ரஜினி - தனுஷ்

ரஜினி - தனுஷ்

 

‘ஆடுகளம்’ பார்த்த ரஜினி,”எனக்கு, ‘முள்ளும் மலரும்’ மாதிரி உங்களுக்கு ‘ ஆடுகளம்’ அமையும் என்று தனுஷிடம் சொன்னாராம். வஷிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி!
‘ராணா’ வின் திரைக்கதையை ரஜினியே எழுதுகிறாராம். எனவே, இதுவரை திரைக் கதை, டைரக்ஷன் மட்டுமே செய்துவந்த கே.எஸ். ரவிகுமார், வசனம் எழுதும் பொறுப்பை புதிதாக ஏற்று இருக்கிறாராம்.
அடுத்தடுத்தும் டபுள் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க டபுள் ஓ.கே. சொல்கிறாராம் விஜய். மணிரத்னம் நடிக்கும் ஒரு படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறாராம்.

 

 

anushka

‘சிங்கம்’ இந்தியில் ரீமேக் ஆகிறது. அஜய் தேவ்கன் நாயகனாம். ஹீரோயினா புக் பண்ண அனுஷ்காவை நெருங்கியவர்கள், தீயை மிதித்ததுபோல் திரும்பி வந்தார்களாம். காரணம் 2 கோடி கேட்கப்பட்டதாம். தன்னை அணுகுபவர்களிடம், இரட்டை விரலைக் காட்டுகிறாம், அனுஷ்கா.

 

ஜெனிலியா - காதலன் ரித்தீஷ்

ஜெனிலியா - காதலன் ரித்தீஷ்

ரித்திஷ் தேஷ்முக் என்ற ஹிந்தி நடிகருடன் நெருக்கமாகிவிட்டார், ஜெனிலியா. பல விழாக்கள், விருந்துகளில் இருவரும் ஜோடியாகக் கலந்து கொள்கிறார்கள். ஜெனிலியா-ரித்திஷ் காதல் ஓ.கே. செய்யப்பட்டு, இந்தாண்டு இறுதிக்குள் திருமணமாம்.திருமணத்துப் பிறகு ஜெனிலியா நடிக்க மாட்டாராம். மாமியாரின் அன்புக் கட்டளையாம்.

 

ரீமா சென்

ரீமா சென்

ரீமாசென், டெல்லி தொழில் அதிபர்’ ஷிவ் கரண் சிங்’குடனான தன் காதலை ஒத்துக்கொண்டுள்ளாராம். விரைவில் திருமணமாம்.

 

 

Silk Rajini

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ரஜினியாக நடிக்கிறாராம், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா. ஸில்க் ஸ்மிதா தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று ஒரு வானொலிப் பேட்டியில் குறிப்பிட்ட்து., ஸுப்பர் ஸ்டாரைத்தானாம்.

 

Advertisements