மௌனத்திற்கும்..
மௌனத்திற்கும்..
இடையில்..
இதழ்களின் சத்தம்..
….. முத்தம்..

ஒரு முத்தத்துக்கும்,
இன்னொரு முத்தத்துக்கும்..
இடைவெளியில்..
இன்னொரு முத்தம்..
இடைவெளி இல்லாமல்..

புன்னகைத்த இதழ்கள்..
வெட்கப்பட்டு..
மறுபடியும்
புன்னகைக்கிறது..

மறுபடியும் வெட்கம் தரவா??

முத்தங்களால்..
உயிலெழுதி..
உயிரெழுதி..
தருகிறதோ இதழ்கள்?

மரித்த பிறகும்..
மண்ணில்
எரித்த பிறகும்..
உன் முத்த ஓசையில்..
மறுபடியும் உயிர்த்தெழுவேனடி.

– பிரியன்.

(நன்றி – படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது)

(கவிதை முத்தங்கள்.. தொடரும்)

Advertisements