jayalalitha vijaykanth

jayalalitha vijaykanth

1. மூன்றாவது அதிருப்தி நிலவுகிறது. ஏன்..எதற்காக? என்பது எல்லோருக்கும் தெரியும். கூட்டணிக் கட்சிகள் கேட்ட அவர்களது வெற்றித் தொகுதிகள் அனைத்தையும் அல்லது பெரும்பாலான தொகுதிகளையும் அ.தி.மு.க. அபகரித்துக்கொண்டு விட்டது. யாரையும் கலந்தாலோசிக்கவும் இல்லை, எனத் தெரிகிறது. அதிருப்திக் கட்சிகளான, மார்க்ஸிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் , விஜயகாந்த் தலைமையின் கீழ் இணைந்து மூன்றாவது அணி அமைக்கத் திட்டமிட்டு கலந்தாலோசனை நடத்தி வருகிறார்கள். இது குறித்து அ.தி.மு.க. எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

 

2. வழக்கம்போல இந்த முறையும், வேட்பாளர் தேர்வில் தோழியின் குடும்ப உறுப்பினர் தலையீட்டைத் தவிர்க்க முடியவில்லையாம். நடராஜனின் சகோதரர் கைவண்ணம் கூட பெருமளவில் இருந்ததாம். ‘மொத்தமும் சொதப்பலாயிடும்’ என்ற ரீதியில் , கட்சியின் உயர் நிலை தலைவர்கள் விடுத்த எச்சரிக்கை கண்டு கொள்ளப்படாமல் போனதாம்.

 

3. கடந்த சட்ட மன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு நடந்த பணப் பட்டுவாடாவில்,பல குளறுபடிகள் நடந்தன. அதேபோல் இந்த முறையும் நடக்க வாய்ப்புள்ளது. இதையெல்லாம் அம்மாவின் கவனத்துக்கு கொண்டு போகக் கூடிய ஒரு கட்சியின் தலைவர், இந்த முறை கூட்டணியில் இருக்கக் கூடாது என்றே சிலர் திட்டமிட்டனர்.’சென்டிமென்டாகவே அவர் இருக்கிற கூட்டணி ஜெயிக்காது.’ என அம்மாவின் காதிலேயே ஓதினார்கள். இப்படியாகத்தானே, வை.கோ. தனது மரியாதையை இழக்க நேர்ந்தது.

 

4. வை.கோ.வுடன் உண்மையில் சீட் எண்ணிக்கையில்தான் தடுமாற்றமா என்று தோண்டித் துருவிய போது, வேறுபட்ட தகவல்கள் கசிந்தன. மே மாதப் பிற்பகுதியில் இருந்து, தான் தலைமை ஏற்கப் போகும் சட்ட சபையில் வலுவான எதிர்கட்சிகளோ, பிரபலமான தலைவர்களோ இடம் பெறாமல் தடுக்க வேண்டும் என ஜெயலலிதா இப்போதே திட்டமிடுகிறார், என்றே எண்ணத் தோன்றுகிறது. இன்னொரு காரணமும் இருப்பதாகவே தோன்றுகிறது. ”நான் புலிகள் அமைப்பைத் தடை செய்தவள்.அந்தத் தடையை அவர் வாதாடி உடைத்து விடுவாரா” என்று சில வாரங்களுக்குமுன் கமென்ட் அடித்தாராம், ஜெ.. அம்மாவின் கோபத்துக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இன்னும் ஒன்று! ஆட்சியைப் பிடித்தபின் சிலபல காரணங்களுக்காக மத்திய அரசின் தயவு தேவைப்படும். அப்ப, கூட இருக்கும் இந்தப் புலிக்கட்சி கழட்டி விடப்பட வேண்டிய ஒரு எக்ஃஸ்ட்ரா லக்கேஜ்தானே! சிங்கத் தலைவரே, சாரி, புலித் தலைவரே! உங்க நிலைமை பரிதாபத்துக்குறியது.மூன்றாவது அணியையாவது சரியா செயல்படுத்துங்க. அங்கேயும் போய், ‘நான்தான் தலைமை தாங்குவேன்’னு அடம் புடிச்சு குழப்பீடாதீங்க!

 

5. அ.தி.மு.க. கட்சி வை.கோ. வுக்குச் சொன்னதாம் ’20 சீட் தரத் தயார். ஆனா, இலை சின்னத்தில் போட்டியிடத் தயாரா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டதாம். ‘தன்மானத்தை அடகு வைக்க மாட்டார், இந்த வை.கோ.’ என்று, சீறி பாய்ந்ததாம், பதில். ஜெயலலிதா தன்னை திட்டமிட்டு அவமானப்படுத்துவதைப் புரிந்துகொண்டாராம், வை.கோ.

 

6.’ ரஜினி வாய்ஸ்’ க்காக சூரியன் தரப்பில் பெரியவர் ரஜினியிடம் கேட்டதோடு, ப.சி.யையும் ரஜினியிடம் பேசச் சொன்னாராம். இதைத் தெரிந்து கொண்ட ஜெயலலிதா, சோ.வை அழைத்து ரஜினியிடம் தூது விட்டாரம். இரண்டுக்குமே ‘நோ’ மூடில் இருக்கிறாராம், ”வாய்ஸ் மன்னர்”. ரெடீ…ஒன்..டூ….த்ரீ….ஜூட்! வெய்ட் பண்ணுது இமய மலை!

 

7. ஸீட் இழபறிக்கே 6 நாட்களா என்று வெகுண்டாராம், ராகுல். ஆனால் இளைஞர் காங்கிரஸுக்கான 16 ஸீட்களை நோட் பண்ணியே அனுப்பிட்டாராம்.அதோடு தமிழ்நாட்டில் ஜி.கே.வாசன் பவர்ஃபுல்லா இருப்பது ராகுலுக்கு பிடிக்கவில்லையாம். ஆந்திராவின் ‘ஜெகன்’ மாதிரி ஆவதை அனுமதிக்கமாட்டாராம். ஸீட் பங்கீட்டில் வாசன் தரப்புக்கு,28;ப.சி.க்கு 11; தங்கபாலு வுக்கு 4;ஜெயந்தி நடராஜனுக்கு 2;ஜெயக்குமாருக்கு 2; என்ற ரீதியில் வாசனின் ‘கை’ மேலோங்கியிருந்தது பிடிக்கவில்லையாம். 8. டி.ஆர். பாலுவின் முதல் மனைவியின் மகன் ‘ராஜா’ மன்னார்குடியில் ரொம்பப் பாப்புலராம். மன்னார்குடியில் களம் இறங்க எந்த தி.மு.க.காரரும் தயாரில்லையாம். சசிகலா ஏரியாவில் போய் டெபாஸிட் இழப்பானேன் என்று பயமாம். அப்படிப்பட்ட நிலையிலும், பல்வித நலத்திட்டங்கள் கொண்டு வந்தவர் ராஜா . பட்டுக்கோட்டை, மன்னார்குடி, நீடாமங்கலம் ரயில்வே திட்டம்; உள்ளிக்கோட்டையில் துணை மின் நிலையம்; 2 பாலங்கள் ; அரசுக்கட்டடங்கள் என பல்வித சாகஸங்கள் புரிந்து,ஏரியாவை குளிர வைத்திருக்கிறாராம்.எல்லா விழாக்களுக்கும் ஆஜராம். தாராள நிதி உதவியும் செய்துள்ளாராம். தொகுதிக்காக மனுப் போட்டுள்ளாராம். மகனுக்கு ரெகமென்ட் செய்து, அவரைத் தேர்தலில் ஜெயிக்க வைத்து சொந்த ஊரில் எதிர்ப்பைக் குறைச்சுக்கலாம்னு பாத்தா, டி,ஆர், பாலுவின் 2வது மனைவி பொற்கொடி, போட்டிக்கு மனு கொடுத்திருக்கிறாராம். ராஜாவுக்கும், பொற்கொடிக்கும் எப்போதுமே ஆகாதாம்.மகனா மனைவியா என்ற போராட்டத்தில் இருக்கும் டி.ஆர்.பாலு யார் பெயரை தலைமைக்குச் சொல்லப் போகிறாரோ? 9.’வெற்றியைத் தடுக்கிறாரோ,செங்கோடையன்?’ என்றசந்தேகம் வந்துவிட்டதாம்,அ.தி.மு.க.வினருக்கு. கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவில்,இடம் பெற்றிருந்த ‘ செங்க்ஸ்.’ அந்த வேலையை சரிவர செய்யவில்லை.கொ.மு.க.வைக் கோட்டை விட்டதுக்கு, இவருடைய சாமர்த்தியமின்மைதான் காரணம். அம்மாவைப் பார்க்கவேண்டும் என்ற விஷயத்தை அம்மாவிடம் எடுத்துப் போயிருந்தா கொ.மு..க. நம்மைவிட்டுப் போயிருக்காது. சரத்குமாருக்கு 1 ஸீட்டும் , நாடார் கூடமைப்புக்கு1 ஸீட்டும் என 2 ஸீட்டுகள் கொடுக்கப்பட்டது. செங்க்ஸ், நாடார் கூட்டமைப்பைக் கூப்பிட்டுப் பேசத் தவறியதால், நாடார் கூட்டமைப்பு, அடுத்த நாளே சரத்தை கூட்டமைப்பை விட்டே நீக்கியது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆரம்ப முதல் கூடவே இருந்த, ம.தி.மு.க. வையும் கம்யூனிஸ்டு கட்சிகளையும் , கடைசிவரை கூப்பிடாமல் இழுத்தடித்து அவமானப்படுத்தியதால், கூட்டணி உடைய நேரிட்டது. கடைசியாக வந்து சேர்ந்த விஜயகாந்துக்கு கொடுத்த மரியாதையை நமக்குத் தரவில்லையே என அவர்களைப் புலம்பவிட்டது, மக்கள் மத்தியிலும் நம்மீதுள்ள நம்பகத் தன்மையை குறைக்கிற்து, என்று அ,தி.மு.க.வினர் பலத்த அதிருப்தியில் இருக்கிறார்கள்.

Advertisements