கலைஞர் தேர்தல் அறிக்கை

கலைஞர் தேர்தல் அறிக்கை

 

கலைஞர் தேர்தல் அறிக்கையப் படிச்சுட்டு நம்ம தலைவர் ஒரு படி மேல போயிட்டாரு…

ஆமா… மிக்சி கிரைண்டரோட சமைச்சுக் கொடுக்குற ஹஸ்பெண்டும் இலவசமா தர்ரோம்னு சொல்லிட்டாரே!

———————-

அம்மாவ சந்திக்கப் போன அந்த அதிமுக பிரமுகர ஏன் எல்லாரும் திட்டறாங்க?

உங்க தொகுதி இதுதான் போய் நில்லுங்கன்னு அம்மா சொன்னதும்… “உங்க முன்னாடி தான் உக்காராம நிக்கணும்.. அங்க போயாவது உக்காந்துக்கறேனே” ன்னாராம்.

————————————–

ஏன் கனிமொழி அந்த கட்சிக்காரர அப்படி முறைக்கிறாங்க…

பின்ன… நம்ம எல்லா கட்சிக்காரங்களும் தமிழ்நாட்டு தொகுதியில நிக்கும்போது ராசா மட்டும் ஏன் திஹார்ல நிக்குறாருன்னு கேட்டுட்டாராம்!

———————————–

கனிமொழி - ராசா

கனிமொழி - ராசா

 

ஏன் கனிமொழி டல்லா இருக்காங்க?

பின்ன, பிரச்சாரத்துக்கு போவீங்களான்னு கேக்குறவங்கள விட ஜெயிலுக்கு போறீங்களான்னு கேக்குறவங்கதான் அதிகமாம்!

 

———————————-

 

ஒவ்வொரு தொகுதியிலயும் இத்தன வாக்கு வித்தியாசத்துல ஜெயிப்போம்னு அழகிரி எப்படி தில்லா சொல்லுறாரு……

எத்தன பேருக்கு கொடுத்தாய்ங்கன்னு அவருக்குத் தான தெரியும் ……….

 

—————————————

 

கலைஞர் தேர்தல் அறிக்கைல மிக்சி, கிரைண்டர் எல்லாம் ஃப்ரீன்னு போட்டிருக்காராமே…வருமா?

மிக்ஸி கிரைண்டர் வர்ரது அப்புறம் இருக்கட்டும்… முதல்ல கலைஞர் வருவாரா?

 

—————————-

 

ஜெயலலிதாவும் கலைஞர பாத்து ஃப்ரீ கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்களே…….அவங்க சொன்னதையே தான இவங்களும் சொல்றாங்க…….

பதவிக்கு வந்தா அவங்க 2 G ல செஞ்சதயே தான இவங்க 4 G ல செய்ய போறாங்க

 

————————————————

 

 

 

 

Advertisements