அமைச்சர் துரைமுருகன்

அமைச்சர் துரைமுருகன்

 

1. அரியலூர்:-

2006ல் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி இது. 2009ல் 5000 மாக இருந்த ஓட்டு வித்தியாசம் 21000 மாக உயர்ந்தது. ஆனால் காங்கிரஸின் ஓட்டு 8./. தான். தி.மு.க. ஓட்டு 44./.. இந்த தேர்தலிலும் காங்கிரஸுக்கு தி.மு.க. வின் ஒத்துழைப்பு முழு அளவில் இருக்குமானால், காங்கிரஸ் ஜெயிக்கக்கூடிய தொகுதிதான் இது.
2.காட்டுமன்னார்கோயில்:-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எழுத்தாளரும், சிந்தனையாளருமான ரவிகுமார் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இப்போது வி.சி.கட்சி , ஒரு ‘கட்டப் பஞ்சாயத்துக் கட்சி’ என்று பெயர் எடுத்திருப்பதால், முக்கிய சாதிகளைச் சேர்ந்த பலரும், கட்டப் பஞ்சாயத்துக்கு எதிராக முடிவெடுத்திருப்பதால் , ரவிகுமாருக்கு இது சவால்தான்.
3. ஆரணி:-
2006 லும் ;2009லும் அதிக வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. ஜெயித்துள்ளது. தே.மு.தி.க. , அ.தி.மு.க.வுக்கு தெம்பளித்தாலும் ,கலைஞரின் நல்வாழ்வுத் திட்டங்கள், தி.மு.க.வுக்கு அடித்தளம் அமைத்திருக்கிறது.
4. காட்பாடி:-
அமைச்சர் துரை முருகனின்,வி.ஐ.பி. தொகுதி இது. சமீப காலமாக சரிந்துவிட்ட செல்வாக்கை தூக்கி நிறுத்திக் கொள்ள வேண்டியது அவர் பொறுப்பு. மற்றபடி, இது தி.மு.க. கோட்டைதான்.
5. ஒரத்த நாடு:-
அ.தி.மு.க. வின் கோட்டை இது. குறைந்து கொண்டே வந்த ஓட்டு வித்தியாசத்தைக் கூட்டணி சரிப்படுத்திவிடும். அ.தி.மு.க.வே வெல்லும்.

Advertisements