கிரிக்கெட் ஜோக்ஸ்

 

மனைவி : ஏங்க எந்நேரமும் இந்த டி வி யே கதியா இருக்கீங்களே… இப்படி தண்டமா பொழுது போக்கிட்டிருக்கீங்களே….

(ஒருவர் பக்கத்து வீட்டிலிருந்து எட்டிப் பார்த்து)

சார் ஸ்கோர் என்ன…

கணவன் : இப்பத்தான் மேட்ச் ஆரம்பிச்சுருக்கு… போக போகத்தான் சூடு பிடிக்கும்..!

 

————————

 

மேனேஜர் : நம்ம ஆஃபீஸ்ல குடி தண்ணியில ஏதாவது கிருமி இருக்குமோ…. இததன பேரு வைரல் ஃபீவர்னு லீவ் போட்டுருக்காங்க…

சூபர்வைசர் : ஆமாமாம்… அந்த வைரஸ் பேரு வர்ல்ட்கப் வைரஸ்

————————

 

ஏன் அந்த பேட்ஸ்மேன் பேட் உருண்டையா இருக்கு ?

எட்ஜ் வாங்கக்கூடாதுன்னு எட்ஜே இல்லாத பேட்டா எடுத்துட்டு வந்திருக்காரு…

 

——————————–

 

ஏன் அந்த பேட்ஸ்மேன் உள்ள வந்தோன்ன ஸ்டம்பை ப்ளாஸ்டிக் கவரால மூடுறாரு ?

“ஸ்டம்பை கவர் பண்ணி ஆடு” ன்னு கோச் சொன்னத தப்பா புரிஞ்சுக்கிட்டாரு…

 

——————————-

 

ஏம்பா? ஃபைனல்ஸ் அன்னிக்கு இந்தியாவுக்குத்தான் வர்ல்ட் கப்புன்னு எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்லுற?

ஆமாம் சார்… ஃபைனல்ஸ் அன்னிக்கு வரைக்கும் இந்தியாவுலதான் வர்ல்ஸ்ட் கப் இருக்கும்…. அதுக்கப்புறம்தான் ஜெயிக்குற டீம் அத தூக்கிட்டு போகும்!

 

——————————-

நிறைய விளம்பரத்துல நடிக்குற அந்த பேட்ஸ்மேன் ஏன் இப்பல்லாம் டக் அவுட் ஆயிடுறாரு?

30 செகஸ்ட் விளம்பரத்துல நடிச்சு நடிச்சு முப்பது செகண்டுக்கு மேல நிக்க முடியலயாம்…

———————–

ஏன் தர்ட் அம்பைர் கிட்ட போன அந்த ரன் அவுட் டிசிஷன் இவ்ளோ லேட் ஆகுது?

அவருக்கும் டவுட் வந்து ஃபோர்த் அம்பைர் கிட்ட போயிருக்காம்!

——————————–

எதுக்குய்யா நம்ம டைப்பிஸ்ட் மீரா நம்ம அசிஸ்டென்ட் மேனேஜரை அடிச்சிட்டா…

ஆமா… அவளே நேத்து தான் கல்யாணம் ஆகி ஃபர்ஸ்ட் நைட் முடிச்சிட்டு வந்திருக்கா… இவர் அவ கிட்ட போய் “ஏம்மா ஸ்கோர் என்ன?”  ன்னு கேட்டிருக்கார்… அவ பல்லக் கடிச்சிட்டு  “கம்மிதான்” ன்னு சொல்லியிருக்கா…இவர் அப்பயும் விடாம…”பிட்சு சரியா இருந்தாத்தான ஸ்கோர் பண்ண முடியும்”னு சொல்லியிருக்காரு… அறஞ்சுட்டா

———————-

 

 

 

Advertisements