சிம்பு - கோ படத்தில்

சிம்பு - கோ படத்தில்

‘வானம்’ படத்தை ‘காதலர் தினத்தில் வெளியிட நினைத்து முடியாமல் போனது, சிம்புவுக்கு வருத்தமாம். அதனால்,என்ன? காதலர் தினத்தைக் கொண்டாடியதில் முண்ணனியில் நின்றவர் நடிகர் சிம்பு. பிரபலமான இரவு விடுதியில் தோழிகளுடன் நடனமாடி, பாட்டுப் பாடி,காதலர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தாராம், நடிகர் சிம்பு.

பெண் இயக்குனர் விஜய் பத்மா, தான் டைரக்ட் செய்யும் ‘ நர்த்தகி’ என்ற படத்தில், ஒரு இளைஞன் மன உணர்வின் பாதிப்பில்,பெண்ணாக மாறும்போது, அவன் படும் மன வேதனையை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறாராம். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்,’ புன்னகைப் பூ’ கீதா.

 

 

நடிகை நமீதா

நடிகை நமீதா

ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில், அனைத்துக் கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்ட ஒரு இசை விழாவில் , சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகை நமீதாவுக்கு, ” தமிழ் நாட்டின் செல்ல சீமாட்டி” என்ற பட்டம் சூட்டப்பட்டது. அதை நமீதா மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.

 

prachi desai

நடிகர் அருண் விஜய் நடிக்கும் ‘தடையற தாக்க’ படத்தில் , அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை பிராச்சி தேசாய் நடிக்கிறார். ஒன்ஸ் அபான் எ டைம் ‘ராக் ஆன்’ படத்தில் நடித்தவர்.

Sonakshi Sinha

பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா வின் வாரிசு, சோனாக்ஷி சின்ஹா. ‘தபாங்’ படம் மூலம் அதிரடி கவர்ச்சிப் புயலாக உருவெடுத்தார். கமலின் படம் மூலம் அவரை கோலிவுட்டுக்குக் கொண்டுவர முயற்சி நடக்குது.

சார்மி

சிம்புவின் முதல் நாயகியாக அறிமுகமானாலும், நடிகை சார்மிக்கு தெலுங்கில்தான் அதிக படங்களாம். ஆனாலும், அவருக்கு தமிழில் ஷைன் பண்ணத்தான் ஆசையாம்.அதனால், தெலுங்கில், தான் நடித்த ‘மங்கலா’ என்ற படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடவிருக்கிறாராம்.

Advertisements