[stextbox id=”info”]இது நமது வாசக நண்பரும் முனைவருமான ப.ஜெயபால் அவர்கள் நமக்கு அனுப்பி வைத்த பதிவு[/stextbox]

அழகிய வண்ணம்

வண்ண வண்ண குடைகள்

வலம் வந்து கொண்டிருக்க

எனக்குப் பிடித்த அதே வண்ண குடையில்

நீ…..

அட என்ன ஆச்சர்யம்

நான் அணிந்துள்ள அதே வண்ண உடையில்

நீயும்…

கனவில் உன்னோடு நானும்

என்னோடு நீயும்

இதைப் பேசி வைத்துக் கொண்டு

செய்யவில்லையே !

வண்ண வண்ண கனவுகளை

சுமந்து கொண்டு உனது

அன்றாட வரவிற்காக காத்துகிடக்கிறேன்

நீயும் நாளும் வண்ணமாய்

காட்சித் தருகிறாய்

கண்களால் பேசுகிறாய்

ஆனால் ஒரு நாளேனும்

உனது பெயரையோ

உனது உதடுகள் உச்சரிக்கும் தாய்மொழியையோ

என் காதுகள் கேட்டதில்லை

இருந்தாலும்

நீ சிரிக்கும் போது சிதறும்

எச்சில் குமிழில் தெரியும்

வானவில்லிற்காக காத்துகிடக்கிறேன்

கடந்து செல்லும் நொடிகளில்

என்ன இருந்தாலும்

நீ என்னிடம் இப்படி சொல்லாமல்

சென்றிருக்கக்கூடாது

இப்பொழுதுபார்

இந்த வண்ணங்களெல்லாம்

வாய்விட்டு அழ தொடங்கிவிட்டன

எனை சூழ்ந்து கொண்டன கருமேகங்கள்

இன்னும் கொஞ்சநேரத்தில்

என்னோடு வானமும் அழும்…

எங்கும் வண்ணமயம்….

– ப. ஜெயபால்

[stextbox id=”alert”]

நீங்களும் உங்கள் படைப்புக்களை moonramkonam@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

[/stextbox]