விஜய்

 

1. விஜய்!:-திரையுலகில் ஹீரோவாக்கிய அப்பா, அரசியல் சிம்மாசனத்தில் ஏற்றிவிட மாட்டாரா? நடிகர் விஜய்யை அரசியலில் நுழைக்க தந்தை அரும்பாடு படுவது,பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. தந்தைக்கு, தி.மு.க. பிண்ணனி இருந்தாலும், ‘டஜன் கணக்கில் வாரிசுகள் உலவும் அந்தக் கட்சியில், ,வாரிசுகளையும், சீனியர்களையும் தாண்டி,விஜய், நீங்கள் குறி வைத்த இடத்தை அடைவது நடக்காத காரியம். அ.தி.மு.க. அப்படியில்லை. ஜெ.வுக்கு அடுத்த இடத்தில் ஸ்டார் வேல்யூ உள்ள யாருமே இல்லை. தக்க சமயத்தில் ,போட்டியே இல்லாமல், முதல் இடத்துக்கு, அதுவும் முதலமைச்சராக விஜய் வருவதை யாராலும் தடுக்க முடியாது.’ என்று அப்பா சந்திரசேகரனை ஏற்றிவிட்டிருக்கிறார்கள். அதன் விளைவே, மீனவர்கள் பிரச்சினையை விஜய் கையிலெடுத்துக்கொண்டது!. அது மட்டுமின்றி, ‘தி.மு.க.தோற்கணும்; அ.தி.மு.க. ஜெயிக்கணும். இதுவே என்னோட ஆசை! ‘ என்று சென்னையில் நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், விஜய் பேசியிருக்கிறார்.ஜெ. வுடன் போனிலும் பேசிவிட்டார். காலைத் தூக்கி அடுத்த அடி வைத்தால், அது அ.தி.மு.க. கூடாரம்தானே!

 

 

SARATKUMAR

2. சரத் குமார்!:-” என்னங்க, நீங்க, சிவப்பு எம்.ஜி.ஆர். இருக்கும்போது,அவரைப் போய், கருப்பு எம்.ஜி.ஆர். ங்குறாங்க? எந்தக் கட்சியில இருந்தாலும்,மேடையில கொஞ்சம் கூட சங்கோஜம் இல்லாமல்,’உன்னை அறிந்தால்,… நீ உன்னை அறிந்தால்,…உலகத்தில் போராடலாம்’ னு எம்.ஜி.ஆர். பாட்டுப் பாடி, உங்களை எம்.ஜி.ஆர். ரசிகன்னு பெருமையாச் சொல்வீங்களே. 59 வயசிலயும், எப்படி இருக்கீங்க! உங்களைவிட வயசு குறைச்சல் அவருக்கு. தோற்றத்துல அவரு எப்படி இருக்காரு, நீங்க எப்படி இருக்கீங்க! எம்.ஜி.ஆர். மாதிரி எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாம, உடம்பைக் கட்டுக்கோப்பா மெய்ன்டெய்ன் பண்ணிட்டு வர்றீங்க; நீங்க மட்டும் இறங்கி வந்து ரெட்டை இலைக்கு பிரச்சாரம் பண்ணுங்க.உங்க ஜாதி ஜனம் கூட உங்களைக் கை விட்டுடும்.ஆனா, எம்.ஜி.ஆர். ரசிகன் கைவிடமாட்டான். தி.மு.க.வுல இருந்தபோது, உங்களால ஒரு எம்.பி. ஆக முடிஞ்சுதா? ஆனா எங்க கட்சியில முதலமைச்சர் ஆகுறதெல்லாம்கூட ஒரு மேட்டரே இல்ல. ஓ.பி.எஸ். முதலமைச்சர் ஆகலையா? அவருக்கு நீங்க மட்டமா” ன்னு ஓவராகப் புகழ்ந்து தள்ள , சரத் குமாரும் கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்ச மாதிரி தெரியுது.

KARTHIK

3 கார்த்திக்:- புதிய பார்வை நடராஜன் போன்றவர்கள் கார்த்திக் மனதிலும் முதலமச்சர் ஆசையை விதைத்திருக்கிறார்கள். ”’புதிய தமிழகம்’ டாக்டர். கிருஷ்ணசாமிக்கு இருக்கிற மரியாதை, அ.டி.மு.க.வில் மூ.மு.க. சேதுராமனுக்கு நிச்சயம் இருக்காது. தினகரன் சிலர்கிட்ட ஜெ.வை கண்ட மேனிக்கு ஒருமையில திட்டியிருக்காரு. இனிமேல் அவர்ஜெ.வுக்குசரிப்படமாட்டார்.சின்னம்மா(சசிகலா)வுக்கு சப்போர்ட் பண்ண, நம்ம சொந்தக்காரன்னு சொல்லிக்க இப்ப கட்சியில யாரும் இல்ல. நீ வந்தா நம்ம சாதிக்காரங்களுக்கு ஒரு ஆறுதலா இருக்கும். எத்தனை காலத்துக்கு கட்சி ஜெ. கிட்டயே இருக்கும்? இந்த விஜய்காந்த் , வை.கோ., மாதிரி ஆட்கள் எல்லாம் கட்சிய கபளீகரம் செய்ய அலையுறப்போ …..நம்ம ஜாதிக்காரப் பய உனக்கு இல்லாத உரிமையா? பின்னால நீ முதலமைச்சர் ஆகமாட்டேன்னு சொல்ல முடியுமா? மக்களுக்குத் தேவை ஒரு மாஸ் லீடர் . அது நடிகரா இருக்கணும்னு எதிர்பாக்குறாங்க. அந்த நடிகர் நீயாகத்தான் இருக்க முடியும். ஏன்னா உனக்குத்தான் நம்ம ஜாதிக் கணக்கு பொருந்தி வருது.அம்மா சினிமாவை விட்டு விலகுற நேரத்துல உங்க அப்பா ஜோடியா நடிச்சாரு. அதனாலே மத்தவங்கல்லாம் சொல்ற மாதிரி நீயும் அவுங்கள ‘அம்மா’ன்னு சொல்லாதே. நல்லா இருக்காது. ‘அக்கா’ன்னு சொல்லு. ” இப்படி ஒரு கூட்டமே சேர்ந்து உருவேற்ற, நடிகர் கார்த்திக்கும், ‘ஜெ.என்னுடைய மூத்த சகோதரியாக்கும்; அவரது அன்பு தம்பியாக்கும் நான்.’ என்று மேடைகளில் முழங்க ஆரம்பித்திருக்கிறார். இரட்டை இலையில் எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு இலையில் இப்போது, கார்த்திக் சிரித்துக்கொண்டிருக்கிறார்.

4.கடைசியா, இதுக்கு எதிர்மறையா நான் ஒரு லிஸ்ட் தர்ரேன் பாருங்க. தாய்க்குலத்தை , தன்னுடைய உணர்ச்சி மிகுந்த நடிப்பால் கண்ணீரில் மூழ்கவைத்த சிவாஜி கணேசனே கட்சி தொடங்கி, தொடர்ந்து நடத்த முடியாமல் போனார். தன்னுடைய கலை உலக வாரிசு என்று எம்.ஜி.ஆர். அறிவித்த பாக்கியராஜின் கட்சியின் பெயரை அவரே மறந்திருப்பார். இன்று வரை அஷ்டாவதானி விஜய.டி. ராஜேந்தர் ஒற்றை ஆளாகத்தான் அவரது லட்சியக் கட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். ஆனானப்பட்ட சிரஞ்சீவியே தனது ‘ராஜ்ஜியத்தை’ காங்கிரஸின் காலடியில் போட்டார். கண் முன்னே இப்படி எத்தனையோ உதாரணங்கள் இருந்தும், முதலமைச்சர் கனவு சில நடிகர்களுக்குப் பிடித்தமானதாகவே இருக்கிறது.

RAJINIKANTH

5.யாருமே ‘ கட்சியும் வேணா(ம்); ஒரு கொடியும் வேணா(ம்). என்றுபாடிவிட்டு, தேர்தல் சமயங்களில் ‘அவுட் டோர்’ ருக்குப் பறந்துவிடும், நடிகர் ரஜினிகாந்த்தைப் பின்பற்றுவதில்லை.டாங்கு…டக்கர … டக்கர …. டக்கர…..?..!..?.!

 

Advertisements