1.அசின்!:-”எவ்வளவு பெரிய ஹீரோக்களின் படமாக இருந்தாலும், இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க மாட்டேன்” என்று பாலிவுட்டுக்கு அறிக்கை விட்டுள்ளார், அசின். அது மட்டுமின்றி படத்துக்குப் படம் கூலியை உயர்த்துவது, கிளாமரை அடக்கி வாசிப்பது உட்பட சில தனிப்பட்ட கொள்கைகளையும் கடைப் பிடித்துவரும் அசின், அடுத்து ‘ காவலன்’ இந்திப் படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Namitha நமிதா

2. நமீதா:- படையப்பாவில் ரம்யாகிருஷ்ணன் நடித்தது போன்ற அதிரடி வேடத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார் நமீதா. ‘இளைஞன்’ படத்தில் கவர்ச்சி கலந்த வில்லியாக நடித்த இவர், ”கமல் போன்ற நடிகர்களின் படங்களில் சிறிய ரோல் என்றாலும் என் மன திருப்திக்காக நடிக்க ஆசைப்படுகிறேன்” என்று சொல்லி அதற்கான முயற்சிகளிலும் இறங்கியுள்ளார்.

Naren

3. நரேன் :- ‘சித்திரம் பேசுதடி, ‘அஞ்சாதே’ படங்களில் நடித்த நரேன்” ‘தம்பிக்கோட்டை’ படத்திலிருந்து முழு ஆக்க்ஷன் ஹீரோவாகவே நடிப்பேன். ” என்று அடிதடி கதைகளுக்காக காத்திருக்கப் போவதாகக் கூறுகிறார்.

4. அஞ்சலி:- ” மூன்றாம்பிறை ஸ்ரீதேவி மாதிரி ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும்” என்று ஆசைப்படும் அஞ்சலி, இன்னுமொரு ஆசையையும் வெளிபடுத்துகிறார். ”எனக்குப் பின் வரும் நடிகைகள் அஞ்சலி நடித்த மாதிரியான வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடிய , யாருமே நடித்திராத, புதுமையான வேடங்களில் நிறைய நடிக்கவேண்டும் என்ற ஆசையும் உள்ளது என்கிறார். மேலும் கிளாமரும் காட்டத் தயார் என்கிறார்.

5. சமீபத்தில் மனைவியுடன் சஷ்டியப்தபூர்த்தியைக் கொண்டாடிய பாக்கியராஜ் ,துணை முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆசிபெற்று வந்திருக்கிறார்.

6. ”எந்திரனைவிட மன்மதன் அம்பு சுமாரான படம்தான்” என மாதவன் கொடுத்த பேட்டியில் கமல் தரப்பு ‘கடு கடு’ ரியாக்க்ஷ்ன் காட்ட கிடுகிடுத்து விட்டாராம் மாது.

7. அப்பாவின் அதிரடி அரசியல் ஆர்வத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவிக்கிறாராம் மகன். “தேரை இழுத்து தெருவில் விட்ட கதையாகப் போகுது” ன்னு தடை போடப் பார்க்கிறாம்.’ இவன் நல்லதுக்கு செய்வதைப் புரிஞ்சிக்க மாட்டேங்குறானே’ என்று புலம்பறாராம் அப்பா. புரியுதா யாரைச் சொல்றேன்னு? மேடையில் விஜய(ம்)ஆனால் தெரியப்போகுது இல்லையா?

**************

Advertisements