ராணா

 

எந்திரனுக்கு அப்புறம் அடுத்த ரஜினிபட ஃபீவர் ஆரம்பிச்சாச்சு. அடுத்த ‘ராணா’வில் அவருக்கு மூணு கெட்டப் கொடுத்திருக்கிறார், டைரக்டர், கே.எஸ். ரவிக்குமார். ரஜினி படம் ஆரம்பிச்சாச்சுன்னா கமல் படம் ரெடியாகலன்னா எப்படி? அதுவும் செல்வராகவன் டைரக்ஷன்ல ரெடியாகுது. அதுல உலக நாயகனோட ஜோடி கட்டப் போறது, கலைமாமணி ‘அனுஷ்கா’வாம்.

அனுஷ்கா கமல்

 

 

 

‘முத்துக்கு முத்தாக’ படத்தில் ஹரீஷ்- ஓவியா,விராந்த்- மோனிகான்னு, ஜோடிகள் இருந்தும், ஹீரோ- ஹீரோயின் யார்னு கேட்டா, அப்பா-அம்மாவா வர்ற இளவரசுவையும், சரண்யாவையும் தான் சொல்றார், டைரக்டர் ‘ ராசு மதுரவன்’ . பெத்தவங்களை ஹீரோவாக்கிய பெருமையாளர்.

 

parthipan பார்த்திபன்

தமிழில் பொளந்து கட்டிய ஆர்.பார்த்திபன், ‘மேல் விலாசம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் , மலையாளப் படவுலகில் நுழைந்ததோடல்லாமல், டப்பிங்க்கும் பேசியிருக்கிறாராம்.வெளுத்துக் கட்டுங்க!.

 

‘ குப்பி’ டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கும் ‘காதலர் குடியிருப்பு’ என்ற படம், பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட உண்மைச் சம்பவங்ளை ஒட்டி இருந்தாலும், சென்சார் இந்தப் படத்துக்கு ‘யு’ சர்டிபிகேட்தான் கொடுத்திருக்கு. கத்தரியும் மனசு வைக்கும்!

 

Advertisements