1. முதலில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி பற்றிக் கொஞ்சம் பேசிடுவோம்.ஸீட் எண்ணிக்கை, குறிப்பிட்ட தொகுதிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் ஒரு பக்கம் இருந்தாலும், இரண்டு சைடிலும் ஏற்பட்ட கோபதாபங்களே,கூட்டணி ஏற்படுவதை பெருமளவு தடுத்து நிறுத்தின. பேச்சு வார்த்தை நடத்தும்போது, பெரியண்ணன் போக்கு, நிச்சயம் எதிர்பார்க்கும் முடிவுகளைப் பெற்றுத் தராது போல் தோன்றினாலும்  திமுக சுதாரித்து விட்டது.

ஆனால், நேற்றும் இன்றும் நிலைமை கொஞ்சம் மாறி, சாதகமான போக்கில் போனது. 63 இடங்களும் தொகுதிகளும் உடன்பாட்டுக்கு வந்துவிடும். பா.ம.க. தாராள மனதுடன் 1 இடங்களைத் விட்டுத் தந்து முஸ்லீம் லீக் ஒரு இடமும் விட்டத் தந்தன…

2. காங்கிரஸ்-தி.மு.க. பிணக்குகளை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு, ஒரு திட்டத்துடன் பி.ஜே.பி. இருந்தது. ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் மறைந்தே போனது .

3. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சில அதிகாரிகளுக்கு சுதந்திரம் அளித்திருக்கும் பிரதமர் மன்மோகன்சிங் மீதுதான் தி.மு.க.வுக்கு முதல் கோபம். ‘எத்தனை ஸீட் வேண்டுமானாலும் தருகிறோம்…… பிரதமரை மாற்றுங்கள். மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் பதவியில், தாமஸை நியமித்த விஷயத்தில், உச்சநீதிமன்றம் கடுமையான தீர்ப்பு அளித்திருக்கும் இந்த நேரத்தில், இதையே சாக்காக வைத்து அவரை மாற்றுங்கள்.’ என்று காங்கிரஸ் மேலிடத்திடம், தி.மு.க. கோரிக்கை வைத்திருக்கிறதாம். ஓரிரு நாட்களில் டெல்லியில் மாற்றங்கள் வரலாமாம்.

4. தற்போது, தி.மு.க.வுடன் இணைந்திருக்கும் கொங்குநாடு முன்னேற்றக் கழகம், சேர்ந்திருக்கவேண்டியது, அ.தி.மு.க.வுடன்தான். அதிகம் பேச்சு வார்த்த நடத்தியதும் அ.தி.மு.க. வுடன்தான். ஆனால், கொங்கு ஆட்கள், திடீரென்று அறிவாலயத்துக்குப் போனதைக் கண்டு, கோபத்தில் ஆழ்ந்திருக்கிறது, அ.தி.மு.க.. உண்மையில் கோட்டைவிட்டது, செங்கோட்டையன்தான். அ.தி.மு.க.வுடன் கடைசி ரௌண்டில், 6 சீட்டுகள் முடிவாகிவிட்ட நிலையில், ‘அம்மாவுடன் நேரடியாகப் பேசவேண்டும் என்று கொங்கு கேட்க, வெய்ட் பண்ணச் சொன்னாராம் ‘செங்’கு ‘இதே பதிலைத்தான் பல நாட்களாகச் சொல்கிறீர்கள். தி.மு.க.வில் ஹௌஸ்ஃபுல் ஆகப்போகிறது. அங்கு எங்களைப் போகவிடாமல் செய்து, கடைசியில் உங்களிடம் சரணடையச் செய்து, நீங்கள் கொடுப்பதை வாயை மூடிக்கொண்டு ,வாங்கிக் கொண்டு போவோம் என்றுதானே, இப்படிச் சொல்கிறீர்கள்.’ வெளிப்படையாகவெ கேட்டுவிட்டு, தி.மு.க. கூடாரம் நோக்கி ஜூட் விட்டதாம், கொ.மு.க.! சரியான நேரத்தில், கொ.மு.க.வின் கோரிக்கையை, அ.தி.மு.க. மேலிட கவனத்துக்குக் கொண்டு போயிருந்தால், இப்படி நடந்திருக்காது என்று பேசிக் கொள்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள்.

 

5. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால், தி.மு.க.ஓட்டுகளைப் பிரித்துவிடுவார் என்பதால், அவருக்குப் பல வழிகளிலும் முட்டுக்கட்டை போட்ட, தி.மு.க.தரப்பு, விஜய்யின் ‘காவலன்’ படத்துக்கும் முட்டுக்கட்டை போட்டதாம். அதையெல்லாம் தாண்டி, ஜெ.வை சந்தித்தார் விஜய். அவருடைய ‘மக்கள் இயக்கத்’துக்கு அ.தி.மு.க.வில் 8 சீட்கள் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறாதாம். நாகை மீட்டிங் விஜய்க்கு புதுத் தெம்பு கொடுத்திருக்கிறதாம். மார்ச் 2வது வாரத்தில் பிரச்சாரம் துவங்கி, ஏப்ரல் 10 தேதிவரை 50 கூட்டங்கள் தமிழகம் முழுவதும் பரவலாக நடக்குமாம். விஜய் பிரச்சாரம் செய்ய, கிங் ஃபிஷர் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு அமர்த்தும் பணி துவங்கியுள்ளது.அ.தி.மு.க. கூட்டணியை ஆட்சியில் அமர்த்த பல கோடி ரூபாய் திட்டங்களை, விஜய், ரகசியமாக வகுத்துக் கொண்டிருக்கிறாராம்.

6.அ.தி.மு.க.கூட்டணியிலும், கலாட்டாக்கள் இல்லாமல், இல்லை. 41 இடங்களைப் பெற்றுக்கொண்ட தே.மு.தி.க. 25 தொகுதிகளைக் குறிப்பிட்டுக் கேட்கிறதாம். ஹைலைட்டான மேட்டர் என்னன்னா, அ.தி.மு.க. தனக்காக தேந்தெடுத்து வைத்திருக்கும் பிரதானமான தொகுதிகளையெல்லாம் டிமாண்ட் பண்ணியிருந்தாம், தே.மு.தி.க.! 35 சீட்டில் அடம் பிடிக்கும், ம.தி.மு.க.வுக்கு 25 கிடைத்தாலே பெரிதாம். ஆனால், 2 சீட்டுகள் ஒதுக்கப்பட்டிருந்த புதிய தமிழகத்துக்கு கூடுதலாகக் கிடைக்கவும் வாய்ப்புண்டாம். கம்யூனிஸ்ட்டுகள் ஸீட்பேரமும் முடியணும். எல்லா இழுபறியும் முடிவதற்குள் தேர்தலே வந்துடும்போல இருக்கு.

7. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு 3 ஸீட்டுகளை ஒதுக்கியுள்ளது, தி.மு.க.! ”முஸ்லீம்கள், தி.மு.க. ஆட்சியில் தான் பாதுகாப்பாக இருக்கமுடியும். 600க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும் தர்காக்களும் நரேந்திரமோடியின் ஆட்சியில் அடித்து நொறுக்கப்பட்டபோது ,அதனை நியாயப்படுத்திய மோடியை ஆர்.எஸ்.எஸ். மைன்டடுள்ள பத்திரிக்கைகளே கண்டித்தன. ஆனால் அதனைக் கண்டிக்காத ஜெ. மோடியை அழைத்து வாழையிலை விருந்து வைத்தார். முஸ்லீம்களின் இட ஒதுக்கீடுகூட அவருக்கு கேலிக்குரிய விஷயம்தான். ‘இத்தனை வசதி வாய்ப்புகளோடு இருக்கும் உங்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு?’ என்பார். பள்ளி வாசலில் விடியற்காலையில் ஒலிக்கும் பாங்கு நிகழ்ச்சிக்குத் தடை போட்டதும் அவரே. அவருடைய ஆட்சியில் முஸ்லீம்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும். எனவே முஸ்லீம்களின் ஓட்டுகளைச் சிதற விடாமல் சூரியனில் குத்துங்கள்’ என்கிறார், முஸ்லீம் லீக்கின் மாநிலத் தலைவர், பேராசிரியர், காதர் மொய்தீன்.

8. ஒரு ஆன்மீகவாதியிடம் மாட்டிக் கொண்டது, தேர்தல் களம். ‘அம்மா’ பங்காரு அடிகளாரின் மேல்மருவத்தூர், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தப்பட்டது. ஆதி பராசக்தி மருத்துவக் கல்லூரியில் சீட்டுக் கோட்டா, செம்மொழி மாநாட்டுக்கு நன்கொடை இவை ஸ்டாலின் கேட்டு, மறுக்கப்பட்டதால் வந்த வினையாம். இந்த ரெய்டுக்குப் பிறகு, செவ்வாடை பக்தர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதாம். 70 லட்சமாக இருந்த பக்தர்களின் எண்ணிக்கை 1 கோடியாக உயர்ந்ததாம். இதில், 50 லட்சம் பேராவது, தி.மு.க.வுக்கு எதிராகத் திரும்புவதற்கு வாய்ப்பு உள்ளதாம். இப்படியாக, ஜெ. காட்டில், எதிர்பாராத வகையில் ஓட்டு மழை கொட்டப் போகிறதாம். பக்தர்களின் சிக்கல் வலுப்பெற்றதால், திணறுகிறதாம், தி.மு.க.

9. கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. சொல்லும் சீட் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறதாம். இப்படி குறைவான இடங்களில் போட்டியிடுவதைவிட, தேர்தலைப் புறக்கணித்து விடலாமா என்ற ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறதாம்.

10. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர், முதல்வரைச் சந்தித்து தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைய விடாமல் தடுப்பது ப.சி.தான்.அவருக்கு தமிழகத்தின் முதல்வர் நாற்காலி மீது ஒரு கண் இருக்கிறது என்று புஹார் கூறினார்களாம். சந்திப்பு முழுவதும் சிதம்பரத்தின்மீது புஹார்களை அள்ளித் தெளித்தனராம்.’நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறி, அவர்களை முதல்வர் அனுப்பி வைத்தாராம்.

11. புரட்சி பாரதம் கட்சித்தலைவராக இருக்கும் ஜகன் மூர்த்திக்கும் துணை முதல்வருக்கும் கருத்து வேறுபாடாம். திருமாவளவன் ஜகனுக்கு சீட்டு கொடுக்கவேண்டாம் என்கிறாம். துணை முதல்வர் பிறந்த நாளில்,அவரை சமாதானம் செய்யும் வகையில், வாழ்த்துச் சொல்லி, எங்கள் கட்சிக்கு ஒரே ஒரு சீட் கொடுத்தால் போதும்’ என்று கேட்டாராம், ஜகன். துணை முதல்வர் கையில் ,ஜகன் சீட் இருக்கிறது.

12. தமிழக அரசு அலுவலகங்களில்,அவசர அவசரமாக மரபுகளை மீறி,,முதல்வர் கருணாநிதி படத்தை பல அதிகாரிகள் ‘எஸ்கேப்’ செய்துவிட்டனர். அடுத்த முதல்வர் யார் என்ற சந்தேகமா?

Advertisements