கருணாநிதி, சோனியா காந்தி, ராகுல் காந்தி

 

காங்கிரசுக்கு அசெம்ப்ளில எத்தன சீட்டுன்னு கூட்டணில பிரச்சினையா?

இல்ல… திமுகவுக்கு திஹார் ஜெயில்ல எத்தன சீட்டுன்னு பிரச்சினை….

 

———————————

 

ஏம்பா… தலைவர் காங்கிரஸ் காரவுங்க 234 சீட்டும்  கேக்குறாங்கன்னு சொல்றாரே உண்மையா?

தலைவர் என்னிக்கு உண்மை ஏசியிருக்காரு .. குறும்பு…

 

—————————————

 

அழகிரி சோனியா கூட பேச்சு நடத்த போயிருக்காரே… ஹிந்தியும் இங்கிலீஷும் தெரியாம என்ன தான் பேசுவாரு?

எதுக்கு பேசணும்… நம்பர் பிரச்சினைதானே… சந்தைல மாடு வாங்குற மாதிரி விரல் புடிச்சே பேரம் பேசிடலாம்…

 

—————————————

 

காங்கிரஸ் இத்தன சீட்டு வாங்கி என்னதான் பண்ணுவாங்க…

என்னப்பா பேசற… ஒரு கோஷ்டிக்கு ஒரு சீட்டுன்னா கூட அவிங்களுக்கு 234 சீட்டு தேவப்படுமே….

——————————-

 

கம்யூனிஸ்டுங்க ஏன் “நாங்க திமுகவில சேரமாட்டோம்… சேரமாட்டோம்”னு அறிக்கை விடுறாங்க…

அது “விளையாட்டுக்கு சேத்துக்காத பாப்பா சைடுல நின்னு நான் விளையாட்டுக்கு வரலன்னு சொல்ற மாதிரி…

——————————

 

கலைஞர் வழக்கமா இதயத்துல இடம் குடுப்பாரே… அதையாவது காங்கிரசுக்கு தரலாமே….

இவர் தரத் தயார்தான்.. ஆனா காங்கிரஸ் தான் அங்க நிறைய கூட்டமா இருக்கு நாங்க சட்டசபைலயே இடம் பார்த்துக்குறோம்னு சொல்லிட்டாங்களாம்…

 

—————————————

 

இதெல்லாமே 2 G  விவகாரத்தாலே நடந்துதுன்னு சொல்றாங்களே ….

அட இல்லப்பா… கொஞ்ச  நாள் பொறுத்து முரசொலில கடிதம் படி… அப்பத்தான் இது தமிழினத்துக்காக நடந்த தியாகம்னு தெளிவா புரியும்…

———————————

 

Advertisements