சுப்ரமணிய சாமி

சுப்ரமணிய சாமி

தமிழகத்தில், தேர்தலுக்குப் பின் முதலமைச்சர் நாற்காலியில் அமரப் போவது, காங்கிரஸ்..!ஆமாம்; முதலமைச்சராகப் போவது, கருணாநிதியோ ஜெயலலிதாவோ இல்லை! கண்டிப்பாக தேர்தல் முடிந்ததும், புதிய கூட்டணி ஏற்படப் போகிறது. எம்.எல்.ஏ. க்கள் மியூசிகல் சேர் விளையாட்டு, குதிரை பேரங்கள் நடக்கும். முடிவில் கருணாநிதியோ … ஜெயலலிதாவோ முதல்வர் பதவியில் அமர மாட்டார்கள். அமரப் போவது யார் என்கிறீர்களா? ….காங்கிரஸ்! இப்படியெல்லாம் சொல்வது யார் தெரியுமா? நம்ம அரசியல் திகில் மன்னர் சுப்ரமண்ய சுவாமிதான். அவர் சொல்வதை நம்பத்தான் வேண்டுமாம். அப்படிப்பட்ட திட்டத்தோடுதான் சசிகலா காய் நகர்த்துகிறாராம். சுவாமி மேலும் சொல்வதைக் கேளுங்கள். தமிழக அரசியலில் என்ன நடக்கப் போகிறது என்பது முடிவானதே லண்டனில்தானாம். கடந்த சில நாட்களாக டெல்லியைச் சேர்ந்த வி.வி.ஐ.பி. ஒருவர் லண்டனுக்கு ஆஸ்துமா சிகிச்சைக்காகப் போனார் . அங்கே புலிகள் ஆதரவாளர் ஒருவரை அவருக்கு ஏற்கெனவே தெரியும். அந்தத் தொடர்பு மூலம் சென்னையில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர் மூலம், தேர்தலுக்குப் பிற்கு நடக்கப் போகும் எதிர்கால அரசியல் பேச்சுவார்த்தை சுமுகமாகப் பேசி முடிக்கப் பட்டுவிட்டது, என்று உறுதியுடன் சொல்கிறார் சுவாமி. ஜெயலலிதாவுக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியைக் கொடுத்து டெல்லி அரசியலுக்கு அனுப்பி விடுவர்கள். இங்கே சசிகலாவின் திரை மறைவு அரசியல் தொடரும்.அதன் மூலம் வரும் பலாபலன்களை அவர் அனுபவிப்பார். அவரது டம்மிகள் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள், என்கிறார், சுவாமி. நிழ்வுகளைப் பார்த்தால் நம்பத்தான் வேண்டும் போலிருக்கிறது. வைகோ இருந்தால், காங்கிரஸுக்குச் சரிப்படாது, என்றுதான் கழட்டி விட்டார்களோ?
*******

Advertisements