சந்தையில இப்ப தக்காளி ரொம்ப மலிவாயிருச்சுங்க.வாங்கிட்டு போய் தொக்கு போட்டீங்கன்னா இட்லி, தோசை ,சப்பாத்தி,தயிர்சாதம்னு எல்லாத்துக்கும் தோதா ,சூப்பரா இருக்குங்க.அதோட ரெசிபி இதோ…

தேவையான பொருட்கள்:

தக்காளி–1 கிலோ

மிளகாய் தூள்-100கிராம்[வறுத்து பொடி செய்தது]

வெந்தய தூள்-1tbsp[வறுத்து பொடி செய்தது]

மஞ்சள் தூள்-1tbsp

நல்லெண்ணெய்-300மிலி

உப்பு-தேவையான அளவு

தாளிக்க சிறிதளவு கடுகு,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை.

செய்முறை:

*இருப்பு சட்டியில் எண்ணை ஊற்றி,காய்ந்ததும் கடுகு,பெருங்காயத்தூள் போட்டு தாளித்து,நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.

*நன்கு வதக்கியபின் மஞ்சள் தூள்,மிளகாய்தூள்,வெந்தயதூள் போட்டு நன்றாக வதக்கவும்.

*தேவையான அளவு உப்பு போட்டு,எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கி இறக்கினால் தூக்கலான மணத்துடன்,சுவையான தக்காளி தொக்கு ரெடி.

diet-b

Advertisements