கிரிக்கெட் கார்ட்டூன்

தலைவர கிரிக்கெட் மேட்சு அவார்டுக்கு அனுப்புனது தப்பா போச்சு…

ஏன்?

அங்க போய் “மேன் அஃப் த மேட்ச்” நீங்க குடுங்க… “வுமன் அப்ஃ த மேட்ச” நான் பாத்துக்குறேன்னு சொல்லிட்டாரு

 

——————

 

தலைவர் கமென்டரி கொடுக்க போய் சொதப்பிட்டாராமே…

ஆமா.. யார் ஜெயிப்பாங்கன்னு டிஸ்கஸ் பண்ண சொன்னா ” தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்… இறுதியில் தர்மமே வெல்லும்னு” சொல்லிட்டாரே!

————————–

தலைவரோட ஐபிஎல் டீம் பணம் வாங்கிட்டு தோத்து போனத தலைவர் மூணே வார்த்தையில் சமாளிச்சுட்டாரா … எப்படி?

“ஐபிஎல்லுல இதெல்லாம் சகஜமப்பா”  ன்னு சொல்லிட்டாரு

—————-

கிரிக்கெட் மேட்சுக்கு வந்திருக்குற அந்த தலைவர் காங்கிரஸ் கட்சின்னு எப்படி கண்டுபிடிச்ச?

ஆமாம்… “மீண்டும் கபில்தேவ் ஆட்சியை மலரச் செய்வோம்” னு போர்டு புடிச்சிருக்காரே!

—————————

தலைவர் ஐபிஎல் டீம்ல நிறைய ப்ளேயர்ஸ் இந்த முறை ஏலத்துல வேற டீமுக்கு போயிட்டாங்களே….

தலைவரே வேற டீமுக்கு தாவிட்டாரு … நீ வேற!

—————————

நம்ம தலைவரோட தமிழார்வம் லிமிட்டு தாண்டி போயிடுச்சின்னு எத வசிச் சொல்ற?

ஆமா… சென்னை நடக்குற மேட்சுல அம்பைர் நோ பாலுக்கு “இல்லை பால்” அவுட்டுன்னு வெளிய போ..ன்னெல்லாம் தமிழ்ல சொல்லணும் இல்லைன்னா மேட்சே நடத்த உட மாட்டோம்னு ஆர்ப்பாட்டம் பண்ண போறாராமே!

——————————-

 

யோவ் என்னயா இது தலைவரோட ஐபிஎல் டீமுல ஒம்பது பேரு தான இருக்காங்க ரெண்டு குறையுதேயா…

ரெண்டு பேர் வெளிய இருந்து ஆதரவு குடுப்பாங்க… நான் எப்படியும் மெஜாரிட்டிய நிரூபிப்பேன்னு தலைவர் தில்லா சொல்றாரே…

———————–

தலைவருக்கு நமிதா புடிக்காது த்ரிஷா தான் புடிக்கும்னு எப்படி சொல்ற?

ஃபுட்பால் மேட்ச விட்டுட்டு கிரிக்கெட் மேட்சுக்கு வந்திருக்காரே… அத வச்சித்தான்!

————————-

தலைவர் ஏன் இந்தியா உலகக்கோப்பை ஜெயிக்கணும்னு இவ்வளவு துடிப்பா இருக்காரு?

இந்தியா ஜெயிச்சா “2011 நமதே!” ன்னு நான் அன்னிக்கே சொன்னேன் பாருங்கன்னு சொல்லிக்குவாராம்!

———————-

 

தலைவருக்கு கிரிக்கெட் பத்தி ஒரு மண்ணும் தெரியாதுன்னு எப்படி சொல்ற…

பின்ன என்ன… “டேய் நாம் கேக்குற பணத்த கொடுத்தா மேட்ச நடத்த விடுவோம்… இல்லன்னா.. மேட்சு பொட்டிய தூக்கிட்டு வந்திடுவோம்னு சொல்லு” ன்னு சொல்றாரே

 

—————————

 

 

 

Advertisements