ஷ்ரயா

 

எழுத்தாளர் ருஷ்டியின் ‘மிட்னைட் சில்ரன்’ நாவலைத் தழுவி இயக்குனர் தீபா மேத்தா எடுக்கும்,ஆங்கிலப் படத்தின் நாயகி நம்ம ஊர் ‘ஸ்ரேயா’ வாம். விரைவில் ருஷ்டியைச் சந்திக்கப் போகிறாராம்.

 

 

இலியானா - ராணா

நடிகை இலியானாவுக்கு தொழில் அதிபர் ஆக ஆசையாம். ஐதராபாத்தில், ஆடை வியாபாரத்தைத் தொடங்கியிருக்கிறாம். ஆடைகளின் வடிவமைப்பாளர், திரைப் படத்தில் இவரது ஆடைகளை வடிவமைக்கும், இவரது தாயாராம். அந்த நிறுவனத்தின் பெயரும், “இலியானா’வாம். அடுத்து ஓட்டல் துறையில் கால் பதிக்கப் போகிறார்ம், இலியானா.

 

 

karthika- rada's daughter - ராதாவின் பெண் - கார்த்திகா

நடிகை ராதாவோட பொண்ணு கார்த்திகா மூணு மொழிகள்ல நடிக்குதாம். ஆனா, படிப்பிலும் படுசுட்டியாம்.லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்ல பேச்சுலர் டிகிரி படிப்பாம். கார்த்து ….படு சமத்து!

 

பதினோராம் தேதி வெளியாகவேண்டிய, ‘நடு நிசி நாய்கள்’ ஒரு வாரம் தள்ளி ரிலீஸாம். அதுக்கு ஒருவாரம் முந்திதான் ‘தூங்கா நகரம்’மும், ‘யுத்தம் செய்’யும் ரிலீஸாகியிருப்பதால் அதுகளோட ஓட்டத்துக்காகத்தான் இந்த இடைவெளியாம்.

 

கரண் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவினாலும், கரணோ சம்பள விஷயத்தில் ரொம்பக் கறாராக இருக்கிறாராம். ‘ சூரன்’ படத்தில் 10 லட்ச ரூபாய் சம்பள பாக்கி. அதனால், டப்பிங் வரமாட்டேன் என பிடிவாதமாகச் சொல்லி வருகிறாராம்.

 

sneha - சிநேகா

சிநேகா, கண்தானம் செய்திருக்கிறார். ‘இறந்தபின்னும் வாழலாம்’ என்கிறார். பின்பற்றுங்களேன்!

 

பிரகாஷ்ராஜ், லலிதகுமாரியை விவாகரத்து செய்துவிட்டு, புது மனைவி போனிவர்மாவைப் பார்ட்னராக்கி ”ஸைலண்ட் மூவிஸ்’ நிறுவனத்தைத் தொடங்கி, ‘பயணம்’ என்ற படத்தைத் தயாரித்தார். ஆனால், ஃபைநான்ஸ் பிரச்சினையால், படம் வெளியாகத் தடை வந்தபோது,ஓடிவந்து உதவியவர், வேறு யாருமல்ல. லலிதகுமாரிதான். 50 லட்சம் பெறுமானமுள்ள டாக்குமெண்ட்ஸைக் கோர்ட்டில் கொடுத்து, படம் வெளிவர உதவியிருக்கிறார்.கணவனால் உதறப்பட்ட பிறகும் செய்த உதவி!.

 

‘பழனியப்பா கல்லூரி’ மது ஷாலினி, வாய்ப்பில்லாமல், டல்லடித்துக் கிடந்தவர், இப்போதுதான் ‘பதினாறு’ படத்தில் நடித்தார். ரசிகர்களுக்குப் பிடித்துப் போனது. விளைவு…’அவன் இவன்’ படத்தில் ஒரு நாயகியாக நடித்து முடித்திருக்கிறாராம். இந்தப் படம் ரிலீஸானால், மதுவுக்கு கிராக்கி உண்டாகுமாம்.

 

20007ல் இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிந்தூரா ‘திகில்’ என்ற படத்தில் சி.பி.ஐ. அதிகாரியாக வருகிறார். படத்தில் இவருக்கு ஜோடி இல்லை.

 

வானம்- சிம்பு - அனுஷ்கா - பரத்

வானம்’ படத்தில், சிலம்பரசன்-பரத் இணைந்து நடிக்கிறார்கள்.படத்தில் மொத்தம் 6 பாடல்கள். 2 பாடல்களை சிலம்பரசன் சொந்தக் குரலில் பாடியிருக்கிறார்.

 

Sruthi Hasan - Kamal Hasan

இந்தியிலும், தெலுங்கிலும் ரிலீஸான படங்கள்ல நல்ல வரவேற்பைப் பெற்ற ஸ்ருதிஹாசன், இப்போது ‘ஏழாம் அறிவு’ ங்குற தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். இது இவரது முதல் தமிழ்ப் படமாம். சூர்யாவின் நடிப்பு இவரது நடிப்பை மேம்படுத்திக்க உதவுதாம். நடிகர் சித்தார்த்துக்கும், இவருக்கும் காதல் என்ற செய்தியை மறுக்கிறார். அவர் எனக்கு தெலுங்கு மொழியைத் தெரிஞ்சுக்க உதவி செஞ்சார் . அவ்வளவுதான். அப்படித்தான், இந்தியில் நடிக்கும்போது, மிதுன் எனக்கு இந்தி கத்துக்க உதவி செஞ்சார். இதையெல்லாம் காதல்னு சொல்லிடுறதா? நான் விமானத்தில் பறந்துகிட்டோ, சாலைகளில் விரைந்துகொண்டோ, நடிப்பு, இசைன்னு ஓடிக்கிட்டே இருக்கேன். காதலுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை. காதல் வந்தால் அதை ஒளிச்சு வைக்கமாட்டேன். என்கிறார், ஸ்ருதிஹாசன்.

Advertisements