Congress-DMK-Chidambaram-Vasan-Thangabalu-Karunanidhi

Congress-DMK-Chidambaram-Vasan-Thangabalu-Karunanidhi

1. மிரட்டி வாங்கிய 63ஐ பிரித்துக் கொடுப்பதுதான் பெரும்பாடாக இருக்கிறதாம். வாசன் கோஷ்டி, சிதம்பரம் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி, ஜெயந்தி நடராஜன் கோஷ்டி என்று மண்டையிடியாம்.தொகுதிப் பங்கீடு நடக்கும்போது, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இளங்கோவன் போட்டியிலிருந்தே ஒதுங்கிக்கொண்டாராம். . தி.மு.க.வை அதிகம் தாக்கிய காரணத்தால், பழிவாங்கிவிடுவார்கள் என்று பின்வாங்கியிருக்கிறார். இருப்பினும், வாசன் தரப்புடன், ஒரு புதிய கூட்டணியை உருவாக்கிக் கொண்டுள்ளார். வாசன் ஆட்களுடன் தன்னுடைய ஆட்களையும் சேர்த்து களத்தில் இறக்கிவிட்டு விடுவாராம். இதுதான் இளங்கோவனின் அதிரடித் திட்டமாம்.

2.’ இந்திய வாக்காளர் பேரவை’ என்ற சர்வே நிறுவனம் வெளியிட்ட ரிப்போர்ட்டில், அ.தி.மு.க.வுக்கு,200 சீட்டுகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ‘ஸ்பெக்ட்ரம்’ என்றால் புரியாது என்ற கணிப்பும் தப்பாம். ‘தமிழ்நாட்டு மந்திரி ஒருவர் திஹார் சிறையில் அடைபட்டிருப்பது தமிழ் நாட்டுக்கு அவமானம்’ என்கிறார்களாம், தஞ்சாவூரில் ஒரு குக்கிராம மக்கள். இலவச டி.வி. பற்றிப் பேச்செடுத்தால், ‘கேபிள் கனெக்ஷன் கொடுக்கவில்லையே’ என்கிறார்களாம். ‘குடும்ப ஆட்சி’யும் விமர்சனத்துக்கு உள்ளாகுதாம். இனிமே சர்வே ரிப்போர்டுகள் நிறைய வரும் . ‘மே’ 13ல் ஜனங்க கொடுப்பதுதான் உண்மையான ரிப்போர்ட்!

3. தே.மு.தி.க. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டசெயலாளர், முருகன் தலைமையில் பலர் அக்கட்சியிலிருந்து விலகி, தி.மு.க.வில் இணைந்தனர்.

4. காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அமைய பா.ம.க.ஒரு இடத்தை விட்டுத் தந்ததற்கு, அன்புமணியே காரணம். கூட்டணி அமைந்தால்தான் , தான் டெல்லி செல்ல முடியும் என்பதால், அப்பாவை ஒரு சீட் விட்டுத்தர சம்மதிக்க வைத்தாராம்.

5. ஒரு சீட் விட்டுத் தந்த இன்னொரு கட்சியான முஸ்லீம் லீக்கில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

6. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்ட சரத் குமாருக்கும் உள்ளுக்குள் எதிர்ப்புதானாம்.

7. பிரணாப் முகர்ஜி , இல்லேன்னா காங்கிரஸ்-தி.மு.க., ஒட்டுறவே ஏற்பட்டிருக்காது. அவர் கவலை அவருக்கு. பட்ஜெட் கூட்டத் தொடர் தடங்கலின்றி முடியணுமே!

8. துணை முதல்வர் ஸ்டாலின் “ஆயிரம் விளக்கு’ அல்லது வேளச்சேரியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து, சைதை துரைசாமியைக் களமிறக்குவார்களாம் .

9. இளைஞர் காங்கிரஸுக்கு 10 சதவீத ஸீட்டுகளை ஒதுக்கச் சொல்லியிருக்கிறாம், ராகுல் காந்தி. அத்துடன் சிட்டிங்க் எம்.எல்.ஏ க்களுக்கும் சீட்டுகள் உறுதியாம்.

10.பீஹார் படு தோல்வியால் இன்னமும் சகஜ நிலமைக்குத் திரும்பாத ‘லாலுப் பிரசாத்’ தனது ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு தமிழக தேர்தலில் 5 ஸீட்டுகள் கொடுத்தால், அ.தி.மு.க.வை ஆதரித்து, பிரச்சாரம் செய்யத் தயார், என்கிறார்.

Advertisements