கோயிலில் தேங்காய் உடைப்பது

1. கேள்வி:- ஹோமம் நடக்குமபோது, கர்ப்பஸத்ரீகள் அருகில் இருக்கலாமா?
பதில்:-இருக்கவேண்டியது மிகவும் அவசியம். கர்ப்ப ஸ்த்ரீகளுக்கு, நல்ல முறையில் குழந்தை பிறக்கவும், தொடர்ந்து அவர்களது வம்சம் விருத்தி அடையவும்,பலவிதமான சடங்குகளைச் செய்யச் சொல்லி,சாத்திரங்கள் கூறியுள்ளன. இவற்றில் முக்கியமான சடங்குகளாகிய பும்சவனம்,சீமந்தம்(வளைகாப்பு) போன்றவற்றை ஹோமத்துடன்தான் செய்யவேண்டும். எனவே ஹோமம் நடைபெறும் இடங்களில் கர்ப்பஸ்த்ரீகள் அவசியம் இருக்கவேண்டும். இது அவர்களுக்கும் வயிற்றிலுள்ள குழந்தைக்கும் மிகமிக நல்லது.

2.கேள்வி:- கோவில் முன் சிதறுகாய் உடைத்துவிட்டு, சிதறிய தேங்காயைச் சாப்பிடலாமா?
பதில்:-சிதறுகாய் உடைப்பது என்பது, நமது செயல்பாடுகளில் வரும் தடைகள் சிதறி விலகவேண்டும்.என்பதற்காகவும், அவை வெற்றியடையவேண்டும் என்பதற்காகவும் செய்யப்படுகின்ற பிரார்த்தனையாகும்.அதை பிறர் புசிப்பதுதான் சிறந்தது.உடைப்பவர்களே அதை எடுத்துக்கொள்வது பொருத்தமாகாது.

3.கேள்வி:-வீடடில் கணபதி ஹோமம் அடிக்கடி செய்வது நல்ல விஷயம்தானா? அதனால் உண்டாகும் பலன் என்ன?
பதில்:-பூஜை செய்தால் எல்லா நன்மைகளும் கிட்டும். அதைவிட உயர்ந்தது ஹோமம். அதிலும் கணபதி ஹோமம் மிகமிக உயர்ந்தது. வசதி இருந்தால் தினம்தினம்கூட, வீட்டில் கணபதிஹோமம் செய்யலாம்.

4. கேள்வி:-வீடைவிட்டு வெளியே செல்லும்போதும்,பிரயாணம் கிளம்பும்போதும் சகுனம் பார்த்துத்தான் செல்லவேண்டுமா?
பதில்:- சகுனம் பார்ப்பது என்பது சாத்திரங்களில் உள்ள விஷயம்தான். ஒரு நல்ல காரியத்துக்காக நாம் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது சுமங்கலிப் பெண்கள் ,மங்கலப் பொருட்கள் போன்றவை எதிரில் வந்தால், காரியம் ஜெயமாகும் என்றும், எண்ணெய் ,இரும்பு ,ஆயதங்கள் போன்ற பொருட்களை எடுத்து யாராவது எதிரில் வந்தால்,செல்லும் காரியம் ஜெயமாகாது; மற்றும் ரத்தக் காயங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் எல்லாமே அனுபவ உண்மையும்கூட. நமது நன்மைக்காகத்தான் இவை கூறப்பட்டுள்ளன.பஞ்சாங்கங்களில் சகுனம் சம்பந்தமான விஷயங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

5.கேள்வி:-திருநீறை நெற்றியில் இடும்போது,விபூதி
கீழே சிந்தக்கூடாது என்கிறார்களே, வானத்தைப் பார்த்துத்தான் பூசவேண்டுமா?
பதில்:-விபூதியைக் கீழே சிந்தாமல் இட்டுக்கொள்ளவேண்டும். அதற்காக வானத்தையெல்லாம் பார்த்துக் கஷ்டப்படத் தேவையில்லை. விபூதியை வலது கை விரல்களில் பூசி எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ளுங்கள். மீதம் உள்ள விபூதியை இரண்டு கைகளிலும் பூசி,உடம்பு முழுவதும் பூசிக்கொள்ளுங்கள். கீழே சிந்தாது.

6.கேள்வி:-இந்த நவீன விஞ்ஞான யுகத்தில், ஜாதகம் பார்ப்பது அவசியம்தானா?
பதில்:-தகவல் தொடர்பு சாதனங்களுக்கு ஆதாரமாகத் திகழ்வன கோள்கள்தானே! இன்றைக்கு செயற்கைக் கோள்கள் விடுவதற்கு முன்னுதாராணமாக இருப்பவை நவக்கிரகங்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. புதுமை என்பது பழமையிலிருந்து தோன்றுவதுதான். எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத காலத்தில், ஞானிகளீன் தவத்தினால் கண்டறியப்படுபவை கிரகங்கள். அவற்றின் பாதையையும் சுழற்சியையும் வைத்து உலகின் இயக்கமும், மனித வாழ்வில் முறைகளும் நிகழ்கின்றன என்பதைக் கண்டுபிடித்தது அன்றைய மெய்ஞானம்.

Advertisements