சரத்-ராதிகா-ஜெயலலிதா

சரத்-ராதிகா-ஜெயலலிதா

 

1. திருச்சியைச் சேர்ந்த ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா அசெம்பிளி தேர்தலுக்காக போட்டியிடக்கூடும். பங்களாவெல்லாம் ரெடியாம். ஏர்போர்ட்டுக்கு மிக அருகில் அமைந்துள்ள சோலை பங்களாவாம் அது. ஏ.சி. முதலிய வேலைகள் நடந்துகொண்டிருக்கிறாதாம்.

2. துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் போட்டயிடலாம் எனத் தெரிகிறது.

3. திருநாவுக்கரசர் அறந்தாங்கியைக் கேட்கிறார். ஆனால் 25 வருடங்களாகத் தக்க வைத்துக் கொண்டுள்ள அறந்தாங்கியை விட்டுத் தர தி.மு.க.வுக்கு மனமில்லாவிட்டாலும், இறுதியாக காங்கிரஸுக்குத்தான் அறந்தாங்கி, என்றானது.

4. காடுவெட்டிக் குருவுக்கு ‘ஜெயங்கொண்டம்’ தொகுதியைக் கேட்டு, பா.ம.க. ரொம்பவே மெனக்கெட்டதாம். ‘இதில்தான் எங்க கட்சியின் கௌரவமே அடங்கியிருக்கிறது’ என்று உருக்கமாக வைக்கப்பட்ட வேண்டுகோள் தி.மு.க. தலைமையை ரொம்பவே இம்ப்ரஸ் செய்துவிட்டதாம். ‘உங்களுக்காக இதுகூடவா செய்யமாட்டோம்? எடுத்துக்கோங்க ஜெயங்கொண்டத்தை…’என்று முதல்வர் கூறியதில் உருகிப்போன ராமதாஸ், குருவை அழைத்து கலைஞருக்கு நன்றி சொல்ல வைத்தாராம்.

5. சமீபத்தில் ஒரு அ.தி.மு.க. பிரமுகரின் இல்ல விழாவுக்கு, துணை முதல்வரின் செயலாளராக இருக்கும், ரகுபதி, அசோக் வரதன் ஷெட்டி போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் போயிருந்தனராம்.

6. ‘அ.தி.மு.க. அழைத்தால், புரட்சி பாரதம் அதைப் பயன்படுத்திக்கொள்ளும்’ என்கிறார், பூவை ஜெகன் மூர்த்தியார்.

7. தென் மாவட்டங்களில் பவர்ஃபுல் அரசியல் பிரமுகர் என்றால், அது, ‘மணல் மனதர்’ வைகுண்ட ராஜன்தான்.1998ல் தன் சொந்தப் பணத்தை கோடிக் கணக்கில் செலவழித்து நடிகர் ராமராஜனை பாராளுமன்றத்துக்கு அனுப்பியது இவர்தானாம். இப்போதும்கூட, குழப்பத்திலிருந்த சரத்குமாரை அ.தி.மு.க.வுக்குத் தள்ளிக்கொண்டு போனதும் இவர்தானாம். தென் மாவட்டங்களில், அழகிரியை எதிர்கொள்ளும் பொறுப்பை வைகுண்டராஜனுக்குக் கொடுக்கும் ஐடியாவும் ஜெயலலிதாவுக்கு உண்டாம்.

8. புதுச்சேரியில் புதிய கட்சி ஆரம்பித்திருக்கும் ரெங்கசாமி , ஜெ.வை சந்தித்தபோது ‘ நீங்கள் 11 தொகுதியை எடுத்துக்கொண்டு, மீதியைக் கூட்டணிக்குக் கொடுத்துவிடுங்கள்’ என்று சொல்லப்பட்டதாம். மனம் உடைந்துபோன ரெ. வருத்தத்துடன் திரும்பிவிட்டாராம். கூட்டணிக்கு அவர்தான் தலைமை தாங்கவேண்டும் என்று நினைக்கிறாராம். சமாதானப் படலம் நடக்குதாம்.

9. நடிகர் சரத் குமார், ஜெ.வைச் சந்தித்தபோது, ‘200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்’ என்றாராம். ‘ஏன், 234 லும் ஜெயிக்க மாட்டோமா?’ என்றாராம், ஜெயலலிதா.

10. தயாநிதி மாறன் தன் ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டு அழகிரி மூலமா மூவ் பண்ணுகிறாராம்.

11. சமீபத்தில் கலைஞர் டி.வி. அலுவலகத்தில் கனிமொழியும் தயாளு அம்மாவும் விசாரிக்கப்பட்டனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, இருவரும் டாண் டாணென்று பதில் சொன்னார்களாம். கனிமொழி சொன்னதைவிட தயாளு அம்மாவின் தங்கு தடையற்ற பதில்கள் அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்ததாம்.

Advertisements