தேவையான பொருட்கள்:

கழுவி சுத்தம் செய்யப்பட்ட நண்டு:1/2கி

இஞ்சி விழுது-4tbsp

பூண்டு விழுது-2tbsp

நறுக்கிய பெரிய வெங்காயம்-2

வகுந்த பச்சை மிளகாய்-5

நறுக்கிய தக்காளி-4

அரைப்பதற்கு:

சோம்பு-1tbsp

சீரகம்-1tbsp

மிளகாய் தூள்-2tbsp

மல்லித்தூள்-1tbsp

மிளகு-1tbsp

முந்திரி-8-10

தேங்காய்-2-3கீற்று

வாசனைப் பொருட்கள்-தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.

எண்ணெய்,உப்பு-தேவையான அளவு.

செய்முறை:

இருப்பு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,சிறிதுசோம்பு போட்டு வெடித்தவுடன்,நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கவும்.பிறகு இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.அடுத்து தக்காளியை சேர்த்து  நன்குஎண்ணெய்பிரியும்வரைவதக்கவும்.பிறகுநண்டையும்,அரைத்து வைத்துள்ள மசாலாவையும் அதனுடன் சேர்த்து,வேக விடவும்.நண்டு நன்றாகவெந்து,எண்ணெய்பிரிந்தவுடன்,சிறிதளவுகறிவேப்பிலை,கொத்தமல்லி போட்டு இறக்கினால் சுவையான,மணமான செட்டிநாட்டு நண்டு வறுவல் ரெடி.


diet-b

படங்கள்:இணையம்

Advertisements