வைகோ

வைகோ

 

1.முதுகுளத்தூர்:-
தி.மு.க.;அ.தி.மு.க. இங்கு நேரடிப் போட்டி. பெண்கள் ஆதரவு தி.மு.க.வுக்கு அமோகமாக இருப்பதால், தி.மு.க.முன்னிலை.

2. திருவள்ளூர்:-
இங்கு தி.மு.க.;அ.தி.மு.க.இரண்டும் நேரடிப் போட்டி. 2006;2009லும் தி.மு.க.வென்றிருந்தாலும் வாக்கு வித்தியாசம் குறைந்துகொண்டே வந்தது. தே.மு.தி.க. வின் வரவு ,அ.தி.மு.க. வுக்கு கூடுதல் பலம். போட்டி கடுமையாக இருக்கும்.

3. ஒட்டப்பிடாரம்:-
புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் செல்வாக்குள்ள தொகுதி இது. அ.தி,மு,க. வுக்கு கூடுதல் பலம் தருகிறது. கடுமையான போட்டி நிலவும்.

4. ராசிபுரம்:-

விலைவாசி உயர்வு ,இலவசங்கள் மீது சலிப்பு, தொழில் வளர்ச்சியின்மை போன்ற பிரச்சினைகள் அ.தி.மு.க.வுக்கு சாதக நிலை.

5. திருச்சுழி:-
தி.மு.க.வின் தங்கம் தென்னரசுவின் நட்சத்திரத் தொகுதி இது. தி.மு.க. முன்னிலை.

6. உதகமண்டலம்:-
அ.தி.மு.க.வும் ,காங்கிரஸும் மோதுகின்றன. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா ஆற்றிய பணி போற்றப்படுகிறது. தலித் ஓட்டுகள் தி.மு.க. வுக்கே விழுகின்றன. தி.மு.க. கூட்டணி முன்னிலை.

7. காஞ்சிபுரம்:-
அ.தி.மு.க.வும் பா.ம.க. வும் மோதுகின்றன. இடதுசாரிகளின் ஓட்டுகள் அ..தி.மு.க.வுக்கு பலம் சேர்க்கிறது. விலைவாசி, லஞ்ச ஊழல், சட்டம் ஒழுங்கு பிரச்சினை போன்றவை நிலவுவதால், அ.தி.மு.க.வே முன்னிலை.

8. மயிலாப்பூர்:-
அ.தி.மு.க. வும் காங்கிரஸும் மோதுகின்றன. ஸ்பெக்டரமைவிட விலைவாசிதான் மக்களின் முதற் கவலை. தி.மு.க. கவுன்ஸிலர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை, என்பது நடுத்தர வர்கத்தின் புலம்பலாக இருக்கிறது. அதே சமயம் ஜெயலலிதா மீதும் நம்பிக்கை இல்லை. களப்பணி சூடு பிடிக்க வேண்டும்.

9. அரவக்குறிச்சி:-
தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மோதுகின்றன. தி.மு.க.வின் கே.சி.பழனிச்சாமி ஒரு வருடமாகவே தொகுதியைத் தயார் செய்து வைத்துள்ளார். ம.தி.மு.க.வின் மறைமுக ஆதரவும், கலைஞரின் தேர்தல் அறிக்கையும், தி.மு.க.வெல்ல உதவும்.

10. சிவகாசி:-
ம.தி.மு.க. வென்ற தொகுதி இது. தே.மு.தி.க. 20,000 ஓட்டுகள் பெற்றுள்ளது. அ.தி.மு.க.வின் ராஜேந்திர பாலாஜிக்கும், தி.மு.க.வின் வனராஜுக்கும் தொகுதியில் நல்ல பெயர் இல்லை. சாதி அடிப்படையில் வனராஜ் பலமாக இருந்தாலும், நாடார்கள் எதிர்ப்பு நிலவுகிறது. கடும் போட்டி இருக்கு.

Advertisements