காங்கிரஸ் திமுக இழுபறி

 

1.இன்னும், காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. கடைசியாக, காங்கிரஸ் 65 லிருந்து இறங்காமல் இருப்பதாகவும், தி.மு.க. 55 லிருந்து ஏறாமல் இருப்பதாகவும் தகவல். அதில் ஒரு சின்ன அட்ஜஸ்மென்ட்டுக்கு, ரெடியான தி.மு.க. 60 வரை ஒத்துக்கொண்டுள்ளதாகத் தகவல். காங்கிரஸும் இறங்கிவந்தால், நிலைமை சரியாயிடும்; கூட்டணி விவகாரம் ஒரு சுமுகமான முடிவை எட்டிவிடும்-என்பதாக அறியப்படுகின்றது.இன்று அமாவாசை ;எப்படியாவது , ஏதாவது (?) ஒரு முடிவுக்கு வந்த்விடுவாகள்; இனிமேல்,குழப்பம் நடிக்காது என்று பேசிக்கொள்கிறார்கள்.

2. இன்று அமாவாசை; என்ற கணக்கு இன்னொரு இடத்திலும் நடை போடுதாம்; தே.மு.தி.க. தலைமையும், அ.தி.மு.க. தலைமயும் இன்று மீட் பண்ணிடுவாங்களாம். அந்த கூட்டணியும் இந்தக் கூட்டணியும் ஒருத்தருக்கொருத்தர் வெய்ட் பண்ணுற மாதிரி தெரியுது.

3. ஒரு கட்டத்தில், தி.மு.க வைக் கழட்டி விட்டுவிட்டு ,முலாயம் சிங்க் ஆதரவை பெறலாமா, என காஙகிரஸ், யோசித்ததாகவும் தகவல்.முலாயம் சிங் ஆதரவு தருவாரென்றால்,அவருக்கு ஒரு டிமாண்ட் இருக்குமில்லையா? அது என்னவாக இருக்கும்? இதெல்லாம்,’ பஞ்சிங்க்’ கேள்விகள் இல்லையா?

4. மேற்கு வங்கத்திலும், மம்தாவுடன் இழுபறிதான்! இவுங்க கேட்பது ,98; கொடுக்க இருப்பது,40-தானம். என்னங்க இது! பாதிகூட இல்லியே. அவுங்கவுங்க கஷ்டப்பட்டு கட்சிய வளத்துட்டு மூன்றில் ஒரு பங்கைத் தூக்கிக் கொடுத்துடுவாங்களா? ஒவ்வொரு ஸ்டேட்லயும் காங்கிரஸ்காரங்க என்னதான் பண்றாங்களாம்? சுய பலத்தோடு, 234 லும் நிக்குற அளவு தங்களை உயர்த்திக்க வேண்டியதுதானே!

4. இதற்கிடையே, 25 இடங்களைக் கேட்ட விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 இடங்களை ஒதுக்கியுளளது, தி.மு.க.. வருத்தம் என்றாலும், தி.மு.க.வின் நிலமை புரிகிறது. எப்படியும் தி.மு.க.வுக்கு, தோள்கொடுப்போம், என்கிறார்,திருமா. ஆபத் பாந்தவா! பா.ம.க.வும், வி.சி.யும், சேர்ந்தால், வட மாநிலங்களை ஒரு கை பார்த்து விடலாமாம்.

5.’ குறைந்தபட்ச செயல் திட்டம்’ என்ற டிமாண்ட் இப்போது ஏற்பட்டதில்லையாம். 2001லேயே, ப.சிதம்பரம் சொன்னதுதானாம். ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்கும்போதே இதை மூப்பனாரிடம் விலியுறுத்தினேன்; அப்போது, அது மறுக்கப்பட்டது. எனவே, ‘இப்போ…..இல்லாட்டி.., எப்போ…?’ என்ற பாட்டுச் சத்தம்தான் கேட்குது.

6. யாரும் எதிர்பாராத சமயத்தில், இன்னொரு திடீர் திருப்பமாக, கொ.மு.க.வுக்கு 7 ஸீட் கொடுத்து, தி.மு.க. தங்கள் பக்கம் தக்கவச்சுக்கிட்டதும், சாமர்த்தியமான ‘மூவ்’.ஆகக் கருதப்படுதாம். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்,5ஸீட் தருவதாக இருவருமே சொல்லிக்கொண்டிருக்க, அ.தி.மு.க.இன்னும் ஒருபடி மேலே போய், 5லும் ஜெயிக்க வைக்கிறோம் என்றும் சொல்லப்பட்டதாம். இந்த நிலையில் ஒரு ஜம்பிங் முயற்சியாக, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், 7ஐ வாங்கிக் கொண்டு, ,தி.மு.க.வுடன் ஐக்கியமாகி,செங்கோட்டையனுக்கு, ‘டோஸ்’ வாங்கி வச்சுடுச்சாம்.

7. தேர்தல்னு வந்துட்டா, எல்லா பிரச்சினைகளும் முக்கியத்துவம் பெற்றுவிடுமே.! தமிழக அரசு ஊழியர்களால், வைக்கப்பட்ட’ மத்திய அரசுக்கு சமமாக சம்பளம்’ உள்ளிட்ட, சில கோரிக்கைகள் சரிவர கவனிக்கப்படாததோடு,அரசு ஊழியர்கள் மேல், லத்தி சார்ஜ் செய்யப்பட்டது, பெறும் தீயை மூட்டிவிட்டதோடு, அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையேயான ‘ நண்பேன்டா’ இமேஜையும் தூள் தூளா நொறுக்கிடுச்சாம். கண்ணை மூடிக்கொண்டு தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பப்பட்ட, அரசு ஊழியர்களீடாமே, அவ்வளவு கோபமாம். இதுபோல சரி பண்ண வேண்டியது, எத்தனை இருக்கோ!

8. தேசிய ஜன நாயகக்கட்சி’ மாற்று அரசியலைக் கொண்டுவரும் நோக்கத்தில்,தேர்தலில் களம் இறங்க இருக்கிறார்களாம்.ஜெயலலிதாவை எதிர்த்து, வசீகரனையும்,கருணாநிதியை எதிர்த்து, ட்ராபிக் ராமசாமியையும் கள்ம் இறக்குகிறதாம். வசீகரனும், டிராபிக் ராமசுவாமியும்,இரு தலைவர்களுக்கும் தண்ணி காட்டுவோம் என்று சபதமே போட்டிருக்கிறார்களாம்.

9. கி.வீரமணியின் அறிக்கை வேறு அனல் கக்குகிறதாம். ‘குட்டக் குட்டக் குனியும் நிலை தேவையில்லை’ என்றும்,’விட்டுக் கொடுத்து கெட்டுப் போன பழைய வரலாறு மீண்டும் திரும்ப வேண்டாம்’ என்றும், நீளும் அந்த அறிக்கை, கலைஞரின் சம்மதத்துடன் வெளிவந்திருக்குமோ என்றும், அரசியல் நோக்கர்கள் யோசிக்கிறார்களாம்.

10. காலத்தின் வேகத்தில் சில பெயர்கள் நமக்கு மறந்திருக்கும். தோட்டத்துக்கு வேண்டியவருடன் , ஆனால் வேண்டதவர்போல் காட்டப்படுபவருடன் தொடர்புள்ள பெண்ணாகக் காட்டப்பட்டவர் அன்றைய ‘செரீனா’. தன்மீது கஞ்சா வழக்குப் போட்டு உள்ளே தள்ளியவர்களைப் பழிவாங்கவேண்டும் என்பது ‘செரீனா’வின் சத்தமில்லாத சபதமாம். தற்போது, திருமணம் செய்து கொள்ளப்போகும் அவர், திருமணத்துக்குப் பின் கணவரின் துணையுடன், தி.மு.க.வில் இணைந்து, அரசியல் பணீயாற்றப் போகிறார், என்கிறார்கள்.

11.செரீனா- விவகாரம் போலவே இன்னொரு விஷயமும் புகைஞ்சிக்கிட்டு இருக்கு. ஒரு காலத்தில் , காவல்துறையைக் கலக்கிய ‘சிவகாசி-ஜெயலட்சுமி’ இப்ப அரசியல் களத்தைக் கலக்கியே தீருவேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காராம். ”என்னைக் கைது பண்ணி, சிறையில் அடைத்தது ஜெயலலிதாதான். அவுங்க நினைச்சிருந்தா, என்னோட பிரச்சினையை திரைமறைவில் ஸால்வ் பண்ணியிருக்கலாம்.வாழ்க்கையையே தொலைத்து இருட்டில் இருந்த எனக்கு வெளிச்சத்தைக் காட்டியது, க்லைஞர் ஆட்சிதான்.ஒரு பெண் என்றுகூடப் பார்க்காமல், என் எதிகாலத்தை நசுக்கிய ஜெயலலிதாவுக்கு,தேர்தல் நேரத்தில் சரியான பாடம் புகட்டியே தீருவேன்.அவுங்க எந்த தொகுதியில் நின்னாலும்,அங்க போய் அவுங்களை எதிர்த்துப் பிரச்சாரம் பண்ணப் போறேன்.சென்னைக்குப் போய், எங்க இனத்துக்காரரன ஆற்காட்டாரைச் சந்திச்சு, அவர் மூலம் கலைஞர்ட்ட இதுக்கான அனுமதிய நான் வாங்கிடுவேன். அப்புறம் பாருங்க இந்த ஜெயாவை”ங்குறாரம்.இப்படியாகப் போகுதுங்க அரசியல் களம்.

Advertisements