ஸ்டாலின்- தயாநிதி-அழகிரி

ஸ்டாலின்- தயாநிதி-அழகிரி

 

1. கவுண்டம்பாளயம்:-
இப்போதும், 2009ன் நிலைதான்.இங்கு அ.தி.மு.க. வே முன்னிலை.
2. திருவாடானை:-
காங்கிரஸுக்கு செல்வாக்குள்ள தொகுதியானாலும், விலைவாசி உயர்வு மக்களை மிகவும் பாதித்திருப்பதால், அமைச்சர் சுப. தங்கவேலன் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள, தே.மு.தி.க. முஜிபுர் ரஹ்மானுடன் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.
3. நாமக்கல்:-
அ.தி.மு.க.வின் பாஸ்கரனும் , கொ.மு.க.வின் தேவராஜனும் மோதிக் கொள்கின்றனர். பாஸ்கரனை எதிர்கொள்ளும் அளவுக்கு தேவராஜன் பலமான வேட்பாளர் அல்ல. அ.தி.மு.க.வே முன்னிலை.
4. திண்டுக்கல்:-
மார்க்ஸிஸ்ட் பாலபாரதியை எதிர்த்து,பா.ம.க. போட்டியிடுகின்றது. கவனிப்பாரற்றுக் கிடந்த தொகுதி, என்ற அதிருப்தி நிலவுவதால், அ.தி.மு.க. கூடணியே முன்னிலை.
5. வேப்பனஹள்ளி:-
2009ல் தி.மு.க. கூட்டணி , அ.தி.மு.க. கூட்டணியைவிட 18000 வாக்குகள் அதிகம் பெற்றது. போன முறை எதிரணியில் இருந்த பா.ம.க., இப்போது , தி.மு.க.வுடன்.. அ.தி.மு.க. வுடன் கூட்டு சேந்துள்ள தே.மு.தி.க.வை, எதிர்கொள்ள வேண்டும்.
6. ஸ்ரீபெரும்புதூர்:-
2009ல் தி.மு.க. வுக்கு குறைந்த பட்ச ஓட்டுகளே கிடைத்தன. ஆனால், அ.தி.மு.க.ஆதரவு அலை தற்போது எங்கும் தென்படவில்லை. இன்றைய நிலையில் காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ. யசோதா அ.தி.மு.க. பெருமாளை முந்திக்கொண்டிருக்கிறார்.
7. தியாகராய நகர்:-
2006ல் தி.மு.க. வின் கலை ராஜனை 17000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்த ஜெ.அன்பழகனை இம்முறை காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர்.செல்வகுமார் எதிர்கொள்கிறார். உயர்மட்ட,மற்றும் பணக்கார வர்கத்தினரிடையே தி.மு.க. எதிர்ப்புணர்வு காணப்படுகிறது. டாக்டர் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.
8. மண்ணச்சநல்லூர்:-
தி.மு.க.வின் அமைச்சர் செல்வராஜ் , அ.தி.மு.க.வின் பூனாட்சியை ஓவர்டேக் செய்கிறார்.
9. திருப்பரங்குன்றம்:-
தே.மு.தி.க. காங்கிரஸை முந்துகிறது.
10. பல்லாவரம்:-
தி.மு.க.விற்கு பாதுகாப்பான தொகுதி, இது. பெண்களிடமும்கூட தி.மு.க. ஆதரவு அலை வீசுகிறது.
11. கும்பகோணம்:-
கட்சிக்கு அப்பால் எல்லா சமூகத்தினரின் நல்லெண்ணத்தையும் கட்சிக்கு சம்பாதித்து வைத்தவர் கோ.சி.மணி. அவர் இம்முறை போட்டியிடவில்லை. தி.மு.க.வில் சொந்த செல்வாக்கு கொண்ட க. அன்பழகன் அ.தி.மு.க.வின் ராமநாதனை எதிர்கொள்கிறார். தி.மு.க.வே முன்னிலை.
12. திருச்செந்தூர்:-
அ.தி.மு.க.விலிருந்து வந்த அனிதா ராதாகிருஷ்ணன் நிற்கிறார். அவர் ஏற்கெனவே வென்ற தொகுதி இது. இவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று ஜெ.விடமிருந்து கட்டளையாம். அது மட்டுமில்லாமல், தி.மு.க., மா.செ.வுடனும் பனிப்போராம். கடும் போட்டி நிலவுகிறது.
13. வேளச்சேரி:-
புதிய தொகுதியான இது, 2009ல் ,அ.தி.மு.கவுக்கு வெற்றி தந்தது. தி.மு.க. தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே பா.ம.க. வெல்ல முடியும்.
14.வேதாரண்யம்:-
தி.மு.க. கடுமையாக உழைத்தால் மட்டுமே பா.ம.க. வெல்ல முடியும். இன்னமும் தி.மு.க. தொண்டர்கள் தயாராகவில்லை.

Advertisements