மேஷம்:-

இந்த மாதம் நல்ல பலன்களாகவே நிகழும்.தொட்டது துலங்கும். நினைத்தது நினைத்தபடி நடக்கும். செய்தொழிலில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு தொழில் ரீதியாக இடமாற்றம் ஏற்படும். அந்த இடமாற்றமும் விரும்பியதாகவே இருக்கும். எதிர்பார்க்கிற இடங்களிலிருந்து நல்ல செய்திகள் , மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். மேலும், உங்களது நீண்ட நாளைய எதிர்பார்ப்புகள் இந்த மாதம் நிறைவேறுவதற்கும், நீண்ட நாளைய முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவும் நல்ல வாய்ப்பிருக்கிறது. தன லாபம் கிடைக்கும். புத்திரர்கள் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள், விருத்தி அடையும். சொல்வாக்கு, செல்வாக்கு, அந்தஸ்து, கௌரவம் மேன்மை அடையும். சிலருக்கு கௌரவப் பட்டங்கள், பதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. புத்திசாலித்தனம் மேலோங்கும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். கடன்கள் கட்டுக்குள்ளிருக்கும். எதிரிகளின் பலம் குறையும். கணவன் மனைவியரிடையே சிறுசிறு பிரச்சினைகள், ஏற்பட்டாலும், அன்புக்குக் குறைவிருக்காது. தகப்பனார் ,பல வழிகளில் ஆலோசனை தந்து உதவுவார். மூத்த சகோதரர்கள் வழியில் பிரச்சினை வந்து விலகும். அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் ஏற்படலாம். உடல் நலத்தில் காணப்பட்ட குறைபாடுகள் நீங்கி , நல்ல ஆரோக்கிய்ம் ஏற்படும். அரசாங்கத்திலிருந்து ஆக வேண்டிய காரியம் எதுவானாலும் உடனுக்குடன் நடந்து முடியும். அரசாங்கத்திலிருந்து வரவேண்டிய பணமும் வந்து சேரும். வேலை தேடும் நபர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கவும்,வெளி நாட்டுத் தொடர்பு ஏற்பட்டு, கூட்டுத்தொழில் ஆரம்பிக்கவும், வாய்ப்பிருக்கு. கடன் இருந்தால் அடையும். வர வேண்டிய பணம் வரும். ரொம்ப நாளா இழுத்துட்டே இருந்த, ஒரு முக்கிய சமாச்சாரம், இந்த மாதம் நல்லபடியா, மகிழ்ச்சியா ந டந்து முடியும். மேலும், இந்த மாதம் உங்கள் கையில் நல்ல பணப் புழக்கம் காணப்படும். வீட்டுக்குத் தேவையான புதிய, விலை உயர்ந்த பொருட்கள், வீடு வந்து சேரும். மாதத்தின் பிற்பகுதியில் சில பிரச்சினைகள் வந்து சேரவும் வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். வியாபாரம் மந்தமாகும்.வருமானம் சிக்கலாகும். மாணவர்கள் படிப்பில் மந்த நிலை ஏற்படும். கொஞ்சம் விரயச் செலவுகள் ஏற்படும். தாயின் உடல் நிலையில் சிறிது கவனம் தேவை. தாயின் வழியில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். மனக் குழப்பத்தைத் தவிர்த்து நன்கு யோசித்து செயல்பட்டால் நல்ல முன்னேற்றங்களைக் காணலாம். 23,24,25 தேதிகளில் சந்திராஷ்டமம். புது முயசிகளைத் தவிக்கவும்.

 

ரிஷபம்:-

இந்த மாதம் எதிரிகளின் பலம் குறையும். தகப்பனாரின் துணை கொண்டு, மறைமுக எதிரிகளை வீழ்த்துவீர்கள். தகப்பனாரின் சொல்லுக்கு அதிக மதிப்பளிப்பீர்கள். இந்த மாதம், உங்களுக்கு வாக்கு வன்மை அதிகரிக்கும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் அதிக மதிப்பளிப்பார்கள். இருந்தாலும், பொது இடங்களில் சிறிது, யோசித்துப் பேசுவது நல்லது. பிள்ளைகளின் போக்கைக் கண்காணித்து, அவர்களை உங்கள் வழிக்குக் கொண்டு வருவீர்கள். அரசுக் கடன்களை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு, கடன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். சிலருக்குத் தொழில் சம்பநதப்பட்ட இட மாற்றம் ஏற்படும். லாபமும் ,வங்கி சேமிப்பும் அதிகரிக்கும். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசுத் துறையில் வேலை செய்பவர்களுக்கு, பதவி உயர்வுகள் கிடைக்கும். தாய் மற்றும், தாய் வழி உறவினர்களால், நன்மைகள் ஏற்படும். விவசாயிகளுக்கு வளர்ப்புப் பிராணிகளால், லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கொடுக்கல்-வாங்கலில் அபிவிருத்தி ஏற்படும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்ககை ஏற்படும். பூர்வீகச் சொத்து கைக்கு வந்து சேரும். ரொம்ப நாளா நடக்காம இருந்த ஒரு காரியம் இப்போது நடந்து முடிஞ்சிடும். சிலருக்கு திடீரென்று வெளி நாட்டுப் பயணம் ஏற்படும். அந்தப் பயணத்தால் நன்மை ஏற்படும். புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகமும் இந்த மாதம் வந்து சேரும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாயிடும். அரசாங்கத்திலிருந்து ஆகவேண்டிய காரியம் எதுவானாலும் உடனுக்குடன் நடந்து முடிஞ்சிடும். இந்த மாதத்தில் உறவினர்கள், நண்பர்கள் மூலமும் நன்மை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வான மாதமிது. எதிபார்த்த அத்தனையும் கிடைக்கும். சில சமயங்களில் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினகள் ஏற்பட்டு விலகும். செய்தொழில் வியாபாரம் சக்கைப்போடு போடும். மாணவர்கள் படிப்பில் தடை ஏற்படும். அதிகம் உழைத்தால் முன்னேற்றம் காணலாம்.25,26,27 தேதிகளில் சந்திராஷ்டமம். புது முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

 

மிதுனம்:-

இந்த மாதம் எல்லா சமாச்சாரங்களும், இழுபறியாத்தான் இருக்குது.உடல் நலத்தில் மிகமிக கவனம் தேவை.வைத்திய செலவுகளைத் தவிர்க்க முடியாமல் போகும். தாயாரின் உடல் நலமும் கவலை கொடுக்கும். இந்த மாத முற்பகுதி கிரக நிலைகள் சாதகமாக இல்லாததனால்,தேவையில்லாத பிரச்சினைகள்,அனாவசிய தொந்தரவுகள், வீண்வம்புகள் உங்களைத் தேடிவந்து டென்ஷனாக்கும். வெற்றி உத்தரவாதமிலலைங்குறதனாலே, அடக்கித்தான் வாசிக்கணும். இந்த மாதம் அலைச்சல் மிகுந்து காணப்படும். பிள்ளைகளின் மூலம் சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும்,அன்பு மிகுந்திருப்பதால், பெரிய பாதிப்பு ஏற்படாது. நண்பர்களால் பிரச்சினை ஏற்படும். தகப்பனார் வழிச் சொத்துக்களால், வம்பு வழக்குகள்தான் வந்து சேரும். உடல் சோர்வு, மனச் சோர்வு ஏற்படும். தொழில் சம்பந்தமாக வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். வெளியூரிலேயே தங்கிக் கூட தொழிலைக் கவனிக்கவேண்டிவரும். தொழிலாளர்களிடம் மென்மையான போக்கைக் கடைப் பிடித்தால் தொழில் தடையின்றி நடைபெறும். கொடுத்த கடன் வசூலாவதில் தாமதம் ஏற்படும். இளைய சகோதரர்களுடன் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும்,அவற்றை அனுகூலமாக மாற்றிக் கொள்ளவும் முடியும். மாணவர்கள் படிப்பில் அதிக முயற்சி எடுக்கவேண்டியிருக்கும். ஆசிரியரின் அறிவுரைப்படி நடந்தால்தான் படிப்பில் முன்னேற்றம் காணமுடியும். பெண்ளுக்கு வேளைப்பளு அதிகரிக்கும்.வியாபாரிகளுக்கு வியாபாரத்திதில் குழப்பமான சூழ்நிலை ஏற்படும். பொது வாழ்வில் இருப்பவர்கள், முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதைத் தவிர்க்கவேண்டும். பதவிகள் பெறுவதற்கு அதிக முயற்சி எடுக்கவேண்டியிருக்கும். வண்டிவாகனத்தில் செல்லும்போது மிகவும் எச்சரிக்கை அவசியம். வாகனம் ரிப்பேர் செலவு வைக்கவும் வாய்ப்பிருக்கிறது. எந்த சமாச்சாரமும் இழுபறியாத்தான் இருக்கும். எதைத் தொட்டாலும், முழுசா முடிவடையாமல்,பாதியில் நின்னு கழுத்தறுக்கும். ஜான் ஏறினா முழம் வழுக்கும் .உத்தியோகத்தில் ஏதாவது பிரச்சினை வருவதற்கும்,அடிக்கடி லீவு எடுக்கவும் நேரும். தேவையற்ற இட மாற்றங்களும் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இது சோதனையான மாதம்.கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை அவசியம். நாணயக் குறைவு ஏற்படும். இத்தனை கஷ்டங்களும், மாதப் பிற்பகுதியில் மாறும். முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். நல்ல செய்திகள் வரும். புதிய தொழில் ஆரம்பிக்கவும், இருக்கும் தொழிலை விருத்தி செய்துகொள்ளவும் சந்தர்ப்பம்,ஏற்படும். பெண்களால் நன்மைகள் ஏற்படும். மனைவி மற்றும், மனைவி வழி உறவினர்களால் உதவி கிடைக்கும். மொத்தத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மாதம். அப்போதுதான், உத்தியோகத்தில் ஏற்படும் பிரச்சினைகள்,வியாபாரத்தின் மந்த நிலை,மற்றும் பலவித குழப்பங்கள் ஆகியவற்றை சமாளிக்க முடியும்.இந்த மாதம் 1,2,28,29,30 ஆகிய தேதிகளில் சந்த்ராஷ்டமம். இந்த நாட்களில், புதிய முயற்சிகளையும், வெளியூர்ப் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.

கடகம்:-

இந்த மாத கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்ததும், எதிர்பார்க்காத அளவிலும்கூட நற்பயன்கள் ஏற்பட சான்ஸ் உண்டு. மேலும், நீண்ட நாளைய எதிர்பார்ப்புகள்கூட நிறைவேறும். நீண்ட நாளைய கனவு ஒண்ணு நனவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம்.வாழ்க்கையில் நல்லதொரு திருப்புமுனை ஏற்படுவதற்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. உத்தியோகத்தில் உள்ளவங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உயர்வு கண்டிப்பாக வந்தே தீரும். வேயில்லாதவங்களுக்கு வேலை கிடைக்கும். மேலும், சொந்தமாக தொழில் தொடங்கவும், வாய்ப்பு வரும். சிலருக்கு கடல் கடந்த பிரயாணம் ஏற்படவும், அதனால் சில நன்மைகள் ஏற்படவும் வாய்ப்பு காணப்படுகிறது. இந்த மாதத்தில் உங்கள் பெயர், புகழ், அந்தஸ்து அனைத்தும் கொடி கட்டிப் பறக்கும். மறைமுக எதிரிகளின் பலம் குறையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் வளரும். ஆனால், குடும்பத்தில் சில சமயம் குழப்பம் ஏற்பட்டு, விலகும். பெண்கள் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டிய காலம் இது. பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு அலைச்சல், அதிகமாகும். மனதில் உள்ளதை பட்டென்று பேசாமல் இருப்பது நல்லது.சில சமயம் பெண்களால் தொல்லை ஏற்படவும்கூடும்.அவர்கள் தாயாக, சகோதரியாக இருந்தாலும், எச்சரிக்கையுடன் பேசாவிட்டால், சண்டை சச்சரவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு ரத்தக் காயங்கள், ரத்தப் போக்கு ஏற்படவும் நேரலாம். கொஞ்சம் எச்சரிக்கையும் அவசியம். இந்த மாதம் 3,4,,30,31 முதலிய தினங்களில் சந்திராஷ்டமம் ஏற்படும்.பிரயாணங்கள், புதிய முயற்சிகள் தோல்வியையே தழுவும்.அதனால், தவிர்ப்பது அவசியம்.

சிம்மம்:-

இந்தமாதம் கிரக சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இல்லை. சோதனைகள் நிறைந்த மாதம்னே சொல்லலாம். உறவினர்களுடன் விரோதம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். இந்த மாதத்தில் தேவையில்லாத பிரச்சினைகளும், சம்பந்தமே இல்லாத வீண் தொந்தரவுகளும், அனாவசிய சிக்கல்களும் வீடு தேடிவந்து, உங்களை மனக் கஷ்டத்துக்கு ஆளாக்கிடும். பயணங்களின்போது எச்சரிக்கை அவசியம். சிறுசிறு விபத்துகள் ஏற்படலாம்.மருத்துவ செலவுகள் அதிகமாகும். இந்த மாதம் செலவுகள் கூடுதலாகும். தொட்டது எதுவும் நஷ்டத்தில் போய் முடியும். வரவேண்டிய பணம்கூட சமயத்துக்குக் கைக்குக் கிடைக்காமல், கழுத்தறுக்கும். ஆனா, நீங்க தரவேண்டியதை மட்டும், கழுத்தில கத்திவச்சுக் கேப்பாங்க. வாழ்க்கைத் துணையின் உடன் நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தந்தையின் உடல் நலத்திலும் , உங்கள் உடல் நலத்திலும் கூட கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் ஏற்படும். குடும்பத்துக்குள் வம்பு வழக்குகள், சண்டை சச்சரவுகள் ஏற்படும். விரயச் செலவுகள் வந்தவண்ணமே இருக்கும். நகைகளை அடகு வைக்கவோ, விற்கவோ நேரும். பெண்களால், சில தொல்லைகள் உண்டாகும். கணவன்- மனைவி உறவு சுமுகமாக இருக்காது. பிறருக்கு ஜாமீன் கொடுப்பதையோ, பரிந்து பேசுவதையோ தவிர்த்தால், அதன்முலம் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். பிறருக்கு வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து செயல்படுவது நலம். நண்பர்களிடம் பழகும்போது விழிப்புணர்ச்சி அவசியம். பிள்ளைகளின் மனப் போக்கை அறிந்து செயல்படுவது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இட மாற்றம் ஏற்படும். பெண்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிக்கவேண்டியது அவசியம். வியாபாரிகள் கணக்கு வழக்குகளை தங்கள் சொந்தப் பொறுப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். பொது வாழ்வில் உள்ளவர்களின் பேச்சு மக்களிடையே எடுபடும். மாதப் பிற்பகுதி சுமாராக இருக்கும். ரொம்ப நாளா தடைப்பட்டு வந்த காரியம் ஒன்று சுறுசுறுப்பாக நடந்து முடியும். அரசாங்கத்திலிருந்து வர வேண்டிய பணம்கூட கைக்குக் கிடைக்கலாம். பொதுவாக இந்த மாதம் நீங்கள் நினைத்தற்கு மாறாக நடக்கும். கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போகும். உத்தியோகஸ்தர்களுக்கு சோதனையான மாதம். இந்த மாதம் 5,6,7ம் தேதிகளில் சந்திராஷ்டமம். கவனத்துடன் இருக்கவும். எந்தப் புது முயற்சியும் வேண்டாம்.

கன்னி:-

படு சூப்பரான, யோகமான மாதம் இது.கிரக நிலவரங்கள் அனைத்துமே உங்களுக்குச் சாதகமான இடங்களில் சஞ்சரிப்பதால்,நீங்க தொட்டது துலங்குறதுக்கும், நினைச்சது நினைச்சபடி நிறைவேறுவதற்கும்,எதிர்பார்க்கிற இடங்களிலிருந்து நல்ல செய்திகள், மகிழ்ச்சியான தகவல்கள் தேடிவந்து சேருவதற்கும், அதிகப்படியான வாய்ப்புகள் காணப்படுகின்றன. சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பும் யோகமும் உண்டாகும். இந்த மாதத்தில் ஒரு நல்ல நிகழ்ச்சி, சுப நிகழ்ச்சி நடந்தேறுவதற்கும் சந்தர்ப்பம் வரும். ஏதாவது ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டு, வெற்றி அடைவதற்கும் வாய்ப்பு காணப்படுது. வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். ஒரு சிலருக்கு இந்த மாதத்தில் சில நல்ல மாறுதல்களைக் காணலாம். கையில், தாராளமா பணப்புழக்கம் இருக்கும். புதிதாக வண்டி, வாகனம் வாங்கவும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு திடீர் வெளி நாட்டுப் பயணமும், அதன்மூலம் நல்ல அனுகூலமும் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்பு ஏற்பட்டு, கூட்டுத் தொழில் ,வியாபாரம் ஆரம்பிக்கறதுக்குண்டான சந்தர்ப்பங்கள் வரும். ஏதாவது ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டு , அதில் வெற்றி அடையவும் வாய்ப்புண்டு. இந்த மாதத்தில் உங்கள் பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து இவை விருத்தியாக வழி இருக்கிறது. சிலருக்குக் கல்யாணம் ஆகவும், சிலருக்குக் குழந்தை பிறக்கவும் வாய்ப்பு ஏற்படும். கலைஞர்களுக்கு சூப்பரான மாதம்; உத்தியோகஸ்தர்களுக்கு படு சூப்பரான மாதம். சொந்த வீடு வாங்கும் முயற்சி பலிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகள், போட்டியாளர்கள் அனைவரும் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைவார்கள். இதுவரை தொல்லை கொடுத்து வந்த வீண்பிரச்சினைகள், தொல்லைகள் அனத்தும் ஒருவழியாகத் தீர்ந்து மறையும். பெண்களுக்கு மிகவும் யோகமான காலம். திருமண வாய்ப்புகள் கூடிவரும். மாணவர்களுக்கு படிப்பில் சிறுசிறு தடங்கல்கள் ஏற்படும். அதிக சிரத்தை எடுத்துப் படிக்கவேண்டியிருக்கும். வியாபாரிகள் காட்டில் மழைதான். புதுப்புது யுக்திகளைக் கடைப்பிடித்து வியாபாரத்தைப் பெருக்குவார்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். நல்ல லாபம் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கும் யோகம்தான். இதுவரை உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் மனம் மாறி, உங்களுடன் கைகோத்து, உங்கள் வெற்றிக்குப் பாடுபடுவார்கள். புதிய பதவிகள் உங்களைத் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு குரையும். விரயச் செலவுகள் குறையும். உடல் நலத்தில் கவனம் தேவை. இந்த மாதம்,8,9,10ல் சந்திராஷ்டமம். புதிய முயற்சிகள் வேண்டாம்.

துலாம்:-

இந்த மாதம், கிரக நிலைகள் ஓரளவுக்குச் சாதகமான இடங்களில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு தைர்யமும் தன்னம்பிகையும் அதிகரிக்கும். மனதில் உற்சாகத்துடன் மற்றவர்கள் மத்தியில் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தைர்யமும் , வாக்கு சாதுர்யமும் மிகுவதால், எடுத்த காரியங்கள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். மனைவி சொல்லுக்கு மதிப்பளித்தால், அன்பிற்கு குறைவிருக்காது. ரொம்ப நாளா தடைப்பட்டு வந்திருந்த ஒரு நல்ல சமாச்சாரம் இந்த மாதம் முடிவடையவும் சந்தர்ப்பமிருக்கு. ஒரு சிலருக்கு, அரசங்கத்திலிருந்து ஆகவேண்டிய காரியங்கள் எதுவானாலும், உடனடியா நடந்து முடிந்து மனதிற்கு மகிழ்ச்சி தருவதுடன, கைக்கு பணம் வந்து சேரவும் வாய்ப்பிருக்கிறது. நீண்ட நாளைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இந்த மாதம் நீங்க தொட்டது வெற்றி அடைவதற்கும், நினைச்சது, நினைச்சபடி நிறைவேறவும் சந்தர்ப்பமிருக்குது. ஒரு புதிய முயற்சியில் இறங்கி வெற்றியடையவும் வாய்ப்பு இருக்குது. மாணவர்களுக்கு படிப்பில் புது உற்சாகம் பிறக்கும். நல்ல முன்னேற்றம் அடைவதற்கும் வழி காணமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வான மாதமிது. மாதம் முழுவதும் இப்படியே போய் விடாமல், சில சின்னச் சின்ன இடறல்களும் இருக்கு. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். வீடு, மனை வாங்குபவர்கள் பத்திரம், சான்றிதழ்கள் முதலியவற்றை நன்கு சரிபார்த்தபின், வாங்குவது ந்ல்லது. பெண்கள் மனதில் இனம் புரியாத குழப்பங்கள் ஏற்படும். எதையும் பேசுமுன், நன்கு யோசித்துப் பேசுவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள், வெற்றிக்கு மனம் தளராமல், போராடவேண்டும். கொஞ்சம் சோதனைகளையும் கொடுக்கும் மாதம்தான் இது. உடல் நிலையில் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள், விரயச் செலவுகள் ஏற்படும். எதிரிகளின் தொல்லைகளால், மனக் கலக்கம் ஏற்படவும் வாய்ப்புண்டு. மூத்த சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். சிலர் தந்தையைவிட்டுப் பிரிய நேரும். புத்திர -புத்திரிகளின் போக்கு மனதுக்கு வேதனையை உண்டாக்கும்.கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனம் தவறினாலும், நாணயம் தவறிப்போய் அவமானப்பட நேரும்.நன்றாகப் பழகிய நண்பர்களும், உறவினர்களும்கூட விரோதமாவார்கள்.11,12ம் தேதிகளில் சந்திராஷ்டமம். புது முயற்சிகள் வேண்டாம்.

விருச்சிகம்:-

இந்த மாதம் கிரக நிலவரங்கள் அனைத்தும் சாதகமான இடங்களில் சஞ்சரிப்பதால், இது நற்பயன்களைத் தரக்கூடிய மாதமாகும். தொட்டது துலங்கும். நினைச்சது நினைச்சபடி நிறைவேறும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து, எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும். தொழில் ,வியாபாரம் மேன்மை அடையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொல்வாக்கு, செல்வாக்கு, அந்தஸ்த்து, புகழ், கௌரவம் மேன்மை அடையும். தங்களுக்கு தொல்லை ஏற்படுத்தி வந்த எதிரிகள் தற்போது, இருந்த இடம் தெரியாமல், ஓடி மறைவார்கள். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். மனோபலமும், மனோதைர்யமும் கூடும். சிலருக்கு புதிதாகத் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பும் வந்து சேரும். குடும்பத்தில் ஏதாவதொரு நல்ல நிகழ்ச்சி நடந்தேறுவதற்கும் வழி உண்டாகும். அரசாங்கத்திலிருந்து நடைபெறவேண்டிய காரியங்கள் எதுவானாலும், இந்த மாதம் உடனுக்குடன் நடந்தேறுவதுடன் அரசாங்கத்திலிருந்து வரவேண்டிய பணமும் கைக்கு வரும். மேலும் ஒரு நீண்ட நாளைய கனவும் நிறைவேறப் போகுது. இருந்தாலும், சிலருக்குப் பெண்களால் தொந்தரவுகளும், வீண்வம்புகளும், தண்டச் செலவுகளும் வந்து சேர வாய்ப்பிருக்கிறது. சிலருக்கு உடன்பிறந்தவர்களாலும் உபத்திரவங்கள், தொந்தரவுகள் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தாரின் குணம் அறிந்து நடந்துகொள்வது நல்லது. இல்லாவிட்டால், குடும்பத்தில் சிறுசிறு சண்டை சச்சரவுகளும் , குழப்பங்களும் ஏற்பட ஏதுவாகும்.உடல் நலத்தில் கவனம் தேவை. தாயாரின் உடல் நலமும் பாதிக்கப்படக்கூடும். சிலருக்கு வண்டி, நிலம் , வீடு சம்பந்தமான விரயச் செலவுகளும் ஏற்படும். தாயாருடன் கருத்து வேறுபாடுகளும், சண்டை சச்சரவுகளும் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் உடல் நலமும் பாதிக்கப்படக்கூடும். வேறு எந்த விதத்திலும், பெரிதாகப் பேசும்படி, மிகப் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. எந்த சமயத்துக்கு எப்படி செயல்படவேண்டும் என நன்கு யோசித்து செயல்பட்டால், வெற்றியடைவது எளிது. மொத்தத்தில், ஓரிரு சங்கடங்களைச் சமாளித்து விட்டால், இது ஒரு யோகமான மாதமே.! இந்தமாதம் 13,14,15 தேதிகளில் சந்திராஷ்டமம். புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுங்கள்.

தனுசு:-

செய்யும் காரியங்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும், வெற்றியடையக்கூடும். மனோபலம் மேலோங்கும். எதிரிகளின் தொல்லை ஒழியும். உடல் நலக் குறைவுகள் நீங்கும்.வெளியூர், வெளி நாட்டில் வேலைபார்த்து வந்த சிலர்,சொந்த ஊருக்கும் சொந்த நாட்டுக்கும் திரும்புவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். ஆடை -ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். லட்சுமி கடாட்சமும், தனலாபமும் பெறுகும். அரசுப் பதவிகளும் அமையும். பூர்வீகச் சொத்திலிருந்து வருமானமும் கிடைக்கும். புத்திரர்கள் மேன்மையடையவும், அவர்களுக்கு சுப காரியங்கள் நடக்கவும் வாய்ப்பு உண்டாகும். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சியுடன் காணப்படும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களால், சில நன்மைகளும் கிடைக்கும். உங்களுடைய வசீகரப் பேச்சால், மற்றவர்கள் மனதில் எளிதில் இடம் பிடிப்பீர்கள். என்னதான் வரவுகள் அதிகம் வந்தாலும், அதற்கேற்ற செலவுகளும் காத்துக்கொண்டிருக்கும். இளைய சகோதரர் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும், அவற்றைத் தந்தையின் மூலம் சரி செய்துவிடுவீர்கள். வீடு வாங்கும் யோகமும், இருக்கிற வீட்டைப் புணரமைக்கும் யோகமும் உன்டாகும். பிள்ளகளினால், உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு திருமணம் கை கூடிவரும். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். ஆசிரியரின் வழிகாட்டுதல் சிறப்பாக அமையப் பெற்று, நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் பிரச்சினைகளைச் சமாளித்து வெற்றி காண்பார்கள்.உங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தவர்கள்,தானாக விலகிவிடுவார்கள். இந்த மாதம் கிரகங்களின் ஏடாகூடமான நிலைமையினால், சில காரியங்கள் முடிவடைவதில் இழுபறியான நிலைமைகள் அறவே இருக்காது என்று சொல்லிவிட முடியாது. ஒருசில விஷயங்களில் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டலியேங்குற நிலைமையும் தென்படுது. ஆனா, சமாளிக்குற மன நிலைமயையும் கிரக பலன்கள் கொடுக்குது.இந்த மாதம் 15,16,17ல்சந்திராஷ்டமம்.புதிய முயற்சிகளில் இறங்கவேண்டாம்.

மகரம்:-

இந்த மாதம் ஒரு அளவுக்குப் பரவாயில்லை. பழைய தொந்தரவுகள் விலகி ஓடும் நேரம் இது. புதிய முயற்சியில் இறங்கி வெற்றி காண முடியும். மேலும், ஒரு நல்ல நிகழ்ச்சி நடப்பதற்கு பேச்சு வார்த்தை ஆரம்பமாகும். நீண்ட நாளைய முயற்சி ஒன்றுக்கும் வெற்றி கிட்டும். ஒரு சிலர் புதிதாக இந்த மாதத்தில் வண்டி வாகனம் வாங்குவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அரசாங்கத்திலிருந்து, ஆகவேண்டிய காரியங்கள் இந்த மாதம் நடந்து முடியும். சிலர்,அரசாங்கத்தோடு, புது ஒப்பந்தம்,புது ஆர்டர்கள், இப்படி தொழில் ரீதியாக கையெழுத்திடும்படியான சந்தர்ப்பங்கள் வரும். வெளி நாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வரும். திடீர்ப் பிரயாணம் ஏற்பட்டு , அதில் ஆதாயம் கிடைக்கும்.கலைஞர்களுகும், கலைத் துறையில் ஈடுபட்டிருப்பவர்களுககும், இது ஒரு யோகமான மாதம். இதுவரை தடங்கலாக இருந்த ஒரு முக்கிய் சமாச்சாரம், இந்த மாதம் தடைகள் நீங்கி மளமளன்னு முடிஞ்சுடும். உங்களுக்கு வராம இருந்த உங்களுடைய பணம் உங்களைத் தேடி வந்து சேரும். புதிய நண்பர்கள் வந்து சேரு வார்கள். அவர்களால் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வான மாதம் இது. எதிர்பாக்குறது வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். செய்துவரும் தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.மற்றவர்கள் முன்னிலயில் உயர்ந்து காணப்படுவீர்கள். இளைய சகோதரர்களை அனுசரித்துச் செல்வீர்கள்; அதனால்,அவர்களின் ஒத்துழைப்பு பரிபூர்ணமாகக் கிடைக்கும்.புதிதாகச் சொத்து வாங்குபவர்கள் அதைப் பற்றிய விபரம் அனைத்தும் தெரிந்தபிறகு அதை வாங்குவது நல்லது. புத்திரப் பேறு இல்லாதவர்களுக்கு புத்திரப் பேறு ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கடன்கள் கட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்வீர்கள். மறைமுக எதிரிகளின் பலம் குறையும். மனைவி வழியில் சற்று நிம்மதிக் குறைவு ஏற்படும். பிறருக்கு ஜாமீன் கையெழுத்து, பண உதவி முதலியவைகளைச் செய்வதற்குமுன், அவர்களின் பின்புலம் அறிந்து செய்யவேண்டும். இல்லையென்றால் சிரமம்தான். வேலை தேடும் சிலருக்கு வேலை கிடைக்கும். தகப்பனாரின் உடல் நலனில் அதிக கவனம் எடுக்க வேண்டியிருக்கும். அலைச்சலின் பேரில் வருமானம் கிடைக்கும். மனதில் குழப்பஙகளும் இருக்கும். இந்த மாதம், 17,18,19 தேதிகளில் சந்திராஷ்டமம். புதிய முயற்சிகள்,பிரயாணங்களைத் தவிர்க்கவும்.

கும்பம்:-

இந்த மாதம் யோகமான பலன்கள் ஏற்படும். தொட்டது துலங்கும். எடுத்து வைக்கும் அடிகள் ஒவ்வொன்றும் வெற்றியைக் குவிக்கும். தடைப்பட்ட சுப நிழ்ச்சிகளும், நல்ல நிகழ்ச்சிகளும்கூட இந்த மாதத்தில் பேச்சு வார்த்தைகள் தொடங்கி , சுமுகமாக நடந்து முடிய சந்தர்ப்பங்கள் வந்து சேரும். உங்களுடைய நீண்ட நாளைய கனவு ஒண்ணு இந்த மாதம் நிறைவேறப் போகுது. வேலை தேடும் நபர்களுக்கு வேலை கிடைப்பது மட்டுமல்ல. ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கும், இந்த மாதத்தில் ஏதாவது உயர்வு வந்து சேரும். புதிய தொழில், வியாபாரம் தொடங்கவும் வாய்ப்பு ஏற்படும். வர வேண்டிய பணம் இந்த மாதம் வந்து சேரும். இந்த மாதம் மிகவும் சுறுறுப்புடன் காணப்படுவீர்கள்.வாக்கில் நிதானமும், அதே சமயம் கண்டிப்பும் காணப்படும். வருமானம் அதிகரிக்கப் போகுது. இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு நிலத்தின் ஒரு பகுதியை விற்க நேரிடும்.பிள்ளைகளுக்கு படிப்பில் உற்சாகம் ஏற்பட்டு மேன்மையடைவர். அதனால் உங்களுடைய மதிப்பும் உயரக் காண்பீர்கள். எதிரிகளையும் தங்களுக்குச் சாதகமாக செயல்படும்படி மாற்றி விடுவீர்கள். கொடுத்து வைத்திருந்து, இதுவரை வராமலிருந்த கடன்கள் வசூலாகும். கடன்களைக் கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். நண்பர்களிடம் விழிப்புடன் இருந்தால், ஒரு சில பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். தகப்பனார் வழிச் சொத்துக்களினால் ஆதாயம் உண்டு. வேலைப்பளு அதிகரித்தாலும் தயக்கமே இல்லாமல் பாடுபடுவீர்கள். லாபமும் அதிகரிக்கும். வங்கி சேமிப்பும் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. அனைவருடைய தேவைகளும் பூர்த்தியாவதால், சந்தோஷம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இருந்தாலும் சிலருக்கு பேச்சில் உஷ்ணம் மிகுந்து காணப்படும். அதனால், சிலருக்கு, வீண் சண்டை -சச்சரவுகள் உண்டாகும். யாரிடம் பேசினாலும், பழகினாலும் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுவது நன்மையைக் கொடுக்கும். பெண்களின் வாக்கு சாதுர்யம் மேலோங்கும். வேலையிலிருக்கும் பெண்களுக்கு இடமாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர். வியாபாரிகள்,அதிக வாடிக்கயாளர்களாப் பெருக்கி, வியாபாரத்தை மேம்படுத்துவர். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு, பட்டம் பதவிகள் தேடிவரும். உங்கள் பேச்சு மக்கள் மத்தியில் நன்கு எடுபடும். இந்த மாதம் 19,20,21ல் சந்திராஷ்டமம். புது முயற்சிகள் வேண்டாம்.

மீனம்:-

இந்த மாதம் ,உங்கள் கிரக நிலைகளை வைத்துப் பார்க்கும்போது, ஓரளவுக்குத்தான் நற்பலன்கள் ஏற்பட வழியுண்டு.,உங்களுக்குக் கொஞ்சம் தொல்லைகளைக் கொடுக்க கூடிய மாதமாக இருந்தாலும், உங்களால் ஓரளவுக்கு சமாளிக்கக்கூடியதாகவே இருக்கும். ஒரு சிலருக்கு வரவும் செலவும் சரிசமமாக இருக்கும். ஆனால், வீண் செலவுகள் அதிகமாகி, கொடுக்கல்- வாங்கலில் நீங்கள் நாணயம் தவற நேரும்.இருந்தாலும், நீங்கள் மனம் தளராமல், செயலாற்றுவீர்கள். மனதில் இனம் புரியாத பயமும் , துக்கமும் இருந்துகொண்டே இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. கண் மற்றும் பித்த சம்பந்தமான பாதிப்புகள், இருக்கும். பணப்பற்றாக்குறை, இருந்துகொண்டே இருக்கும். தேவைகள்தான் பயமுறுத்திக்கொண்டு நிற்குமே தவிர, திக்கு-திசை புரியாத நிலமை நிலவும். செல்வாக்கு, சொல்வாக்கு, கௌரவம், அந்தஸ்து பாதிகப்படும். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போகும். அதனால், குடும்பத்தில் ஒற்றுமைக் குலைவு ஏற்படும். குடும்பத்தாருடன் பேசும்போது, கொஞ்சம் எச்சரிக்கையுடன் பேசுவது நல்லது. ஏனெனில், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். வீண் அலைச்சல்கள் அதிகமாகும். கணவன்-மனைவி உறவு சிறப்பாக இருக்காது. கருத்து வேற்றுமை நிலவும். எதிரிகளால் அவமானங்கள் ஏற்படலாம். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் விரோதம் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது, கவனத்தைச் சிதறவிடாமல் செல்வது அவசியம். சிலருக்கு, அரசு வழியில் ஆதாயமும், அதன்மூலம் கடன்களும் கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் நல்ல மாற்றம் காண்பீர்கள்.தங்கள் செயல்களுக்கு அவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களின் வார்த்தைகளில் மயங்கிவிடாமல் ,எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இல்லையென்றால் அவர்களுடைய சதி வலையில் சிக்கி, பெரிய ஆபத்தில் மாட்டிக்கொள்ள நேரும். தொழில் வழி முன்னேற்றத்தில் சிறுசிறு தடங்கல்கள் ஏற் படலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள், சென்ற இடமெல்லாம் மதிப்பும், மரியாதையும் எதிபார்த்தாலும் , அங்கே ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் காண்பீர்கள். வாக்கு கொடுப்பதற்கு முன், சிந்தித்து செயல்படுவது அவசியம். ஒரு சிலருக்கு, இந்த மாசத்தில் அரசாங்கத்திலிருந்து சில தொந்தரவுகள், சில பிரச்சினகள் வந்து சேருவதற்கும், சிறிய அளவில் மனக் கஷ்டம் வ்ந்து சேரவும், வாய்ப்பு காணப்படுகிறது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகமானாலும், ஒரு அளவுக்கு அதிர்ஷ்டமானதாகவே இருக்கிறது. புத்திசாலித்தனத்தை உபயோகித்து, கஷ்டங்களை தூசி போல மாற்றி வாழ்க்கையை வெற்றி கொள்ளலாம். இந்த மாதம், 21,22,23 தேதிகளில் சந்திராஷ்டமம். புதிய முயற்சிகள் வேண்டாம்.

 

Advertisements