அஜித்

அஜித்

1. அ.தி.மு.க. பெரும்பாலும், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் களமிறங்குவதாகப் ப்ளானாம். வி.சி.யும் பா.ம.க.வும் நிற்கும் இடங்களில், தேமு.தி.க.வை நிறுத்தத் திட்டமாம். தி. மு.க.வை நேரடியாகச் சந்திக்க நேரும் தொகுதிகளுக்கும், ஒரு திட்டம் இருக்காம். தி.மு.க. வேட்பாளர்களின் ஜாதகங்களை ஒரு டீம் மூலமா ஜெ. திரட்டி வச்சிருக்கிறாராம். இந்த ஜாதகத்தை எதிர்கொள்ளக்கூடிய ஜாதகங்களைக் கொண்ட அ.தி.மு.க.வினரைக் களம் இறக்குவாராம்.

2. விஜய் ரசிகர் மன்றத்திற்கு, அ.தி.மு.க. கூட்டணியில் 10 இடங்களைக் கேட்டிருந்தார்களாம். ஆனால் 2அல்லது 3 சீட்டுகள்தான் ஒதுக்கப்படும் என்று தெரிந்ததும் அதையும் சேர்த்து, தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கிவிடுங்கள் என வலியுறுத்துகிறாம், எஸ்.ஏ.சி..

3. மனம் வெறுத்துப் போன ம.தி.மு.க. தங்களது நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தை அ.தி.மு.க. மேடைகளில் ஏற வேண்டாம் என்கிறார்களாம்.

4. தேர்தலில், மன்ற அடையாளத்தைப் பயன்படுத்தாமல், தனிப்பட்ட விருப்பம்போல் செயல்படுங்கள், என்கிறாராம், நடிகர் அஜீத்.

5. திருநங்கைகளான ‘ நர்த்தகி’ திரைப் படத்தின் கதாநாயகியான” கல்கி”, தி.மு.க.விலும், மற்றுமொரு திருநங்கையான ”ரோஸ்”, தே.மு.தி.க.விலும், சீட் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். முன்னவர் எம்.ஏ. பட்டதாரி. இரண்டாமவர், எம்.ஈ. பட்டதாரி.

5. வில்லன் நடிகர் ரஞ்சித் இப்ப தனிக்கட்சி தொடங்கி, கொங்கு மண்டல இளாஞர்களைத் திரட்டி, ஒரு கட்சியை ஆரம்பித்து, கொங்கு மண்டலத்திலிருக்கும் 72 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்திருக்கிரார்.

6. தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை போன்ற டெல்டா மாவட்டங்கள்ல, தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டாங்களாம். நடக்கின்ற திமு.க. ஆட்சியில், பெரிய பெரிய காண்ட்ராக்ட் வேலைகளை எடுத்தது, அ.தி.மு.க.புள்ளிகள்தானாம். எல்லாம் திவாகரனின் வலக்கை, இடக்கை போன்றவர்களாம். ஏகத்துக்கும் சம்பாதிச்சாங்களாம். அது அப்படியே தொடரணும் என்பதற்காக, , மறைமுகமா, தி.மு.க. வெற்றிக்குப் பாடுபடுமாம், அ.தி.மு.க. .

7. தொகுதிக்கு 70,அல்லது 75 பேருக்கு மேல் டம்மி வேட்பாளர்களை நிக்க வைக்க, அ.தி.மு.க. முயற்சிக்கிறதாம். அப்பதான் பேலட் பேப்பரில் எலெக்ஷன் நடக்குமாம். எலெக்ட்ரானிக் மெஷினில் அ.தி.மு.க.வுக்கு நம்பிக்கை இல்லையாம். இன்னொரு முயற்சியும் எடுக்கப்படுதாம். தி.மு.க. வேட்பாளரின் பெயர் ‘தமிழ் வேந்தன்’ என்று எதிர் முகாமில் இருந்தால், ‘பூவேந்தன்’, ‘ நாவேந்தன்’ பார்வேந்தன்’ என்பது போன்ற பெயர் உள்ளவர்களைப் பணம் கட்டிச் சேர்க்கணுமாம். அப்பதான் வாக்காளர்கள் குழம்புவாங்களாம். அப்பப்பா… என்னென்ன நடக்குது பாருங்க! ஜன நாயகத்தின் மீதுள்ள நம்பிக்கை அவ்வளவு!

Advertisements