ஜோதிகா

1. ஜோதிகா திரும்பவும் நடிக்க வருவாரா? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விடையளிக்கிறார், சூர்யா. ஒரு ரசிகனா அவரோட ஆசையும் அதுதானாம். தற்போது, ஒரு விளம்பரப் படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறாராம். கூடிய சீக்கிரம் வெள்ளித் திரையிலும் பார்க்க முடியுமாம்.

ஜெனிஃபர் கோட்வால்

2. பாலிவுட், கோலிவுட், சாண்டல்வுட் என்று ரவுண்டு கட்டி அடிக்கும் ,மும்பை ஹீரோயின் ஜெனிஃபர் கோத்வால்,கன்னடத்தில் ஷிவ்ராஜ் குமாரோட நடிச்ச’ஜோகி’ செம ஹிட்டாம். பாலிவுட்ல 3 படங்கள் பண்ணினாராம். அப்பப்ப தெலுங்குப் படங்களும் உண்டாம். தமிழில் நல்ல ஸ்க்ரிப்ட் இருக்கான்னு பாக்குறாராம். ஜூனியர் என்.டி.ஆர். ருடன், இவரை இணைத்து வந்தது பொய்யான கிசுகிசுவாம். ரஜினியின் தீவிர ரசிகையாம்.அவரோட படத்தைத்தான் பெட் ரூமில் மாட்டி வச்சிருக்காராம்.

ரீமா சென்

3. ரீமா சென்னுக்கு கல்யாணமாம். நீண்ட கால நண்பரான, மும்பைத் தொழிலதிபர் ஷிவ்வை மணக்கிறாராம்.

அனுஷ்கா

4. இந்த வருடம், அனுஷ்காவின் டைரி ஃபுல்லாம். ரஜனியுடன் ‘ராணா’ ,கமலுடன், ‘தலைவன் இருக்கின்றான்’ ,சிம்புவுடன் ‘வானம்’, அஜீத்துடன் ‘பில்லா 2’ ,விக்ரமுடன் ‘பிதா’ என அனுஷ்கா ஜொலிக்கிறாராம்.

5. இந்த வருட கலைமாமணி விருது விழாவின்போது,விருது வாங்கிய நட்சத்திரங்களான ஆர்யா,அனுஷ்கா, தமன்னா முதலியோர், பாதி நிகழ்ச்சியிலேயே அரங்கை விட்டு வெளியேர, முதல்வர் ரொம்ப வருத்தப்பட்டு, குஷ்புவிடம், அதைச் சொன்னாராம்.

சனுஷா

6. ‘ரேனிகுண்டா’ வில், ஹீரோயினா நடிக்கும் சனுஷா, 11ம் வகுப்பு மாணவியாம். 15 நாள் படிப்பு, 15 நாள் நடிப்பு என்று பரபரப்பாக இருக்கும் இவர், கிண்டர் கார்டன் படிக்கும்போதே நடிக்க ஆரம்பிச்சுட்டாராம். மம்மூட்டி, லால் ஜெயராம், திலீப் முதலிய நடிகர்களோடு நடித்ததில் ஏகப்பட்ட பெருமை! ‘காழ்ச்சா’ படத்துக்காக கேரள அரசின் ‘சிறந்த குழந்தை நட்சத்திரம்’ விருது கிடைத்ததாம். இவருடைய பாய் ஃப்ரண்ட், ‘அனுப்’ என்னும் ஃபர்ஸ்ட் ஸ்டேண்டேர்ட் படிக்கும், இவருடைய தம்பியாம்.

Advertisements