சேண்டி ஆலன்

1.உலகப் பெண்மணிகளிலேயே , உயரத்தில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர் ‘ஷேண்டி அலன்’ என்பவர். 1976ல் கின்னஸில் இடம் பெற்ற இவரது உயரம் 7.7அடிகள். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் வளர்ந்துகொண்டே இருந்த இவர் தன்னுடைய 20 வது வயதில் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டதின் மூலம் தான் வளர்வதை நிறுத்திக் கொண்டார். அந்த அறுவை சிகிச்சை மட்டும் இல்லாமல் இருந்தால், கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு இவரது உயரம் எல்லையைத் தாண்டியிருக்கும்.

2. மேலே கூறிபிட்ட செய்திக்கு முற்றிலும் மாறாக ,அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கென்டங்கி மாகாணத்தில் வாழும் ‘ஸ்டேஸி ஹெரால்ட் ‘ என்பவர் மிகக் குள்ளமானவர். இவரது உயரம் 2 அடி 4 அங்குலம்தான். இவர் கர்ப்பமாகக் கூடாது, என்பது டாக்டர்களின் அறிவுரை. அப்படியிருந்தும், இவர்மீது இரக்கப்பட்டு இவரை ஒரு நல்ல மனிதர் திருமணம் செய்துகொண்டார். இவர் நான் ஒரு தாயாக வேண்டும் என்று ஆசைப்பட்டு, கர்ப்பமானார். ஆனால், எல்லோரும் ஆச்சரியப்பபடும்படி டாக்டர்களின் கணிப்புக்கு மாறாக, 2 ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றதோடு,இப்போது 3ம் முறையும் கர்ப்பமாகி இருக்கிறார். கடவுள் கருணையே வடிவானவர்.

3. மறுபடியும் உயரம் பற்றிய செய்திதான். உலகின் உயரமான மனிதர்கள் யார் தெரியுமா? நெதர்லாந்தைச் சேர்ந்த டச்சுக்காரர்கள் எனப்படுவோர். இவர்களின் சராசரி உயரமே 7 அடிமுதல் 7அடி 6 அங்குலமாகும். அதனால், 6 அடி நிலம்தான் அனைவருக்குமே சொந்தம் என்பது இவர்களுக்குத் தெரியாதோ…

Advertisements