சூர்யா

சூர்யா

1. தனக்கு அரசியலில் ஆர்வம் கிடையாது, என்று சூர்யா சொல்லிவிட்டாலும் கூட சமூக சேவையை விரிவுபடுத்தும்பொருட்டு, தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளார். இன்னும் 2 மாதங்களில் பெரிய அளவில் ரசிகர் மன்றங்களைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்த இருக்கிறார்.

2. ‘பொன்னியின் செல்வன்’ ஸ்க்ரிப்ட் விவாதத்தில் இருக்கும் மணிரத்னம், அவ்வப்போது கமலிடமும் கலந்து ஆலோசித்து வருகிறார்.

 

 

நமீதா

3. பெரும்பாலும் மும்பைவாசியாகிவிட்ட நமீதா படப்பிடிப்புக்காக சென்னை வந்தால்கூட தன் நுங்கம்பாக்கம் வீட்டில் தங்குவதில்லையாம். அவருக்குப் பாதுகாப்பாக இருந்த பெரியவரும், செல்லமாக வளர்த்த நாயும் அங்கு தான் இறந்துபோனார்களாம். அங்கே வந்தால் அந்த ஞாபகம் வாட்டி வதைக்கிறதாம். அவருடைய அழகைப் பார்த்தவர்களுக்கு அவருடைய இளகிய மனமும் தெரிந்து ,நெகிழ வைக்கிறது.

 

4. கருணாநிதி ஆட்சியில், மரியாதையோடு பொன்னர்-சங்கர் படத்தை வெளியிட்டுவிடலாம் என்று பிரசாந்த்தின் அப்பா தியாகராஜன் கணக்கு-வழக்கு பார்க்காமல் செலவழித்து படப்பிடிப்பு நடத்தினார்.ஆனால், தேர்தல் நெருக்கடிகள் வந்துவிடவே , ஆட்சி மாற்றம் என்ற பேச்சு அடிபடுவதைக் கேட்டு ,திருசங்கு நிலையில் தவிக்கிறாராம்.

5. பையனூரில் கட்ட்ப்பட்ட ஸ்டூடியோ திறப்புவிழா மேடையில் கலைஞர் வசனத்தில் , ரஜினி, கமல் இருவரும் நடிக்கும் ஒரு காட்சியை பாலச்சந்தர் இயக்கத் திட்டமிட்டு இருந்தாராம். தேர்தல் தேதி அறிவித்துவிட்டதால், இருவரும் எஸ்கேப்பாம்.

சோனாக்ஷி சின்ஹா

6. சோனாக்ஷி சின்ஹாவுக்கு 23 வயதாம். இவர் செல்வராகவன் இயக்கும் படத்தில் கமலஹாசனின் மனைவியாக நடிக்கிறாராம். கமலஹாசனின் வயது 57. ‘ஆ!’ என்கிறீர்களா? கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாஸனைவிட சோனாக்ஷிக்கு 1 வயது கம்மியாம்.

7. நடிகர் ரஜினி 3 வேடங்களில் நடிக்கும் ராணா படத்தின் கதையை எழுதியிருப்பவர் ரஜினிகாந்த்!. ரஜினிக்கு 3 வேடம் என்றாலும், ஃப்ளாஷ்பேக்கில் வரும் ராஜ பரம்பரை கேரக்டர்தான் பவர்ஃபுல்லான வேடமாம். அதனால், முதல் கட்டப் படப்பிடிப்பு அரண்மனைகள் நிறைந்த ராஜஸ்தானில் தொடங்க இருக்கிறது.

simbu - anushka

8. ‘வானம்’ படத்தில் வரும் ‘எவன்டீ உன்னைப் பெத்தான்’ பாடலை சிம்புவே எழுதி யுவன் ஷங்கர் ராஜா இசையில் இருவரும் இணைந்து பாடியுள்ளார்கள். இந்தப் பட ஆல்பத்தை ஆடியோ செய்திருக்கும் மும்பை ஆடியோ கம்பெனி , சிம்புவைக் கேட்டதன் பேரில் இந்தப் பாடல் இந்தியில் மியூஸிக் ஆல்பமாகப் போகிறது. பாலிவுட் கொரியோகிராஃபர் அஹமதுகான் சிம்புவை ஆட்டியிருக்கிறார். சிம்பு இந்திக்கு படையெடுப்பதற்கான முன்னோட்டமா?

 

Advertisements