1.நடிகை சந்திரா லட்சுமணன் ‘மனசெல்லாம்’ படத்தில் நடித்தாலும் டி.வி.ஸீரியல்களில் நடிக்கவும் தயங்கவில்லை. ‘கோலங்கள்’, ‘மகள்’ முதலிய ஸீரியல்களை மிகவும் உணர்ந்து நடித்ததாகக் கூறினாராம். அப்பாதான் பாடிகாடாம். இவரைப் பார்த்து யாரும் ஒரு இஞ்ச் அதிகமாகக்கூட சிரிக்கமுடியாதாம். ‘காதல்’ ஒன்று வந்ததாம். சரிவராதுன்னு பிரிஞ்சிட்டாங்களாம். வீட்ல கல்யாணம் பாத்திட்டிருக்காங்களாம்.

2. ‘மாற்றான்’ல ஹீரோயினா நடிக்க தப்ஸிய கேட்டிருக்காங்களாம். அம்மணி தலையாட்டினா, சூர்யாவோட நடிக்கிற லக் அடிக்கும்.

3. ‘ரானா’வில் ரஜினிக்குத் தங்கையா நடிக்க மாதுரி தீட்சித் மறுத்து விட்டாராம்.

4. ஹாரிஸ் ஜெயராஜ், அடயார் மருத்துவ மனைக்கு ஆறு லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்தாராம்.

5. கௌதம் மேனனின் ‘நடுநிசி நாய்கள்’ படத்தில், பிரதான கேரக்டரான மீனாட்சி அம்மாவாக நடித்தவர், ஸ்வப்னா ஆபிரகாம். எந்த தமிழ்

நடிகையும் நடிக்க அத்தனை சுலபத்தில் ஒத்துக்கொள்ளாளாத சர்ச்சைக்குரிய கேரக்டர் அது. முழு நேர நடிகை இல்லை, இவர்.அடிப்படையில் ஒரு மியூஸிஷனாம், இவர்.

 

 

6. பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் சல்மான்கானின் முன்னால் காதலியான காத்ரீனாவும் திருமணம் செய்துகொள்ளப்போதாக பாலிவுட் செய்தி.

7. ‘சட்டப்படி குற்றம்’ படத்தில் நடித்ததற்காக சீமானுக்கு ஒரு பெரிய தொகையை செக்காகக் கொடுத்ததை வாங்க மறுத்துவிட்டாராம், சீமான்.

 

தமிழ் உணர்வை வெளிப்படுத்துகிற விதத்தில் நடித்தது எனக்கு திருப்தியைக் கொடுத்திருப்பதால்,பண்ம் வேண்டாம், என்று கூறிவிட்டாராம், சீமான்.

Advertisements