ஹூசைன் - அனுஷ்கா

புகழ் பெற்ற ஓவியரான எம்.ஃஎப்.ஹுசைனுக்கு 95 வயதாம். சரியான ஜொள்ளு பார்ட்டியாம். ஓவியங்களை விற்றுக் குவித்த பணத்தை என்ன செய்வதுன்னு புரியாமல், கத்தார் நாட்டில் சொகுசு பங்களாவில் வசிக்கிறாராம். இவரது ஒரே பொழுதுபோக்கு ,பாலிவுட் படங்கள் பார்ப்பதுதான். நடிகைகள் மீது காதலால் கசிந்து உருகுவாராம். இவர் முதலில் ஆராதித்த நடிகை, மாதுரி திட்சித். அவரை வைத்து ‘கஜ காமினி’ என்ற படம் தயாரித்தார்.

 

 

madhuri dikshit மாதுரி திக்ஷித்

இந்தப் படம் பாதியில் இருக்கும்போதே, மாதுரிக்குத் திருமணம் ஆகிவிட்டது.நொந்து போன ஹுசைனின், மாதுரி மோகம், ஒரு முடிவுக்கு வந்தது. ,அடுத்த ஹீரோயின் ஆனவர்,’ தபு’. அவரையும் வைத்து, ‘மீனாட்சி -எ டேல் ஆஃப் டூ சிட்டீஸ் ‘ என்ற படத்தை எடுத்தார். பின்னர், தபு- அலை ஓய்ந்ததும், ஹுசைன், அம்ரிதா ராவ் -வுக்குத் தாவினார். அம்ரிதா ராவை வைத்துப் படம் எடுப்பாரோ என பாலிவுட் ஆவலுடன் காத்திருந்த வேளையில், மனிதர், ‘அனுஷ்கா’ வுக்கு மாறிட்டார்.(இது அருந்ததி அனுஷ்கா இல்லங்க. வேற அனுஷ்கா…..அனுஷ்கா சர்மா.) அனுஷ்கா ஹீரோயினா நடித்திருக்கும் ‘ பேண்ட் பாஜா பாரத்’ பரபரப்பாக ஓடிக்கொண்டிருகிறது. விடுவாரா ஹுசைன்? ‘ ஆ..! .இவ்ளோ அழகான பொண்ணை நான் இதுவரை பார்த்ததில்லையே’ என புலம்பித்தள்ளி அந்தப் படத்தை 12 முறை பாத்தாராம். ‘இந்தப் பொண்ணை நான் படமா வரையப் போறேன். வீட்டுக்குக் கூப்பிட்டுப் பாராட்டப் போறேன்’ என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருக்கிறாம்.

 

அனுஷ்கா ஷர்மா

அனுஷ்காவும் இதில் பரவசமாகி இருக்கிறாராம். அவருடைய ஓவியத்தை கோடி கோடியா வாங்கறவங்க மத்தியில, என்னை அவர் வீட்டுக்குக் கூப்பிட்டு ஓவியமா வரைஞ்சா, கசக்குமா? எப்போ அவர் கூப்பிட்டாலும் போவேன் என்கிறார், அனுஷ்கா. அனுஷ்கா அங்கு போவதற்குள் அவர் வேறு ஏதும் இந்திப் படம் பார்க்காமல், இருக்கவேண்டுமே!.

Advertisements