2011 தேர்தல் நெருங்குகிறது… இந்த தேர்தல் ஒரு வித்தியாசமான சூழலில் வந்திருக்கிறது… அனுதாப அலை இல்லை… எம்.ஜி.ஆர் ஈர்ப்பு சக்தி இல்லை…மத்தியில் தேர்தலுடன் சேர்ந்து வராததால் யார் மத்தியில் ஆளப் போகிறார்கள் என்ற திசை திருப்பும் கவனச்சிதறல்கள் இல்லை… இது அரசியல் காரணங்களுக்காகவும் அரசு நிபுணத்துக்காகவும் தமிழகம் தன்னை ஆளபவரை தேர்ந்தெடுக்கப் போகும் ஒரு புரட்சி தேர்தல்… போன முறை இலவசங்கள் ( கலர் டிவி) கவர்திழுத்த அளவு இந்தமமுறை கலைஞரின் வீடு திட்டம் கவர்ந்திழுக்கவில்லை என்றே ஆரம்ப அறிகுறிகள் தெரிகின்றன… ஆக … இந்த தேர்தலில் என்ன விஷயங்கள் நம் கவனத்தை ஆக்ரமிக்கப் போகின்றன என்று பார்ப்போம்…

முதலில் நம் கவனத்துக்கு வருவது இலங்கையில் நம் இனத்தவர் சந்திந்த வரலாறு காணாத படுகொலை… அது நம் தமிழக் தேர்தலை எந்த அளவுக்கு  பாதிக்கும்?

இலங்கை அரசுக்கு நம் மத்திய அரசு செய்த உதவிகளும் அதற்கு கலைஞர் அரசு பாராமுகமாய் இருந்ததும்  அதனால் பல லட்சம் பேர் மாண்டதையும் நாம் மறந்து விட முடியுமா? அது இந்த தேர்தலில் எந்த அளவுக்கு திமுகவுக்கும் காங்கிரசுக்கும் எதிராக இருக்கும்?

அடுத்தது சமீபத்திய வரலாறு காணா 2 G ஊழல்…. திமுக ஒரு ஊழல் கட்சி என்ற இமேஜை இந்தியா முழுக்க பதிய வைத்த இந்த ஊழலை தமிழக மக்கள் எந்த அளவுக்கு மனதில வைத்து வாக்களிப்பார்கள்?

திமுக மட்டுமல்லாது இது காங்கிரசையும் பாதிக்குமா?

அடுத்த முக்கிய ஃபேக்டர்…. விஜய்காந்த்… சென்ற தேர்தலில் வந்து தனித்து நின்று 7 சதவிகிதம் ஓட்டு பெற்று திமுகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரித்த விஜய்காந்த் இப்போது ஜெயலலிதாவுடன் இணைந்திருக்கிறார்… இது என்னென்ன பாதிப்புக்களை ஏற்படுத்தும்?

ஊழலை எதிர்த்து பேசி… அவங்க இல்லன்னா இவங்க இவங்க இல்லன்னா அவங்க என்று மாறி மாறி வாக்களித்து ஊழல் ஆட்சிக்கே அடிமையாயிருக்கப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பி மக்கள் கவனத்தை ஈர்த்த விஜய்காந்த் இப்போது இன்று வரை ஊழல் வழக்குகளில் நீதிமன்றப் படிகளில் ஏறும் ஜெயலலிதாவுடன் இணைந்திருப்பது இரண்டு விதமான கேள்விகளை நம் முன் வைக்கிறது… ஒன்று …..இது இந்த தேர்தலில் எந்த அளவு திமுகவை பாதிக்கும்… அடுத்த கேள்வி… விஜய்காந்த் என்ற மூன்றாம் சக்தியை இந்த கூட்டணி குறைத்து விடுமா? வைகோ கூர் மழுங்கிப் போனது போல் விஜய்காந்தும் ஆவாரா?

பதி தர வேண்டியது நீங்கள் தான்…..

 

 

[SURVEYS 1]

Advertisements