ஜெயலலிதா சோனியா காந்தி

ஜெயலலிதா சோனியா காந்தி

ஜெ கிளப்பிய குழப்பம்

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைவதற்கு நிறைய ராஜதந்திரம் பிரயோகிக்கப்பட்டதாக பேசிக்கொள்கிறார்கள். அ.தி.மு.க. வேண்டுமென்றே காங்கிரஸுடன் பேச்சு வார்த்தை நடத்துவது போல் நடித்து, காங்கிரசுக்கு பொய் நம்பிக்கையைக் கொடுத்ததாம். இரண்டு நாட்களுக்கு மேல் தன் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காத காங்கிரஸைப் பார்த்து மிரண்டுபோன தி.மு.க., காங்கிரஸ் கேட்ட தொகுதிகளைக் கொடுத்து காங்கிரஸிடம் பணிந்ததாம். நடராஜன் டெல்லியில் முகாமிட்டு, இந்த நாடகத்துக்கு உயிரூட்டிக் கொண்டிருந்தாராம். பொய் நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்காமல் இருந்தால் சரி. எனக்குத் தெரிந்த ராஜதந்திரம் இன்னும் இரண்டு இருக்குங்க. வாக்குறுதி கொடுத்துவிட்டு பாய்ச்சல் காட்டிக்கொண்டு இருந்த விஜய்காந்தை இரவு 9.30க்கு கார்டனுக்கு ஓட வச்சது யாருங்க? நம்ம அழகிரி அண்ணன் கொடுத்த சூப்பர் கமென்ட்தாங்க.” நண்பர் விஜயகாந்த் தன்மானமுள்ளவர். அவர் அ.தி.மு.க. கூட்டணிக்கெல்லாம் போகமாட்டார்.” னு ஒரு போடு போட்டாரு பாருங்க. கல்யாண மண்டபத்துக்கும் வீட்டுக்குமாக மாற்றி மாற்றி , காங்கிரஸிடமிருந்து ஸிக்னலை எதிபார்த்து, போய் வந்து கொண்டிருந்த ‘ நண்பர்’ விஜயகாந்துக்கு, அழகிரி கமெண்டில் டென்ஷனான கார்டன் தரப்பு , டெட்லைன் ஃபிக்ஸ் பண்ணிவிடவே அதிலிருந்தும், குழப்பத்திலிருந்தும் விடுபட முடிவுசெய்தார், ‘வி’.! .காங்கிரஸிடமிருந்தும் முடிவு வந்தபாடில்லை ‘வெய்ட்…வெய்ட்’தான். எனவே ஓடிப்போனார், கார்டனை நோக்கி. இப்ப காங்கிரஸ் நம்பிக்கை வச்சிருந்த ‘வி’யும் இல்லை. காங்கிரஸ் தனித்து நிற்பது தற்கொலைக்குச் சமமில்லையா? தி.மு.க.வை மிரட்டுவதுபோல் மிரட்டிவிட்டு சேர்ந்துட்டாங்க. இன்னொரு ராஜதந்திரமும் இருக்கு. கலைஞர் ‘வி’ ,ஜெ.வுடன் இணையும்வரை காத்திருந்துவிட்டுத்தானே, ” நியாயமா? 63 நியாயமா?”, ன்னு ஆரம்பிச்சார்?ஆனால்,ஜனங்கள் போடும் ‘ஜன தந்திரம்’ என்னன்னு மே 15ல் தெரிஞ்சிடும்.

 

 

vaiko  வைகோ

“ஜெ. ஒரு துரோகி” – வைகோ புலமபல்

”ஜெ. ஒரு துரோகி!”என்று குமுறுகிறாம், வைகோ. சு.சாமி பேச்சை கேட்டுக் கொண்டு ஜெ. கங்கிரஸுடன் சேரக்கூடத் தயாராகிறாரே. தே.மு.தி.க.வுக்கு 41ஐக் கொடுத்தவர் எத்தனையோ முறை கதவைத் தட்டியும் ,இன்னும் நம்மைக் கூப்பிடக்கூட இல்லையே, என்ற குமுறல் சத்தம் கேட்குதாம்,மாலை 5 மணிக்கு, தாயகத்தில் கூடிய கட்சியின் விவகாரக் குழுவில். மீட்டிங்குக்குத் தலைமை தாங்கிய வைகோவுக்கும் மற்ற தலைவர்களுக்கும் கோபக்கனல் கொழுந்துவிட்டு எரிந்ததாம். இதே கொதிப்பில் இருககும், சி.பி.ஐ. யுடன் 3வது அணி போட்டுடலாமான்னுகூட யோசனையாம். ஆனால், கார்டன் தரப்பு, இவர்கள் எதுவும் செய்துவிடாதபடியும் கண்காணிக்குதாம்.

 

பங்காரு அடிகளார்

செவ்வாடை அரசியல்

வாரிசுப் போர் அரசியலில் மட்டுமின்றி  மேல்மருவத்தூர்-பங்காரு அடிகளாரின் 2 மகன்களிடமும் தீவிரமாக நடக்குதாம். இளைய மகன் அ.தி.மு.க. விடம் போக , மூத்தவர் தி.மு.க.வுக்குப் போனாராம். செவ்வாடை பக்தர்கள் எங்களுக்குத்தான் என்று இரண்டு சைடிலுமே க்ளெய்ம் பண்ணிக்கிறாங்களாம்.

Advertisements