விஜய் வடிவேலு

விஜய் வடிவேலு

1. நடிகர் விஜய் ரசிகர்களுக்கு என்ன கோபமோ தெரியல. நேற்று சிட்டியில் வைக்கப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றினார்களாம். நடிகர் விஜய், அ.தி.மு.க. தலைவர் ஜெ.வுடனும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துடனும், இணைந்து ஓட்டு கேட்பது போலிருந்ததாம் அந்த போஸ்டர்கள். . வெகுண்ட ரசிகர்கள் போஸ்டர்களை அகற்றியதாக செய்தி.விஜய் அ.தி.மு,க.கூட்டணிக்குத்தானே, சப்போர்ட்டு? அரசியலுக்கு வந்தாச்சுல்ல? அப்புறம் ஏன் ஜகா வாங்குகிறார்? ஏதோ, எங்கேயோ குழப்பம்……?

2. அண்ணாசாலை ‘வோல்டாஸ் ‘ நிலம் வெறும் 25 கோடிக்கு விற்கப்பட்டிருப்பதாகவும், வாங்கியவர், ராசாத்தி அம்மாளின் பினாமி என்றும், நிலத்தின் உண்மையான மதிப்பு, 350 கோடி என்றும் எதிர்கட்சித் தலைவர், ஜெ.பிரச்சாரத்தில் , நிரூபணங்களோடு, விளாசித் தள்ளுவாராம். அண்மையில், ராசாத்தி அம்மாவின் பினாமியாகச் சந்தேகிக்கப்படும் சண்முகனாதன் கோத்தகிரியின் ‘வின்ஸ்டர் எஸ்டேட்’ டை வாங்கியிருக்கிறாராம், அந்த எஸ்டேட்டை எல்லோரும் ‘கனிமொழி எஸ்டேட்’ என்றுதான் குறிப்பிடுவார்களாம். இதுபோன்று கைவசம் நிறைய வைத்திருக்கிறார்களாம் எதிர்கட்சியினர்.போட்டுத் தாக்கு!…. போட்டுத் தாக்கு!… தேர்தல் வருது!….போட்டுத் தாக்கு!…

3. உசிலம்பட்டி அ.தி.மு.க. அழகிரியிடம் விற்கப்பட்டுவிட்டதாம். தென்மாவட்டங்களில் பலமாக உள்ள அ.தி.மு,க.வை பலவீனப்படுத்தும் விதமாக, அழகிரி ஃபார்முலா செயல்படுத்தப்பட்டு, அதன்மூலம் பலர் வளைக்கப்பட்டு வருகின்றனராம். நகர செயலாளரான பூமாராசாவும் அவரது மகன் ரவிக்குமாரும் அழகிரி பக்கம் சாய்வதற்கு அச்சாரமாக, நகராட்சி பொது நிதியின் கீழ் உள்ள காண்ட்ராக்ட் வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

4. திசை தெரியாமல் தி.மு,க.வில் சில முக்கியத் தலைவர்கள் தவிக்கிறார்களாம். அ.தி.மு.க.வின் நம்பிகைக்கு உரியவராக இருந்த வழக்கறிஞர் ஜோதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான அனிதா ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் முத்துசாமி, கரூர் சின்னசாமி, முதலியோர் இப்போது இருக்கும் இடமே தெரியவில்லை. இதைப் போல, ஒரு பெரிய கூட்டமே உண்டு. முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி,அழகு திருநாவுக்கரசு, ராமனாதபுரம் மாவட்ட செயலாளர் சத்தியமூர்தி, தற்போதைய எம்.எல்.ஏ.க்களான, கோவில்பட்டி ராதாகிருஷ்ணன், பெரம்பலூர் ராஜேந்திரன் ஆகியோரும் , அ.தி.மு.க. விலிருந்து விலகி, தி.மு.க.வில். திக்கு திசை தெரியாமல் தவிப்பதாகச் சொல்கிறார்கள். ம.தி.மு.க.வின் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் இவர்களும் அந்த லிஸ்ட்தான். தேர்தலில் சீட் கிடைத்தால் பிழைத்துக் கொள்வார்கள். அங்கப் பிரதட்சணம், மண்சோறு இதெல்லாமும் முடியாது. ஏன்னா, இது பகுத்தறிவுக் கட்சியாச்சே!.

5. பா.ம.க.வீட்டுத் திருமணத்துக்கு வருகை புரிந்த சூப்பர்ஸ்டாரை, மகிழ்ச்சியோடு வரவேற்றனர், அப்பாவும் மகனும்; விசிலடித்து வரவேற்றனர், தொண்டர்கள். அந்த ஸ்டாருக்காக விசிலடித்தவர்களைத்தான் , ஒரு காலத்தில் காய்ச்சி எடுத்தனர் தந்தையும், மகனும்!

6. எங்கே போனாலும் கூட்டணிக்குக் குண்டு வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும், நிறைய இனிஷியல் கொண்ட கதர் சட்டைக்கார முக்கியப் புள்ளி, கூட்டணித் தலைவரின் சொந்த ஊரான திருவாரூருக்கு வந்து, நடிகர் திலகத்தின் சமூகநலப் பேரவையினர் நடத்திய பொதுக் கூட்டத்தில், கூட்டணிக்கு எதிரான பேச்சுக்களைக் குறைத்துக் கொண்டாராம். ஆனாலும் ‘திலகம்’ பேசிய ‘பராசக்தி’ ‘மனோகரா’ வசனத்தால்தான் இப்போதைய முதல்வர், சிறந்த வசனகர்த்தா ஆக முடிந்தது , என்று சொல்லாமல் விடவில்லையாம். ‘ஐவர்’ குழுவில் இடம் கொடுக்காததால், ஏற்பட்ட விரக்தியில் ‘சிவாஜி நலப் பேரவை’ என்ற தனி அமைப்பைத் தொடங்கி தனி ஆவர்த்தனம் நடத்துகிறாராம்,இவர். ஆனால், வேறெந்தத் தலைவரும், இந்த் கூட்டத்தை எட்டிக் கூடப் பார்க்கவில்லையாம். ஊருக்குத் தகுந்த பேச்சு பேசணுங்க. யாரோட ஊருக்கு வந்து என்ன பேச்சு பேசுறீங்கன்னு நொந்துக்கப் போறாங்க ஜனங்க.!

7. விஜயகாந்த் எந்த தொகுதியில் நின்னாலும், மற்ற கட்சிகளின் ஆதரவோட விஜயகாந்த்தை எதிர்த்துப் போட்டி போடுவேன்னு நடிகர் வடிவேலு சொன்னதை ஞாபகப்படுத்திக் கேட்டால், தவறாமல் தேர்தல் நேரத்தில் தன்னுடைய ரீயாக்ஷனைக் காட்டுவதாகக் கூறுகிறாராம் நடிகர் வடிவேலு. டம்மி பீசின் சவாலும் டம்மி தானோ!  ‘நடிகர் வெர்ஸஸ் நடிகர்’ ங்குற படம் எப்படி இருக்குன்னு நாமும் பார்க்கலாமே!

Advertisements