ரஜினி நண்பர்களுடன்

ரஜினி நண்பர்களுடன்

 

‘ராணா’ பட வேலைகளில் மூழ்குவதற்கு முன் ரஜினிகாந்த் , தன் பால்யகால நண்பர்களுடன் பெங்களூரில் ஒரு ஜாலி ட்ரிப் அடித்தார்.  கையேந்திபவன் சாப்பாடு, ப்ளாட்பார அரட்டை, மாறுவேஷ நகர்வலம் என்று ட்ரிப் முழுக்கவே செம லூட்டியாம். சின்ன வயசில் ரௌன்ட் அடிச்ச ஹனுமந்த நகர், ஜெய் நகர், குட்டள்ளி பகுதிகளில் ஒரு நாள் முழுக்க சுத்தினாராம் ரஜினி, ராஜ்பகதூர் உள்ளிட்ட தன் பால்யகால நண்பர்களுடன். பழைய வேட்டி, காட்டன் சட்டை, தலையில் துண்டு அணிந்துகொண்டாராம். ‘நான்தான் ரஜனி’ன்னு அவரே சொன்னாலும் நம்ப முடியாதாம். அங்கே இருக்கிற சுப்ரமணி கோயில் ,ரவி கங்காதர், ராகவேந்திரர் கோயில் பூசாரிகளுக்கு ரஜினியை சின்ன வயசிலிருந்தே நல்லா தெரியும். ஆனா, அவுங்களாலயும் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லையாம். தினம் 2 வேளை தியானம், மதியானம் குட்டித் தூக்கம், சாயங்காலம் ரோட்டோரக் கடையில், வடை, போண்டா, பஜ்ஜி வாங்கிட்டு, ப்ளாட்பாரத்திலே உட்கர்ந்து, நண்பர்களோட பழய அதைகளைப் பேசி, அரட்டையாம். ரஜினி பெங்களூரு வந்ததுமே, கைமா, போட்டி, தலைக்கறி வறுவல்னு ரெடி பண்ணிடுவோம். நான்வெஜ்ஜோடுதான் லஞ்ச், டின்னர் சாப்பிடுவாராம். டின்னர் சாப்பிட்டபிறகு , தமிழ்நாட்டில் உள்ள ஃப்ரென்ஸோடு அரட்டை அடித்து, சிரித்து சிரித்துப் பேசிவிட்டு, அப்படியே வெறும் தரையில் படுத்து தூங்கி விடுவாராம். அப்பல்லாம், ஒரு நாளைக்கு ‘555’ சிகரெட் நாற்பது பிடிப்பாராம். இப்ப ஒரு பாக்கெட்கூடக் கிடையாதாம். இமயமலைக்குப் போகும்போது நான்வெஜ், சிகரெட் எதுவும் கிடையாதாம். எல்லோரும் எதிர்பார்க்கும் முக்கியமான கேள்வியான ”நான் அரசியலுக்குப் போவேனா மாட்டேனா” என்ற கேள்வியை இவரே நண்பர்களிடம் கேட்டு ,நண்பர்கள் இவரையே மடக்க, சிரிச்சுகிட்டே மழுப்பி, ”எனக்கு எதுவும் தெரியாது.எல்லாம் கடவுள் செயல்” என்றாராம். ரஜினி சார்…! நீங்களே கேள்வி எழுப்பி ,பதில் சொல்றதைப் பார்த்தால், ம்…..ம்….என்னவோ திட்டம் இருக்கு…!

Advertisements