அவர் ’எந்த வீட்டுக்கு..?’ என்று அவனையே திருப்பி கேட்டார் வீட்டை பற்றி எதுவும் தெரியாதவர் போல்..
‘என்னங்க இப்படி சொல்றீங்க.. உங்களை நம்பி தானே நான் கையெழுத்து போட்டு கொடுத்தேன்.. இப்போ இப்படி பேசறீங்களே.. உங்களுக்கே இது நல்லா இருக்கா..?’ என்றான் ஆதங்கத்துடன்
ஒரு மாதிரி சிரித்தார்..
இந்த சிரிப்புக்கு அர்த்தம் ‘நல்லா இருக்குங்குறதுனால தான இதெல்லாம் செய்றோம்’ என்பது போல் இருந்தது.
சிரித்து விட்டு, ‘நீங்க அநாவசியமா எம்மேல கோவப்படுறீங்க.. நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து தங்குனா அவ்வளவு சரியா வராது.. இப்ப இருக்கிற நட்பு கெட்டு போயிடும்.. எல்லாத்த விட முக்கியம் நம்மள்ட இந்த நட்பு தான்.. நாளைக்கு சேர்ந்து தங்கி உங்களுக்கும் எனக்கும் ஏதாவது பிரச்சினை வந்து சண்டை போட்டுகிட்டு போனா அது நல்லா இருக்காது.. பார்க்குறவங்க சிரிப்பாங்க..”
இவனுக்கு எரிச்சலாக வந்தது..  ’என்ன அழகா குழப்புறான் தெரியுமா?’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
‘இப்ப முடிவா என்ன சொல்றீங்க..?’ என்றான் இவன்.
‘இங்கே பாருங்க… வர்ர நாயித்துக்கிழமையன்னிக்கு என் பையனோட பிறந்த நாள் கொண்டாட்டம் வச்சிருக்கேன்.. அந்த வீட்ல தான்.. நீங்க அவசியம் வந்து கலந்துக்கணும்..’ என்று விடைபெற்றார்.
இவன் பேயறைந்தது போல் நின்றான்.
அந்த அரசாங்க அலுவலகம் பிரமாண்டமாய் நின்றது, அங்கே சென்று, கியு நம்பர் எடுத்து, தன் அழைப்புக்கு காத்திருந்து, அழைப்பு வந்ததும் ’ஹவ் மே அய் ஹெல்ப் யு..’ என்று அழகாய் கேட்ட அந்த அதிகாரியிடம் அத்தனையையும் சொல்லி, ‘…. நான் இப்போ புதுசா ஒரு வீட்டிற்கு கையெழுத்து போட்டு எடுக்க முடியுமா..?’ என்றான்.
அந்த சிரிப்பழகி இப்படி சொன்னாள், ‘உங்க கையெழுத்து இருந்ததனால தான் நாங்க வீட்டை குடுத்தோம்.. ஆனா வீட்டை எடுத்தவங்க.. நீங்க இந்த வீட்டில் தங்க விருப்பமில்லை என்றும் வெளியேறிவிட்டதாகவும் சொல்ல நாங்கள் அவர்களது பேருக்கே குறிப்பிட்ட வீட்டை மாற்றி கொடுத்து விட்டோம். ஆகையினால், நீங்கள் இப்போது புதிதாக வீட்டை கையெழுத்து போட்டு எடுக்க வாய்ப்பே இல்லை..’ என்று சொல்ல..
‘ப்ளீஸ்.. எப்படியாவது எனக்கு ஹெல்ப் பண்ன முடியுமா?’ என்று கேட்க
‘இருந்தா தான் நான் சொல்லி இருப்பேனே.. அது தான் எங்கள் பாலிசி.. நான் ஒன்றும் செய்ய முடியாது.. சாரி சார்..’ என்று பாலிசியை பாலிஷாக சொல்லி விடைகொடுத்தார் அந்த பெண்மணி.
அடுத்த நாள் பிறந்த நாள் ஞாயிற்றுக் கிழமை..
நியாயமாக அவன் வசிக்க வேண்டிய வீட்டில்
முதன்மையான உரிமை அவனுக்கிருந்த அந்த வீட்டில்
அந்நியனாக நுழைந்தான்..
அவன்..
Advertisements