ஜெயலலிதா

ஜெயலலிதா

 

இந்த சட்டசபைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணியைப் பொறுத்தவரை தே.மு.தி.க. வின் சேர்க்கையால் அ.தி.மு.க. கொஞ்சம் பலம் வாய்ந்த கூட்டணியாகக் கருதப்படுகின்றது. கடந்த தேர்தல்களில் பெற்ற ஓட்டு எண்ணிக்கையைப் பொறுத்துத்தான் இப்படி எண்ணத் தோன்றுகிறதே ஒழிய , கடந்த ஆட்சியின் எண்ணிலடங்கா நலத் திட்டங்கள்,கூட்ட்ணிக் கட்சிகளிடம் அ.தி.மு.க. நடந்துகொள்ளும் முறை, அந்தந்த மா.செ.க்களின் நிலைப்பாடு இவற்றைப் பொறுத்தும் தேர்தல் முடிவுகள் அமைய வாய்ப்புள்ளது. தற்போது, கூட்ட்ணிக் கட்சிகளின் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் அலசிப் பார்த்ததில் தொகுதி நிலைமையை மூன்றாம் கோணம் கணிக்கிறது.

1. போடிநாயக்கனூர்:- இது அ.தி.மு.க. கோட்டையாகக் கருதப்படுகிறது. எனினும், 2006ல் 1500 க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் , தி.மு. க. தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டது. 2008 பாராளுமன்றத் தேர்தலில் நிலைமை மாறி, தொகுதி அ.தி.மு.க. வசம் போனது. தற்போதைய நிலைமையும் அ.தி.மு.க.வே முண்ணனி வகிக்கிறது. கடைசி நேரத்தில் களப்பணியைப்பொறுத்து முடிவு அமையும்.

2. பண்ருட்டி:-2006ல் பா.ம.க. வென்றது. பா.ம.க. வைத் தோற்கடித்தே தீர வேண்டும் என தே.மு.தி.க. தலை கீழாக மோதிப் பார்த்ததில், 200க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே, பா.ம.க. வால் வெல்ல முடிந்தது.இம்முறை இங்கு பண்ருட்டியார் நிற்பதாலும் இது அவரது சொந்த ஊர் என்பதாலும் எதிரணி வெற்றிக்கனியைப் பறிக்க வேணுமானால் தீவிர முயற்சி மேற்கொள்ளவேண்டியிருக்கும். தற்போது, கள நிலவரம் தி.மு.க.வுக்குச் சதகமாகவே வீசுகிறது.

3. சீர்காழி:- இம்முறை இத் தொகுதி சிறுத்தைகளுக்கு ஒதுக்கபட்டிருக்கிறது. திராவிட இயக்கக் கூடாரமாகவும், வி.சி.க்களின் ஆதரவுக் களமாகவும் திகழ்வதால்,சிறுத்தைக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்தான்.

4. திருச்செங்கோடு:- இத் தொகுதி எப்போதுமே அ.தி.மு,க. வின் கோட்டை. இப்போதும், அ.தி.மு.க. அணியே முன்னணி வகிக்கிறது.

5. ஆத்தூர்(சேலம்):-இரு அணிக்குமிடையே தற்போது இழுபறி நிலவுகிறது. கடந்த முறை தே.மு.தி.க.15000 க்கு மேல் வாக்குகள் பெற்றிருந்தது குறிபிடத்தக்கது. இப்போது அ.தி.மு.க. வும் சேர்ந்திருப்பது அ.தி.மு.க. கூடணிக்குப் பலம் சேர்க்கிறது. தி.மு.க.வின் நலத் திட்டங்கள் எதிரணிக்குக் கை கொடுக்குமா என்பதை களப்பணிதான் தீர்மானிக்கும்.

6. பர்கூர்:- ஜெ. வுக்கு பெரும் வெற்றி, படு தோல்வி இரண்டையும் கொடுத்த தொகுதி இது. இன்றைய நிலை இழுபறியாக உள்ளது.

7. சோளிங்கர்:-கடந்த முறை காங்கிரஸ் வென்றபோது, 13000 வாக்குகள் பெற்ற தே.மு.தி.க., அ.தி.மு.க. வுடன் இருப்பதால், தி.மு.க.தொண்டர்கள் , காங்கிரஸுக்காக கடுமையாக உழைத்தால் மட்டுமே, தி.மு.க. கூட்டணி களம் காண முடியும்.

8. நாகர் கோயில்:-பா.ஜ.க.வின் பொன்.ராதாகிருஷ்ணனும், தி.மு.க.வின் மகேஷ் என்ற இந்து நாடாரும், அ.தி.மு.க.வின் இந்து நாடாரும் நிற்கிறாகள். மும்முனைப் போட்டியானாலும், தி.மு.க.வே வெற்றி பெறும் வாய்ப்புகளே அதிகம்.

9. பாலக்கோடு: அ.தி.மு.க. வசமுள்ள தொகுதி இது. பா.ம.க.வுக்கு எதிராக தே.மு.தி.க.வும் வளர்ச்சி பெற்றுள்ளது.

Advertisements