ராணா ரஜினி

 

1.வாள் சண்டை போடப் போறாராம் ‘ராணா’ வின் ரஜினி! மன்னர் காலப் படங்களில் கத்திச் சண்டை அவசியம் என்பதால், வாள்- சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.’ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆரின் கத்திச் சண்டை மகா பிரசித்தம் என்பதால், ‘ராணா’ வில் அதையும்தான் ஒருகை பாத்துடலாம் என்று கத்திய தூக்கிட்டாராமே, நம்ம ரஜினி! இந்தப் படத்தில் சீனியர் ரஜினியுடன், பாலிவுட் ரேகா நடிக்கிறார். நீலாம்பரி சாயல்கொண்ட வில்லத்தனம் நிரம்பிய வேடமாம் அது.

 

Simbu

2.சிம்புவின் திருமணம் தள்ளிப் போகுதாம்.தங்கை இலக்கியாவுக்குத் தீவிரமாக மாப்பிள்ளை பார்க்கிறார்களாம்.அவரது திருமணத்தை அடுத்தே சிம்புவுக்காம்.

Sona tamil actress

3. தனது பியூட்டி பார்லர் 4 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைப் பெரிய நிகழ்வாகக் கொண்டாட இருக்கிறார் நடிகை சோனா. நிகழ்ச்சிக்கு வருவதாக உறுதியளித்திருக்கிறாராம் ,ஐஸ்வர்யாராய்.

Lara Dutta - Mahesh Bhupathi - wedding photos

 

4. லாரா தத்தாவும், மகேஷ்பூபதியும் இப்போது தம்பதிகள். கடந்த வாரம் கோவாவில் பிரபல டென்னிஸ் வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் முன்னிலையில் நடந்தது, திருமணம். ‘ முதல் முறை உன்னைப் பார்த்ததிலிருந்தே, இந்த நாளுக்காகக் காத்திருந்தேன்’ என்று பரவசப்பட்டராம் மகேஷ் பூபதி. ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ ஆயிரம் காலம் வாழட்டும்!

5. மகள் நடிகையாகணும்னு பூர்ணாவின் அம்மாவுக்கு ஆசையாம்.அம்மா ஆசையை நிறைவேத்தத்தான் நடிகையானாராம், மகள்.

6. எஸ்.ஏ. சந்திரசேகர் டைரக்ட் பண்ற’ சட்டப்படி குற்றம்’ படத்தில நடிக்கிற சத்யராஜ் அதுல ‘சேகுவாரா’ கெட்டப்ல வர்ரார். விவேகானந்தர் சொன்னபடி, பவர்புல்லான இளைஞர்களை வச்சு சமுதாயத்தை மாத்தறாராம் அவர், படத்துலதான்.

Advertisements