ஜெயலலிதா விஜய்காந்த்

 

விஜய்காந்த் பெரும்பாடு பட்டு கடைசியில் அம்மாவிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கிவிட்டார். வாசலில் கருப்பு பூனை யூனிஃபார்மில் ஒருவர்  விஜய்காந்தை சோதனை செய்து விட்டு உள்ளே அனுப்புகிறார். விஜய்காந்த் உள்ளே நுழைகிறார்..

 

அம்மா ஜெயலலிதா கம்பீரமாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்…பக்கத்து சேரில் சசி….பக்கத்தில் ஒரு சின்ன முக்காலி போடப்பட்டிருக்கிறது…சைட்ல வைகோவும் பன்னீர்செல்வமும் பவ்யமாய்…ரூம் மூலையில் கொஞ்சம் வேலையாட்கள் வெள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்… விஜய்காந்த் தயங்கித் தயங்கி உள்ளே போகிறார்…

ஜெ : வாங்க வாங்க …

விஜய்காந்த் அந்த முக்காலியில் உட்காருகிறார்…

விஜய் : ( பக்க்த்தில் நிற்கும் வைகோவையும் பன்னீர்செல்வத்தையும் பார்த்து) நீங்கள்ளாம் உக்காரலியா ?

ஜெ : அவங்கள்ளாம் பல நாளா கட்சியிலயும் கூட்டணியிலயும் இருக்கறதால நல்லா ட்ரெயின் ஆயிட்டாங்க… நீங்க புதுசுங்கறதால உங்களுக்கு முக்காலி போட்டிருக்கோம்… (மனதுக்குள் … போக போக முக்காடு போட்டுறலாம் )

ஓ.பன்னீர் :  என்னை சி.எம் சீட்டில் உட்கார வைத்து அழகு பார்த்த அம்மா முன்னாடி நான் உட்காருவதா?

வைகோ : கிறிஸ்து பிறப்பதற்கு 326 ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் அலெக்சாண்டர் முன் கம்பீரமாய் நின்றானே போரஸ் மன்னன்… அது போல்…

விஜய் : இல்ல.. நீங்க உட்காரலன்னா பரவாயில்ல உட்டுருங்க.. அதுக்காக அலெக்சாண்டர எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு…நான் அவர் பேர்ல ஒரு படம் எடுத்து அவர காலி பண்ணது பத்தாதா….

பன்னீர் : விஜய்காந்த், குடிக்க ஏதாவது?

சசி : விடுங்க.. கூட்டணி பேச வந்திருக்கவருட்ட போய் குடி… குடிகாரர் எல்லாம் ஞாபகப்படுத்திக்கிட்டு… அப்புறம் அவர் அம்மாவ ஊத்திக் கொடுக்க சொல்லுவாரு.. எதுக்கு அதெல்லாம் இப்ப…

ஜெ : ஆமா…. உங்க மச்சான் சதீஷ் வரலியா?

விஜய் : அவன்  என் பொண்டாட்டி சொல்லிக் கொடுத்த மாதிரி இந்நேரம் ஏதாவது மேடையில் திமுக குடும்ப அரசியலப் பத்தி திட்டிக்கிட்டுருப்பான்… அத விடுங்க.. ஆமா நான் வர்ரப்ப பண்ருட்டி ஏற்கனவே கம்யூனிஸ்டும் கார்த்திக்கும் கூட்டணி சீட்டப் புடிக்கறதுக்கு முன்னால போன்னு அர்ஜென்ட் படுத்தினாரே … ஆனா ஒருத்தரையும் காணும்…

சசிகலா : அக்கா கிட்ட வராம எங்க போவாங்க ? இங்கதான் இருக்காங்க…இதோ கம்யூனிஸ்டுங்க…

என்று ரூமின் மூலையில் வெள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஆட்களை காட்டுகிறார்.. அப்போதுதான் உற்று நோக்குகிறார் விஜய்காந்த் கம்யூணிஸ்ட் தலைவர்கள் தான் அவர்கள்…

விஜய் : அப்ப கார்த்திக்கு ?

பன்னீர் : என்ன விஜய்காந்த்… அவர் கூட சேர்ந்து படமெல்லாம் நடிச்சிருக்கீங்களே… வெளிய ஒருத்தர் கருப்பு பூனை யூனிஃபார்மில உங்கள செக் பண்ணாரே அவருதான் கார்த்திக்… யூனிஃபார்முல அடையாளம் தெரியலயா?

விஜயகாந்த்  ஒருவாரு தன்னை  தேற்றியவாறு பேச தொடங்குகிறார்…

விஜய்காந்த் : திருப்பதி போய் லட்டு குடுத்து அனுப்புனனே … மேடம் சாப்டாங்களா?

ஜெ : ம்ம்ம் வந்துது வந்துது….   வழக்கமா நாங்கதான் எல்லாருக்கும் லட்டு குடுப்போம்… அதுக்கப்புறம் அவங்க திருப்பதிக்கு போவாங்க…ஆமாம் விருத்தகிரி டிவிடி இருக்கா?

விஜய்காந்த் : ( அய்யோ அத பத்தி இப்ப எதுக்கு பேசறாங்க.. அதப் பாத்தா கிடைக்கற சீட்டுல இன்னும் கொஞ்ச்சம் கம்மியாயிடும்… இல்லன்னே சொல்லிடுவோம் ) அது இருந்துது… இப்போ தொலஞ்சி போச்சி…

சசி : தொலைஞ்சி போச்சா… அடடா.. அந்தக் காலத்துல நான்  வீடியோ கடை நடத்துனலத  இருந்தே அம்மாவுக்கு காமெடின்னா ரொம்ப பிடிக்கும்… சோ சேட்….

விஜய்காந்த் : ஆமாமா.. எனக்கும் வருத்தம்தான்…

வைகோ  : அவன் அவன் அம்மா கூட கூட்டணியில சேர்ந்து கட்சியையே  தொலைச்சிட்டு நிக்குறான்… ஒரு டிவிடிய தொலச்சிட்டு வருத்தப்படலாமா….

விஜய்காந்த் : அரசியல்ல என்ன விட சீனியர் நீங்க… நின்னுகிட்டே இருக்கீங்களே…

வைகோ : அட அத விடுங்க தம்பி இந்த சீட்டா முக்கியம்….

விஜய்காந்த் : ஆமாமா  நான் வந்த வேலய விட்டுட்டு எத எதயோ பேசிக்கிட்டு இருக்கேன்… ஆமா .. முதல்ல எங்களுக்கு எவ்வளவு சீட்டு மேடம்… குறைஞ்சது 80 சீட்டு நம்ம பசங்க எதிர்பார்த்தாங்க… நாந்தான் அதெல்லாம் வேண்டாம் அறுபது போதும்னு சொல்லிட்டு வந்திருக்கேன்…

ஜெ : இவர் என்ன பஞ்சாயத்து எலக்ஷன் சீட்டு மாதிரி கேக்குறாரு… அசெம்பிளி எலக்ஷன் இது…

விஜய்காந்த் : அழகிரி வேற அடிக்கடி லைன்ல வர்ராரு சீக்கிரமா சொல்லிட்டீங்கன்னா நாம டீல் முடிச்சரலாம்…

ஜெ : நாற்பது சீட்டு….

வைகோ  : ஆமாமா முடிச்சிட வேண்டியதுதான்…அம்மா மனசு வச்சா எல்லாமே சூப்பர்தான்! ( எப்படியோ கூட்டணியிலேர்ந்து கழட்டி விடாம வச்சிருக்காங்களே… போன வாட்டி ராமதாஸ் மாதிரி பஸ்லயே ஏத்திக்காம நடக்க விட்டுருவாங்களோன்னு பயந்துக்கிட்டு இருந்தேன்… எப்படியாவது ஜாலரா தட்டி ஒரு ரெண்டு சீட்டாவது எக்ஸ்ட்ரா வாங்கிடணும்)

விஜய்காந்த் சுற்றுப்புறத்தை புரிந்து கொண்டவராய் டக்கென்று முக்காலியில் இருந்து எழுந்து … இங்க பாருங்கம்மா… இந்த கார்த்திக்குக்கு கறுப்பு பூனை எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் பத்தாது… எத்தன யூனிஃபார்ம் போட்டவன் நான்… எத்தன டெரரிஸ்ட் புடிச்சவன் நான்… என் கூட கூட்டணி போட்டீங்கன்னா டபுள் பெனிஃபிட்… வாக்கு வங்கியுமாச்சி பாதுகாப்புமாச்சி என்ன சொல்றீங்க?

ஜெ : இது நல்லா இருக்கே… நாப்பத்தஞ்சி சீட்டு…

இப்படியாக பேச்சு வார்த்தை சுமுகமா நடந்துக்கிட்டு இருக்கு….

Advertisements