சிநேகா - சேரன் - திருமண சம்பிரதாயம்

சில சாஸ்திர  சம்பிரதாயங்கள்…

1.ஒரு குடும்பத்தில் திருமணம் நடந்த 6 மாதங்களுக்குள், அந்த குடும்பத்தார் காது குத்துதல், உப நயனம் செய்தல், புதுவீடு புகுதல், தீர்த்த யாத்திரை செல்லல் போன்றவற்றை செய்யாதிருப்பது நல்லது.

2. சீமந்தம், வளைகாப்பு, கர்ப்பதானம், தீட்சை, புது மருந்து உட்கொள்ளல், பயணம், திருமணம், போன்றவற்றை பிறந்த நட்சத்திரத்தில் செய்யக்கூடாது.

3. திருமண தேதி குறிக்கும்போது, அடுத்து வரும் முதல் 4 நாட்களுக்குள், அமாவாசை, பிதுர் திதிகள் வராதபடிக்கு குறிக்க வேண்டும். அப்படி வந்தால், மணப்பெண்ணுக்கு பல இடையூறுகள் வருமாம். பணவரவு போன்றவையும் தக்க நேரத்துக்கு கிடைக்காதாம். குழந்தைப் பேறு தள்ளிப் போகுமாம். வாழ் நாளில் கடைசிவரை இதே கதைதான் தொடருமாம்.

4. ஜன்ம நட்சத்திரத்தில், தேனிலவு, யாகம், உப நயனம், பூமி வாங்குதல், பள்ளிக்கு பாடம் படிக்கச் செல்லல் போன்றவற்றைச் செய்யலாம்.

5. விவகாரம் நிறைந்த செயல்களை சதுர்த்தி, நவமி , சதுர்த்தசி, செவ்வாய், சனி, அசுவனி, பரணி,கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், விசாகம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், போன்ற நாட்களில் ஆரம்பிக்கலாம்.
சுலபமாக நன்மைகள் பெறலாம்.

6. அக்னி நட்சத்திரத்தில், உப நயனம், விவாகம், சத்திரம் கட்டுதல் போன்றவை செய்யலாம். விதை விதைத்தல், மரத்தை வேரோடு வெட்டிச் சாய்த்தல், வீடு கட்டுதல், கிணறு தோண்டுதல், தீட்சை எடுத்தல், புதிதாக கிராமம் அமைத்தல், குளம்-குட்டை- தோட்டங்கள் உருவாக்குதல் கூடாது. புது வாகனம் வாங்குவதும் கூடாது. அதுவும் 1,8ல் முடியும் எண்கள் கூடாது.

7. ஜாதகத்தில் 8 ல் சூரியன் இருந்தால், அந்த ஜாதகர் தனிமையில் உயிர் பிரியும் தருவாயில் இருந்தால்,உயிர் பிரிய காலதாமதமாகும். இப்படிப்பட்டோரை ஒடும் நீர்ப் பகுதிக்கு அழைத்துச் சென்று அவர் கையால்,800 கிராம் கோதுமையை ஓடும் நீரில் தூவச் செய்யவேண்டும். கஷ்டங்கள் விடை கொடுக்கும்.

8. ஒருவருடைய உயிர் ,ரோகிணி, மிருகசிரீஷம், மகம், சித்திரை ஆகிய நட்சத்திரங்களில் பிரிந்தால், 1 மாதம் வீட்டை மூடிவிட வேண்டும். கிருத்திகை, புனர்பூசம், விசாகம் , உத்திராடம், ஆகிய நட்சத்திரங்களில் உயிர் பிரிந்தால், 6 மாதங்கள் அந்த வீட்டை மூடிவிடவேண்டும். அவிட்டம், சதயம், பூரட்டாதி, ரேவதி ஆகிய நடத்திரங்களில் உயிர் பிரிந்தால், 4 மாதங்கள் வீட்டைப் பூட்டிவிடவேண்டும்.

9. மேலே கூறியபடி வீட்டை மூட முடியாவிட்டால், அந்த வீட்டில் மாலை 5.30. மணிக்கு மேல் விடியும்வரை விளக்குகளை எரியவிடவேண்டும். இரவு 11. 00. மணிக்கு நவகிரக ஹோமம் செய்து, ஒருபாத்திரத்தில்,எண்ணைய் ஊற்றி, தானம் செய்தால், தோஷங்கள் அகன்றுவிடும்.

10. தந்தை இறந்து விட்டால் 1 வருடத்துக்கும், தாய் இறந்துவிட்டால், 6 மாதங்களுக்கும், மனைவி இறந்துவிட்டால், 1வருடம் 6 மாதத்துக்கும் சுப காரியங்களைத் தவிர்க்கவேண்டும்.

11. அஸ்வினி, சித்திரை, ஸ்வாதி, திருவோணம், சதயம், ரேவதி, ஆகிய நட்சத்திரங்களில் அசையா சொத்துக்கள் வாங்கலாம்.

12. கிணறு தோண்ட, அமைக்க, கரை கட்ட ஐப்பசி மாதம், நடு 10 நாட்கள் உத்தமம். உத்திராடம், உத்திரட்டாதி, கேட்டை, ரேவதி, சித்திரை, ரோகிணி, திருவோணம், அஸ்தம், மிருகசிரீஷம், பூராடம், ஆகிய நட்சத்திரங்களும், பஞ்சமி, சப்தமி, திருதியை, ஏகாதசி, திரியோதசி,பிரதமை ஆகிய திதிகளும், கும்பம், மீனம், மகரம், ரிஷபம், கடகம் ஆகிய லக்னங்களும் சிறந்தவை. சித்திரை மாதம் நடு 10 நாட்கள் உத்தமம்.

************

Advertisements