விஜய் - இலியானா

விஜய் - இலியானா

 

1. ‘நண்பன்’ படத்தில் மூணு ஹீரோவாம். ஆனால் ஹீரோயின் ஒண்ணுதான்னு குஷியாக இருந்தாராம். ஹீரோயினான இலியானா. ஆனா இன்னொரு ஹீரோயினா ‘அனுயா’ ஒப்பந்தமாயிட்டாராம். அதுவும் அது விஜய்க்கு இல்லை.. இன்னொரு ஹீரோவுக்கு…. போனது குஷி! பெரிய டைரக்டர் என்பதால் முக்கியத்துவம் பற்றி பேமுடியாமல் தவிக்கிறாராம் ஹீரோ.

2. ‘நடிகர் திலகம்’ குடும்பத்திலிருந்து பிரபுவின் மகன் நடிக்க வருகிறார். படத்தின் பெயர், ‘தெய்வ மகனா’ம். தாத்தாவின் பேரைக் காப்பாத்தும் தெய்வ மகனா? இதனால் தான் விக்ரம் படத்திற்கு பெயரை தரவில்லையோ ?

3. ‘வன யுத்தம்’ என்ற பெயரில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதை படமாகிறதாம். வீரப்பனாக கிஷோர் நடிக்கிறார். இவர் ‘வெண்ண்லா கபடிக் குழு’வில் கபடிக் குழு நடுவராக நடித்தவர். நடிகர் ராஜ்குமார் வேடத்தில் நடிகர் நாகேஸ்வர ராவை நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறதாம். நாசர், அவினாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிப்பார்களாம்.

4. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நடிகைகளின் வரிசையில் இன்னொருவர், பூர்ணா. ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ திரைப் படத்தில் நடிக்கும்போது தமிழ் பேச வராமல் அழுது விட்டாராம். இப்போது, தொடர்ந்து ‘கொடைக்கானல்’ ‘ஆடு புலி’ என்று நடித்ததில் நன்றாக தமிழ் வந்துவிட்டதாம்.

5. ‘சிங்கம்’ படத்தின் இந்திப் பதிப்பில் நடிகர் அஜய் தேவ்கனின் ஜோடியாக நடிக்கிறாம், நடிகை காஜல். தெலுங்கில் கதாநாயகி என்றதுமே பாடல்களில் மட்டும்தான் முன்னுரிமை என்றிருக்கிறது. தமிழில், நடிப்பில் நடிகைகளின் திறமையைக் காட்ட நிறைய சந்தர்ப்பம் தருகிறார்கள், என்று சிலாகிக்கிறார், காஜல்.

6. நடிகை அனுஷ்காவுக்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்கிறது, என்கிறார், நடிகை பிரியாமணி. ஆனால், அனுஷ்காவோ, தமன்னாவைத்தான் தன்னுடைய நண்பி என்று அடையாளம் காட்டுகிறார். தமன்னா யாரைக் கை காட்டப் போகிறாரோ?

samantha

7. நடிகை ஸமந்தா எட்டாம் வகுப்பு படிக்கும்போது, தன்னுடய 13வது வயதில் தன்னைவிட ப்ல மடங்கு மூத்தவனான ஒரு பையனிடம் ஏற்பட்ட ஈர்ப்பை காதல் என்று தவறாக நினைத்ததைக் கூறுகிறார். தான் நினைத்ததை வாய்விட்டுக்கூட கூற முடியாத அளவுக்கு அந்தப் பையனின் நடவடிக்கைகள், கண்ணியமாக இருந்ததாம். அது காதல் இல்லை என்று இவருக்குப் புலப்பட பல வருடங்களானதாம். பின்னாளில் அது ஒரு ஊமைக்காத்ல் என்று புரிந்து கொண்டாராம்.

tapsee

8. ‘ஸாஃப்ட் வேர் இஞ்சினியரிங்’ முடித்த டாப்ஸிக்கு தினம் ஒரே முகம், ஒரே இடம், அதே மனிதர்கள் என்று பணி புரிவது பிடிக்கவில்லையாம். தினம் தினம் , புதிது புதிதாக ஒவ்வொரு விஷயத்தையும் செய்ய வேண்டும் என்று தோன்றியதாம். அதற்கு சரியான இடம் நடிப்புத் துறைதான்; இப்போது மாடலிங் , சினிமா என்று செல்வது மகிழ்வைத் தருகிறது, என்கிறார், டாப்ஸி.

shreya

9. ‘எப்படிப்பட்ட ட்ரெஸ் போடச் சொன்னாலும் போட்டுக்கிறேன்; படு இன்டிமஸி ஸீன்னாலும் நடிப்பேன். இதெல்லாம் எனக்கு தர்ம சங்கடமாத் தெரியல. ஆனா, நான் செய்யிற தர்ம காரியங்களைப் பற்றிக் கேட்டாத்தான் சொல்ல ரொம்ப கூச்சமா இருக்கு. தர்மம் பண்றது ரகசியமா இருக்கணும். அதை ‘டாடாம்’ போட்டா சொல்வாங்க?’ என்கிறார், ஸ்ரேயா. யாரையோ வார்ர மாறித் தெரியுது.

shammu

 

10. நடிகை ஷம்மு, ‘ரசிகர்கள் ரொம்ப ஸ்மார்ட்’என்கிறார். ‘வெறும் அழகைக் காட்டி அவர்களை ஏமாற்ற நினைத்தால், நாம்தான் ஏமாறுவோம். பக்கத்துவீட்டுப் பொண்ணு மாதிரி இருந்தால், நாம்தான் கனவுக்கன்னி. ‘கள்ளாட்டம்’ ,பாலை’ இரண்டும் இந்த ஷம்மு யார் என்பதைக் காட்டி விடும் என்கிறார்,ஷம்மு.

Advertisements