‘உலக மகளிர் தினத்தின் நூற்றாண்டு விழாவை உலகமெங்கும் கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில்,பெண்களுக்கு எதிராக நடக்கும்கொடுமைகளைநினைத்தால்கவலையாகத்தானிருக்கிறது.

வயது வித்தியாசமின்றி சிறு குழந்தைகள் முதல்,வயது முதிர்ந்த பெண்கள்வரை,தினம்தினம்பலவீடுகளில்,தெருக்களில்,பேருந்துகளில்,

ரயில்களில்,உணவகங்களில்,மசாஜ் பார்லர்களில் பாலியல் ரீதியாகவும்,மனரீதியாகவும் பலரின் சுயநலத்திற்காக பயன்படுத்தப் பட்டு,வன் கொடுமைக்கு ஆளாக்கப் படுகிறார்கள்.[WOMEN ARE EXPLOITED].ஏன் நம் சமூகத்தில்,இந்த 21-ம் நூற்றாண்டில் இப்படி ஒரு அவல நிலை?காட்டுமிராண்டித்தனம்?நம் நாட்டின் பல பகுதிகளில்பெண்களின் நிலை இன்னமும் 18-ம் நூற்றாண்டிலேயே இருக்கிறது என்பது ஒரு சோர்வு தரும் செய்தியாகும்.

பெண்ணுரிமை,மாதர் முன்னேற்றம்,பெண்ணியம் என்று நாம் பேசிக்கொண்டிருந்தாலும்,பெண்சிசுக்கொலையும்,பெண்ணடிமைத்தனங்களும்,பாலியல் பலாத்காரங்களும் நாடெங்கிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

நம் அரசால் பெண்களும்,பெண்குழந்தைகளும் காக்கப்பட வேண்டும்.பெண்களுக்கு எதிராக தீங்கிழைப்பவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய அந்தஸ்துடன் இருந்தாலும் உடனடியாக தண்டிக்கப் படவேண்டும்.சமூகத்தில் பெண்கள் மதிக்கப்பட வேண்டும்.ஒரு பெண் மற்றொருவரின் மகள்,தமக்கை,மனைவி,தாய் என்பதை மறந்துவிடக் கூடாது.நிற்க.

இவ்வளவு பின்னடைவுகளுக்கு இடையிலும் நம் நாட்டில் பெண்கள் முன்னேறி இருக்கிறார்களா?என்று கேட்டால்,நிச்சயமாக முன்னேறி இருக்கிறார்கள்.இந்தியாவில் பல துறைகளில்,ஏன் அனைத்து துறைகளிலும் தங்களின் தடத்தைப் பதித்திருக்கிறார்கள்.“ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்” என்ற சொற்றொடருக்கு ஏற்ப அனைத்து துறைகளிலும் சாதித்துக் கொண்டிருப்பதுடன்,நம் இந்தியத் திருநாட்டை 21-ம் நூற்றாண்டுக்கு இட்டுச் செல்வதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள் என்பது திண்ணம்.

அப்படிப்பட்ட சாதனைப் பெண்களைப் பற்றிய தொடர் ஆங்கில நாளிதழான THE HINDU-வில் ஒவ்வொரு வாரமும்[sunday magazine] வருகிறது.அனைவரும் படிக்கவும்.அப்படி இந்த வாரம் வந்த சாதனைப் பெண் அடையார் புற்று நோய் மையத்தின் தலைவி,மகசேசே விருது பெற்ற டாக்டர் சாந்தா அவர்கள்.அவரின் சாதனையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்,அடையார் புற்று நோய் மையத்தை தோற்றுவித்த இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ,மங்கையர் குல மாணிக்கமான புதுக்கோட்டையில் பிறந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியைப் பற்றி தெரிந்து கொள்வோம்.அவரைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

மூன்றாம் கோணத்தில் மகளிரின் பதிவுகளும்,பங்களிப்பும் 33 சதவிகிதத்திற்கும் அதிகமாகவே உள்ளது என்பது மகிழ்ச்சிக்குரியது என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

diet-b

படங்கள்:இணையம்

 

Advertisements