1.அல்லிராஜ்யம்:-

ஆப்பிரிக்க கண்டத்தில் ‘டுவாரக்’ என்ற பெயருடைய ஒரு கூட்டத்தினர் வாழ்கின்றனர். அவர்களில், பெண்களே தலைமை வகிக்கின்றனர். அவர்களே சண்டை புரிகின்றனர். அவர்களே ஆண்களைத் தேடி திருமணம் புரிகின்றனர். ஆண்கள் அனைவரும் தங்களை அழகுபடுத்திக் கொண்டு பெண்களைப் போல் வாழ்கின்றனர்.

2.உலகம் இளையோருக்காக உள்ளது. இளமையைப் பாராட்டிப் பேசினால் அது மேன்மை அடையும். வாலிபம் துக்கத்துடன் தொடர்பு கொள்வதில்லை. உலகில் பெருமையுள்ள செயல்கள் அனைத்தும இளைஞர்களாலேயே செய்யப்பட்டிருக்கின்றன.

3.”உலகின் மிக உயரமான உணவகம்” துபாயில் திறக்கபட்டிருக்கிறது. இது ‘அட்மாஸ்பியர் ரெஸ்டாரன்ட்’ என்று பெயரிடப்பட்டிருகின்றது. இதன் 122-வது மாடியில் அமைந்திருக்கும் உணவகத்தில் அமர்ந்து தேனீர் பருகிக்கொண்டே அரபு நாடுகளின் மொத்த அழகையும் ரசிக்கலாம். 422- மீட்டர் உயரத்தில் உள்ள ‘அட்மாஸ்பியரு’ க்கென தனி லிப்ட் வசதி உள்ளது. வானுயர்ந்த கட்டடத்தில் சொகுசாக அமர்ந்தபடி டின்னர் சப்பிட வேண்டும் என்றால், குறைந்தது 8000 ரூபாய் பில் கட்ட வேண்டும். டீ மட்டும் சாப்பிட விரும்பினால், 4500 ரூபாய் போதுமாம்!.

4.சீனாவின் மெகா நகரம்:-

சீனாவின் தெற்குப் பகுதியில் 9 நகரங்களை ஒன்றிணைத்து, உலகின் மெகா நகரத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது அந்நாட்டு அரசு. இந்த மெகா நகரின் மக்கள் தொகை 4 கோடியே 20 லட்சமாக இருக்குமாம். அதாவது வேல்ஸ் நகரைக் காட்டிலும் இரு மடங்கு. 9 நகரங்களை இணைப்பதற்காக 190 பில்லியன் பவுண்டுகள் செலவில் அடுத்த 10 ஆண்டுகளில் போக்குவரத்து, எரிசக்தி, குடிநீர், தொலைத் தொடர்பு என 150க்கும் மேற்பட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளன. தொழில் வளர்ச்சியைப் பரவலாக்கவும்,வேலைவாய்ப்புகளை விரிவு படுத்தவும் இந்தப் புதிய மெகா நகரம், உறுதுணை புரியும் என நம்புகிறது சீனா!

5. பிங்க் பைக் மங்கைகள்:-

போதைப் பொருள் கடத்தல் கும்பல்களால் பாதிக்கப்பட்ட மெக்ஸிகொ மக்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது, ‘பிங்க் மோட்டார் சைக்கிள்ஸ்’ மகளிர் குழு . ஆசிரியர்கள்,காவல்துறை அதிகாரிகள், வர்த்தகர்கள் முதலானோரை உள்ளடக்கிய 10 பேர் கொண்ட இந்தக் குழு, பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறது. தங்கள் வேலை நேரம் போக மற்ற நேரத்தில் பிங்க் கலர் பைக்குகளில் சென்று உதவி புரிந்து வருகிறார்கள். ஆபத்தான பகுதிகளுக்கும் செல்லத் தயங்குவதில்லை, இந்த மோட்டார் மங்கைகள் என்பதே ஹைலைட்!

**********

Advertisements