விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதி சிறப்பு கண்ணோட்டம்:-

 

விஜய்காந்த் ரிஷிவந்தியம்

விஜய்காந்த் ரிஷிவந்தியம்

விஜயகாந்த்தின் மாமனார் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில், பணிபுரிந்ததால் , ரிஷிவந்தியத்துக்கும், விஜயகாந்த் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மேலும், 2009 பாராளுமன்றத் தேர்தலில் , விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு 24,413(18./.) ஓட்டுகள் வாங்கினார். தி.மு.க. வெற்றி பெற்றிருந்த போதும், அந்தத் தேர்தலில் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க. வும் தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க. வும் சேர்ந்து, 45./. ஓட்டுகள் வாங்கியிருந்தனர். இது தி.மு.க.வினர் வாங்கியிருந்த ஓட்டுகளைவிட 2./. அதிகம். இந்தத் தொகுதியில் தே.மு.தி.க வுக்கும், அ.தி.மு.க. வுக்கும் அதிக செல்வாக்கு உள்ளதாலும் ரிஷிவந்தியம் தொகுதிக்கும் விஜயகாந்த் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாலும் இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்ததாகத் தெரிகிறது. ரிஷிவந்தியம் மிக அதிகமான ஊராட்சிகளைக் கொண்ட தொகுதியாக உள்ளது. தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் மிக அதிகம். மருத்துவ வசதி சரியாக கிடையாது.ரிஷிவந்தியம் ஊராட்சியின் தலைமையிடமான பகண்டையில் தற்போதுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். ஏழை மாணவர்களுக்காக அரசு கல்லூரிகள், தொழிற்கல்வி நிறுவனங்கள் அமைக்கவேண்டும். ஆற்கவாடி, அரும்பராம்பட்டு இடையே முகுந்த நதியில் பாலம் கட்ட வேண்டும். மணலூர்பேட்டைசாலையில் தென்பெண்ணை ஆற்றின் உறுக்கே உள்ள தரைப் பாலத்தை உயர்மட்டப் பாலமாக அமைத்து, கள்ளக்குறிச்சியிலிருந்து மணலூர்பேட்டை வழியாக திருவண்ணாமலைக்கு பஸ்கள் இயங்கவேண்டும். பகண்டை கூட் ரோட்டில் வேளாண்மை அலுவலகமும் பத்திரப் அதிவு அலுவலகமும் தொடங்க வேண்டும். சிறப்பு மிக்க ஆதி திருவரங்கம் , அர்தநாரீஸ்வரர் கோவில்களை சுற்றுலாத் துறையின் கீழ் இணைக்க வேண்டும். தொகுதி மக்களின் மன நிலை அ.தி.மு.க. வுக்கு எதிர்ப்பாகத்தான் இருக்கிறது. முன்னதாகக் கூறப்பட்ட ஓட்டுக் கணக்கு ,அ.தி.மு.க.வுடன் சேர்ந்த பா.ம.க.வின் ஓட்டு. அது அப்படியே வரும்னு சொல்ல முடியாது. தே.மு.தி.க.வினரே அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்தது பிடிக்காமல்தான் உள்ளனர்.கடைசி நேரத்தில் அ.தி.மு.க. தலைமை தலைவரைப் படுத்திய பாடு அவர்களின் கோபத்தைத் தூண்டிவிட்டாலும், தலைவரைத் தோற்க விட மாட்டார்கள் என்று நம்பலாம்..
*********

Advertisements