போது, வலிக்கும் காலை முதலில் எடுத்து வைத்து இறங்கவேண்டும். எப்போதும் பக்கவாட்டில் இருக்கும் கைப்பிடியைப் பிடித்துக் கொள்வது நல்லது.
2.உலகில் அதிக குற்றவாளிகளைக் கொண்ட நாடு அமெரிக்கா. அங்கு லட்சம் பேரில் 701பேர் குற்றவாளிகள், மிகக் குறைவான குற்றவாளிகளைக் கொண்ட நாடு இந்தியா. இங்கு லட்சத்துக்கு 29 பேரே குற்றவாளிகள். !
3. முட்டாள்கள் 6 ரகமாம். (1) நேற்று செய்த தவறைத் திருத்தாதவர்கள்.(2) வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னும் , யாராவது ஒருவர் இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள்.
(4 ) தேவையானபோது தன்னை மாற்றிகொள்ளத் துணிவு இல்லாதவர்கள். (5)அதிர்ஷ்டம் வரட்டும் என வெறுமனே காத்திருப்பவர்கள். (6) தேவை இல்லாமல் பணத்தை விரயம் செய்பவர்கள்.
4. இந்தியா- ஜப்பான் இடையிலான நட்புறவில் நடிகர் ரஜனியின் தமிழ் சினிமா பங்களிப்பு அளவிடற்கறியது. இவரது படங்களை ஜப்பானியர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். ஜப்பான் மட்டுமின்றி ,ஜெர்மனியிலும் ரசிகர்கள் உண்டு. ஜப்பானில் ”முத்து” சக்கைப்போடு போட்டதும், ஜெர்மனியில் ”சந்த்ரமுகி” வசூலை வாரிக் குவித்ததும் சர்வதேச சினிமா வரலாற்றில் , சரித்திர அத்தியாயங்கள்.

Advertisements